மேஷம்
மேஷ ராசியினருக்கு இன்று உற்சாகம் பொங்கும் திருநாளாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிலவி வந்த இடர்பாடுகள் தானாகவே அகன்று, உங்களை வியப்பில் ஆழ்த்தும். இதுவரை எதிரிகளாய் இருந்தோர் நண்பர்களாக மாறுவார்கள். சிக்கலான பிரச்சனைகளுக்கும் எளிதில் தீர்வு கிட்டும் யோகம் உண்டு.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இன்று மகிழ்ச்சி பொங்கும் நாளாக அமையும். இதுவரை நிந்தித்தவர்களின் வாயாலேயே பாராட்டு மழை பொழியும். நெடுநாள் கனவுகள் நனவாகும். இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். இயலாதவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து புண்ணியம் தேடுங்கள்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இன்று எதிர்பாராத தன வரவு காத்திருக்கிறது. நீண்டகால பணப் பற்றாக்குறை சீரடையும். கடன் சுமை குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இழந்த நற்பெயரை மீண்டும் பெறுவீர்கள். குடும்பத்தில் ஆனந்தம் இரட்டிப்பாகும். தடைபட்டிருந்த சுப காரியங்கள் மீண்டும் நடந்தேறும். பயணங்களின்போது விழிப்புணர்வுடன் இருத்தல் நலம்.
கடகம்
கடக ராசியினருக்கு இன்று நற்பலன்கள் ஏற்படும் நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் நிலவும். மனதில் இருந்த பாரங்கள் அகலும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். பயணங்களால் சிறு உடல் உபாதைகள் வரக்கூடும் என்பதால் கவனமுடன் செயல்படவும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இன்று வெற்றி வாகை சூடும் நாளாகும். கடமையில் இருந்து தவறாது செயல்படுவீர்கள். பிறரின் மனநிலையை புரிந்துகொண்டு நடப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கி, குடும்ப ஒற்றுமை நிலைத்திருக்கும்.
கன்னி
கன்னி ராசியினர் இன்று ஆர்வத்துடனும், துணிச்சலுடனும் செயல்படுவீர்கள். மனதில் பட்டவற்றை வெளிப்படையாகப் பேசுவீர்கள். இதனால் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும், பெரிய பாதிப்புகள் இருக்காது. உங்கள் கவனம் அனைத்தும் வாழ்வின் முன்னேற்றப் பாதையை நோக்கியே பயணிக்கும். இறைவனுக்கு நன்றி கூறுங்கள்.
துலாம்
துலாம் ராசியினரின் மனதை இன்று யாராலும் மாற்ற இயலாது. உங்கள் எண்ணங்களில் உறுதியாக நின்று, விடாமுயற்சியால் விரும்பியவற்றை சாதித்துக் கொள்வீர்கள். ஆயினும், கவனமாக செயல்படுவது அவசியம். அவசர முடிவுகளைத் தவிர்த்து, பிரச்சனைகளில் சிக்குவதைத் தவிர்க்கவும். குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வேகத்துடன் விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள் இது.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இன்று பெருமைமிகு நாளாகும். வாழ்வில் பெரிய அளவில் சாதனைகள் படைத்து மனநிறைவு பெறுவீர்கள். இதுநாள் வரை அவமானப்பட்ட இடத்தில் இன்று நற்பெயர் கிட்டும் பாக்கியம் உண்டு.
தனுசு
தனுசு ராசியினருக்கு இன்று வருமானம் பெருகும். நிதிநிலைமை சீராகும். இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். பொன் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புண்டு. வீட்டில் உள்ள பெண்களுக்கு மனமகிழ்ச்சி இரட்டிப்பாகும். நீண்டதூரப் பயணங்களால் நன்மை உண்டாகும். சுபச் செலவுகளும் ஏற்படும்.
மகரம்
மகர ராசியினருக்கு இன்று நன்மையான நாளாக அமையவிருக்கிறது. இல்லத்திற்கு விருந்தினர்கள் வருகை உண்டு. சுபச் செலவுகள் ஏற்படும். மனதிற்குப் பிடித்தவர்களுடன் உரையாடி நேரத்தைச் செலவிடுவீர்கள். பழைய நினைவுகள் உங்களை மகிழ்விக்கும். சுகமான அனுபவங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு இன்று ஆன்மீகச் சிந்தனைகளில் மனம் ஈடுபடும். பொதுப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். குடும்பத்துடன் மனதிற்குப் பிடித்த ஆலயங்களுக்குச் சென்று இறை தரிசனம் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் எப்போதும்போல சுமூகமாகச் செல்லும்.
மீனம்
மீன ராசியினருக்கு இன்று பேரும் புகழும் பாராட்டுக்களும் குவியும். மனதிற்குப் பிடித்த நபர்களுடன் நீண்ட நேரம் உரையாடி மகிழ்வீர்கள். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வாகனங்கள் ஓட்டும்போதும், கைபேசி பயன்படுத்தும்போதும் கவனமுடன் இருத்தல் நலம்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil


