நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 21 மே 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 21 மே 2026 nithyasubam


– Advertisement –

மேஷம்

மேஷ ராசியினருக்கு இன்று மனது ஆன்மிகச் சிந்தனைகளில் நாட்டம் கொள்ளும். இல்லத்தரசிகளுக்கு மன அமைதி உண்டாகும். தொழில் மற்றும் வர்த்தகத்தில் கூடுதலான கவனம் தேவை. கவனக்குறைவால் எந்தவொரு புதிய செயலையும் தொடங்க வேண்டாம். உங்களுடைய பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைப்பதைத் தவிர்த்து, சுய முயற்சியுடன் செயல்படுவது நற்பலனைத் தரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தனவரவு உயரும். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். மன நிம்மதிக்கு எந்தவித இடையூறும் வராது. பொன் பொருள் சேர்க்கை உண்டாகி, மகிழ்ச்சி அதிகரிக்கும். குறிப்பாக, தங்கம் சேரும் யோகமும் உண்டு. உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும்.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இன்று மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். புதிய விஷயங்களை எளிதில் கற்றுக்கொள்ளும் திறன் வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிட்டும். உங்கள் தனித்திறமைகள் பளிச்சிடும். உங்களின் அசாத்திய முன்னேற்றத்தைக் கண்டு நீங்களே வியப்பீர்கள். அந்த அளவிற்கு இன்று ஒரு சிறப்பான தொடக்கமாக அமையும்.

கடகம்

கடக ராசியினருக்கு இன்று நற்செய்திகள் வந்து சேரும். தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி வாயிலாக மனதிற்கு இனிமையான செய்திகள் உங்களை வந்தடையும். நீண்ட தூரப் பயணங்களால் மன அமைதி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருமடங்காகும். சுபச் செலவுகள் ஏற்படக்கூடும்.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவைப்படும் உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். நீண்டநாள் கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல ஆர்வம் வெளிப்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு இன்று அதிகமாகக் கிடைக்கும். மனித உறவுகளின் அருமையையும் பெருமையையும் புரிந்துகொள்ளும் நாளாக அமையும்.

கன்னி

கன்னி ராசியினருக்கு இன்று மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். முடிந்தவரை நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அன்றாடக் கடமைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்வதை ஒத்திப்போடுங்கள். இறைவழிபாடு செய்வதன் மூலம் நற்பலன்கள் உண்டாகும்.

– Advertisement –

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத முன்னேற்றங்கள் உண்டாகும். நீங்கள் எண்ணிப் பாராத நல்ல நிகழ்வுகள் நடைபெறும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். வருமானம் சீராக இருக்கும். தேவைக்கேற்ப பணப்புழக்கம் கையில் இருக்கும். மனதிற்குப் பிடித்த நபரை கரம் பிடிக்கும் வாய்ப்புகள் உருவாகும். சுபச் செலவுகள் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இன்று எதிர்பாராத தனலாபம் கிட்டும். மனதிற்கு உகந்த நபரிடமிருந்து அன்புப் பரிசுகள் கிடைக்கும். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மகிழ்ச்சி வானளவு உயரும். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். நீண்ட தூரப் பயணங்கள் சந்தோஷத்தைக் கொடுக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நற்பலன்கள் கிட்டும். பெயரும், பாராட்டும், புகழும் உங்களைத் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். முடிந்தவரை வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

மகரம்

மகர ராசியினருக்கு இன்று வெற்றி வாகை சூடும் நாள். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் உங்கள் கை ஓங்கி நிற்கும். புதிய விஷயங்களை எளிதில் கற்றுக்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். திறமையும், பேச்சாற்றலும் வெளிப்படும். கலைத்துறையினருக்கு இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும். நாள் முழுதும் சுபமாக அமையும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பணிகளின் சுமை காரணமாக நாள் முழுதும் உழைப்பிலேயே கழியும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். தேவையான அளவு நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டு, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். எதிர்பாராத முன்னேற்றம் உங்களைத் தேடி வரும். புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். இரவு நல்ல ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.

மீனம்

மீன ராசியினருக்கு இன்று மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உங்களின் பேச்சில் தெளிவும், நேர்மையும் இருக்கும். பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மை அதிகரிக்கும். சூழ்நிலைகளைப் பக்குவமாக எதிர்கொள்வீர்கள். பல நல்ல அனுபவங்களைப் பெறும் நாளாக அமையும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டாகி, மகிழ்ச்சி இருமடங்காகும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

Scroll to Top
I am Online
I am Online