– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்க கூடிய நாளாக இருக்கும். நீங்கள் செய்த வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். பெரிய அளவில் வரக்கூடிய பிரச்சனையை தடுத்து நிறுத்தும் அளவுக்கு, உங்களுடைய திறமை வெளிப்படும். எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்பாராத பணம் கையை வந்து சேரும். மனநிறைவு கிடைக்கும் குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிந்தனைகள் இன்றைய நாள் வேலையை கெடுக்கப் போகிறது. உஷாராக இருந்து கொள்ளுங்கள். கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். நண்பர்களுடன் அரட்டை, கேளிக்கை என்று நேரத்தை வீணடித்து விட்டு இந்த நாள் இறுதியில் அழுது புலம்பினாலும், கலந்து சென்ற நேரம் மீண்டும் திரும்பி வரவே வராது ஜாக்கிரதை.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகாரிக்கும். அன்றாட வேலையை அன்றாடம் முடிக்க வேண்டும் என்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சுற்றி இருப்பவர்கள் இடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். குடும்பத்தில் பெண்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் நிதானம் தேவை.
கடகம்
கடக ராசிக்காரர்கள் வாயிலிருந்து பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற வார்த்தை இன்று வரக்கூடாது. இந்த நொடி இந்த நிமிடம் என்ன வேலையை உங்கள் கையில் கொடுத்திருக்கிறார்களோ, அந்த கடமையை சரிவர முடித்து விட்டு அடுத்த வேலைக்கு செல்ல வேண்டும். நாளைக்கான வேலை அடுத்த மாதத்திற்கான வேலை என்று சிந்தனையை அலைபாய விடக்கூடாது. இன்று இந்த நிமிடம் மட்டும்தான் உங்களுக்கு முக்கியம்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். நினைத்த வேலைகளை எல்லாம் சரியான நேரத்தில் முடிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளுடன் சேர்ந்து ஒத்துழைத்து உங்களுடைய கடமைகளை முடித்து, நல்ல பெயர் வாங்குவீர்கள். அனுசரணை உங்களிடம் இருக்கும். முன்கோபம் இருக்காது. பக்குவமான ஒரு குணம் இன்று உங்களிடம் இருந்து வெளிப்படும். அதை பார்த்து நீங்களே வியப்படையலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையில்லாத கோபம் வரும். இதனால் நிறைய நல்லதை இழக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். நல்ல நண்பர்கள், நல்ல உறவுகள் கையில் இருக்கும் பணம் இப்படி எல்லாவற்றையும் இழக்க முன் கோபத்தை முதலீடாக போடாதீங்க. பொறுமையாக இருக்க வேண்டும். பெரியவர்களின் ஆலோசனையை கேட்க வேண்டும். வாழ்க்கை துணையோடு வாக்குவாதம் செய்யக்கூடாது. கவனத்தோடு இருக்க வேண்டிய நாள் இது.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி இருக்கும். தேவையற்ற டென்ஷன் குறையும். நீண்ட நாட்களாக செய்யாமல் இருந்து வந்த வேலையை இன்று செய்து மன நிறைவை அடைவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டு. பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்திலும் வேலையிலும் நன்மையை நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படும். எப்பாடுபட்டாவது இந்த வேலையை முடிக்க வேண்டும், எப்பாடுபட்டாவது இந்த வேலைக்கு போக வேண்டும், எப்பாடுபட்டாவது வியாபாரத்தில் முன்னுக்கு வரவேண்டும் என்று கடினமாக உழைப்பீர்கள். கவலைப்படாதீங்க உங்களுக்கான நல்லது காத்துக் கொண்டிருக்கிறது, சீக்கிரம் சென்று அந்த நல்லதை உங்கள் கையில் எடுத்துக் கொள்ளலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தனம் தானியம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் செல்லும் பாதை நேர்வழியில் இருக்கும். கையில் பத்து ரூபாய் சம்பாதித்தாலும், அதில் நிம்மதி அடைவீர்கள். தேவைக்கு ஏற்ப நிதி நிலைமை இருக்கும். வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான வாழ்க்கை. விடுமுறை நாட்கள் எல்லாம் முடிந்து இப்போதுதான் வேலைக்கு வந்து இருப்பீங்க. இருந்தாலும், உங்களுக்கு வேலை சுமை அளவோடு இருக்கும். நல்ல சாப்பாடு நல்ல ஓய்வு கூடவே உடன் இருப்பவர்களின் அனுசரணையான பேச்சு, என்று இன்றைய நாள் கொஞ்சம் ராஜ உபசாரம் தான். அனுபவித்துக் கொள்ளுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் இருக்கும். தேவையற்ற பேச்சின் மூலம் உங்களுடைய நிம்மதியை நீங்களே கெடுத்துக் கொள்வீர்கள். அவசர புத்தி, அவசரப்பட்டு ஏதாவது ஒரு தவறை செய்துவிடும். பிறகு சிந்திக்கும் போது செய்தது தவறு என்று புரியும். ஆனால் தவறு தவறு தானே, போன மன நிம்மதி போனது தானே. நிதானதோடு இருங்கள் நிதானத்தோடு பேசுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று புகழ்ச்சி இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சிக்கலான சூழ்நிலையை கூட சுலபமாக சமாளித்து விடுவீர்கள். திறமை வெளிப்படும். நீண்ட நாள் துயரம் நீங்கும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். நிதிநிலைமை மட்டும் கொஞ்சம் மோசமாக இருக்கும். அடுத்தவர்களிடம் கை நீட்ட வேண்டிய நிலைமையை கடவுள் கொடுத்திருப்பான். கவலைப்படாதீங்க அதற்கும் கூடிய சீக்கிரம் நல்ல வழி பிறந்துவிடும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam