
– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் கடுமையாக கஷ்டப்பட்டு செய்த வேலைகளுக்கு உண்டான அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். மனதில் நிம்மதி பிறக்கும். வாழ்க்கையில் முன்னேறி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல இன்றைய நாள் நல்லதொரு வழியை காட்டித் தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் நாளாக இருக்கும். இன்றைய தினம் சேமிப்பு செய்ய முயற்சிகளை மேற்கொள்ளலாம். சீட்டு போடுவது, வங்கியில் கணக்கு தொடங்குவது, நகை சீட்டு கட்டுவது, இதுபோல ஏதாவது நல்ல காரியங்களை செய்தால் எதிர்காலத்தில் அது உங்களுக்கு லாபகரமாக அமையும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நலமான நாளாக இருக்கும். எல்லா வேலையிலும் எச்சரிக்கையாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் இருக்கும் சின்ன சின்ன பிரச்சனைகளை எல்லாம் கூட அலசி ஆராய்ந்து சரி செய்வீர்கள். உங்கள் பக்கம் இன்று குறை சொல்ல எதுவுமே இருக்காது. மன நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் டென்ஷன் அதிகரிக்கும். வேலை சுமை அதிகமாக இருக்கும். ஆகவே மனதை ஒருநிலைப்படுத்தி நேரத்தை வீணாக்காமல் கடமைகளை செய்து முடிக்க வேண்டும். சோசியல் மீடியாவில் அதிகமாக நேரத்தை செலவு செய்ய வேண்டாம். அடுத்தவர்களுடைய விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு இருக்கும். அதிர்ஷ்டம் நிறைந்த நாளாகவும் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் நகை ஆடை ஆபரணங்கள் சேர்க்கை இருக்கிறது. புதுசாக வண்டி வாகனம் வாங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்திலும் வேலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். எந்த ஒரு ஆர்ப்பாட்டமான பிரச்சனைகளும் நடக்காது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். சில பேருக்கு நீண்ட தூர பயணங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை அமையும். வாழ்க்கை சம்பந்தப்பட்ட முடிவுகளை இன்று தாராளமாக எடுக்கலாம்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். எந்த ஒரு நிலையிலும் அடுத்தவர்களை குறை கூறி உங்களை நியாயப்படுத்திக் கொள்ள மாட்டீர்கள். தவறு என்றால் தவறை ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவம் உங்கள் இடத்தில் இன்று இருக்கும். இந்த அனுபவம் மிகப்பெரிய பக்குவத்தை இன்று உங்களுக்கு கொடுக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுடைய பிரச்சனைகளை புரிந்து கொண்டு, உதவி செய்வார்கள். நண்பர்கள் உறவுகள் என்று உங்கள் பிரச்சனைக்கு கை தூக்கி விட வருவார்கள். சுற்றி இருப்பவர்களுடைய அருமை பெருமைகளை இந்த நாள் உங்களுக்கு புரிய வைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் வரும். போட்டி பொறாமைகள் வரும். உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து சில சில பேர் உங்களுடைய எதிரியாக கூட மாறலாம். இதை நினைத்தும் கவலைப்பட வேண்டாம். நேர்மையான வழியில் நடந்து கொள்ளுங்கள். அடுத்தவர்களுக்கு கேடு நினைக்காதீர்கள். கடவுள் நிச்சயம் உங்களுக்கு நல்லது செய்வார்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று ரொம்ப ரொம்ப ஆர்வமாக புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு இன்றைய தினம் நல்ல பெயர் கிடைக்கும். ஆராய்ச்சி பணியில் இருப்பவர்களுக்கு புதுப்புது விஷயங்களை கண்டுபிடிக்க உங்களுடைய அறிவுத்திறன் இன்று ரொம்ப ரொம்ப சப்போர்ட் பண்ணும். மற்றபடி வேலை வியாபாரம் செய்பவர்கள் எல்லாமும் அவரவர் திறமையை சரியாக வெளிகாட்டி ஜெயிப்பீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். நீண்ட நாள் நிறைவேற்ற முடியாத வேண்டுதலை இன்று நிறைவேற்றிக் கொள்ளலாம். இறை வழிபாடு செய்வது மனதிற்கு அத்தனை நிம்மதியை கொடுக்கும். முடிந்தால் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். வாழ்க்கை துணை பேச்சுக்கு மரியாதை கொடுங்கள். முதலீட்டில் கவனம் செலுத்துங்கள். வேலை செய்யும் இடத்தில் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். அன்பு வெளிப்படும் நாளாக இருக்கும். பிரிந்த கணவன் மனைவிக்குள் ஒரு ஒற்றுமை ஏற்படும். நிதிநிலைமை சீராகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள தயாராகுவீர்கள். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். பண பரிவர்த்தனையில் கவனம் தேவை.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam