இன்றைய ராசிபலன் – 21 ஏப்ரல் 2025

இன்றைய ராசிபலன் – 21 ஏப்ரல் 2025

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று காலையிலிருந்து சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். இல்லை என்றால் எல்லா விஷயத்திலும் தாமதம் உண்டாகி டென்ஷன் வந்துவிடும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கணவன் மனைவிக்குள் எந்த ஒரு ஒளிவு மறைவும் இருக்க வேண்டாம். பிரச்சனைகளில் பொய் சொல்லி தப்பிக்க வேண்டாம். நேர்மையாக இருந்தால் நன்மை நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். பண பிரச்சனை தீரும். கடனை திருப்பிக் கொடுத்து நிம்மதி அடையக் கூடிய நாளாகவும் இந்த நாள் இருக்கும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வேலையில் ஆர்வம் தேவை. கவனக்குறைவாக எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது. இல்லை என்றால் அந்த வேலையை செய்யாமல் இருப்பதே நல்லது. அரைகுறை மனதோடு எந்த வேலையும் கையில் எடுக்காதீங்க. பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். வழக்கத்தை விட எல்லா வேலையிலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. பணப்பரிவர்த்தனை இன்ற செய்யாமல் இருப்பது நன்று. யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். இறை வழிபாடு செய்வது நல்லது.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். உங்களிடம் ஒரு பொறுப்பை கொடுத்தால் அதை சரியாக செய்து முடித்து விட்டு தான் நிம்மதியாக மூச்சு கூட விடுவீர்கள். அந்த அளவுக்கு இன்று கடமையில் கட்டுப்பாடும் கண்ணியமும் இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை தரும். நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள கூடிய வாய்ப்புகள் இருக்கும். கொஞ்சம் உடல் அசதி உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெயிலில் நிறைய தண்ணீர் குடிக்கவும். உடலுக்கு சூடு தரும் பொருட்களை சாப்பிட வேண்டாம்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனை செய்யலாம். சேமிப்புகளை உயர்த்தலாம். முதலீடுகளை அதிகப்படுத்தலாம். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளுடன் நல்ல பெயர் வாங்குவீர்கள். நேரம் காலம் பார்க்காமல் உழைத்து லாபத்தை சம்பாதிப்பீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். காலையில் கொஞ்சம் பிரச்சனைகள் உங்களைப் பின் தொடர்ந்தாலும், சாமர்த்தியமாக பிரச்சனைகளை சமாளித்து மாலை நேரத்திற்குள் உங்களுடைய வேலைகளை எல்லாம் முடித்து விடுவீர்கள். மாலை நேரம் இனிமையாக செல்லும். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு தேவையற்ற மன பயம் இருக்கும். ஒரு முடிவை நம்பிக்கையோடு எடுக்கும் அளவுக்கு புத்தி வேலை செய்யாது. புதிய முயற்சிகளை இன்று மேற்கொள்ள வேண்டாம். அடுத்தவர்களை நம்பி எந்த வேலையையும் கால் வைக்க வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் மட்டும் போதும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு, எதிர்பாராத பரிசு கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. அதிர்ஷ்டம் ஆச்சரியம் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. நீண்ட நாள் கனவு நிறைவேறும். மனதிற்கு பிடித்த வாழ்க்கையை தேர்ந்தெடுக்க ஒரு வாய்ப்பு வரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று குடும்ப விஷயத்தில் கவனம் தேவை. இல்லாத சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளது. வாக்குவாதம் செய்ய வேண்டும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து நடந்தால் நன்மை உண்டு. வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். வீட்டு டென்ஷனை வேலையில் கொண்டு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். வேலையில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இருந்தாலும் கடமைகளை முடிக்க அயராது உழைப்பீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top