– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி தரும் நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நிதி நிலைமை சீராகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். தேவையற்ற பிரச்சனைகள் தானாக உங்களை விட்டு விலகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று அன்றாட வேலையில் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அனாவசியமாக அடுத்தவர்கள் வம்பு தும்புக்கு போக வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் மட்டும் போதும். வீட்டில் பெரியவர்கள் பேச்சை கேட்டு நடக்கவும். நீங்களாகவே எந்த புது முடிவையும் எடுக்க வேண்டாம்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனமாக இருந்தால் சில பல பிரச்சனைகள் வரும். அன்றாட வேலையை அந்தந்த நேரத்திற்கு தகுந்தது போல முடித்து விடுங்கள். இல்லை என்றால் இந்த நாள் இறுதியில் பிரச்சனைகள் பெருசாக இருக்கும். தூக்கம் கெடும் அளவுக்கு வேலை பளு அதிகமாகிவிடும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். வேலை பளு குறையும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிறைவு இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். லாபம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்காலத்திற்கு தேவையான நல்ல விஷயங்களையும் இன்று துவங்கலாம்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக பிரச்சனையாக இருந்த நிதி நிலைமை சீராகும். வரா கடன் வசூல் ஆகும். தொழிலை விரிவு படுத்த முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும். உற்சாகம் பிறக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். எந்த வேலையிலும் முழுசாக ஆர்வம் காட்ட முடியாது. தலைபாரம் உடல் சோர்வு ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். நேரத்திற்கு சாப்பிடுங்கள். மூன்றாவது நபர் சொல் பேச்சு கேட்க வேண்டாம். வீட்டில் இருக்கும் உறவுகளோடு சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள். விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் உண்டு. மன நிறைவோடு இருப்பீர்கள். பெற்றவர்கள் தங்களுடைய கடமையை நிறைவேற்றிய மன திருப்தியை அடைவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகள் சரியாக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் பயம் இருக்கும். தேவையற்ற விஷயத்தை மனதில் போட்டு குழப்பிக் கொள்வீர்கள். ஆனால் பிரச்சனைகள் என்று பார்த்தால் பெருசாக எதுவும் இல்லை. அடுத்தவர்கள் பற்றிய சிந்தனையை மனதிற்குள் கொண்டு வர வேண்டாம். உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். அடுத்தவர்களோடு உங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய முதலீட்டுகளை செய்யலாம். வங்கி கடன் பெறலாம். புதிய மனிதர்களின் நட்பு உங்களுக்கு நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கும். அனுபவம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் வரக்கூடிய நாளாக இருக்கும். புதுசாக யாரிடமும், நெருங்கி பழக வேண்டாம். உங்களுடைய வீட்டு விஷயங்களை தெரியாத மூன்றாவது நபர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இறை வழிபாடு செய்யுங்கள். நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். வியாபாரத்தில் கொஞ்சம் கூடுதல் அக்கறையோடு செயல்பட வேண்டும். கடனுக்கு வியாபாரம் செய்ய வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் அசதி இருக்கும். இருந்தாலும் உங்களுடைய அன்றாட வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் தான் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்திலும் பெருசாக எந்த பிரச்சனையும் இருக்காது. உறவுகளோடு நல்லிணக்கம் ஏற்படும் சந்தோஷம் பிறக்கும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam