இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2025

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2025

Qries


மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உடல் அசதி உண்டாகும். வேலையில் முழு கவனத்தை செலுத்த முடியாது. இதனால் வியாபாரத்திலும் வேலையிலும் சின்ன பின்னடைவு வரும். உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருக்கவும். ஆரோக்கியத்தில் பிரச்சனை வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வாக்குவாதம் சண்டை சச்சரவுகள் பகை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அடுத்தவர்களிடம் பேசும்போது கவனமாக பேச வேண்டும். அநாவசியமான பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. இன்று வேகத்தை விட, விவேகம் தான் முக்கியம். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நன்மைகள் நடக்கும். எதிர்பார்த்ததை விட வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். தேவையற்ற குழப்பங்கள், தேவையற்ற சந்தேகங்கள் வாழ்க்கையில் இருந்து விலகி, மன நிம்மதி கிடைக்கக்கூடிய நாள். நீண்ட நாள் ஆசை கனவு நிறைவேறும் நாள்.கடகம்கடக ராசி காரர்களுக்கு இன்று தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களைப் பற்றிய பெருமையை இந்த ஊரே பேச போகிறது. அந்த அளவுக்கு உங்களுக்கு பெயர் புகழ்ச்சி அந்தஸ்து உயரும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் உங்கள் வீடு தேடி வரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் அடுத்தவர்களின் ஆதரவால் நிறைய ஆதாயங்களை அடைவீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிட வேண்டும். கூடுமானவரை செலவை குறைத்துக் கொள்வது நல்லது.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கை நிறைய பணம் வரக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வீட்டில் பொன் பொருள் சேர்க்க இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். வேலையை பொருத்தவரை நிதானதோடு செயல்பட வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ளக்கூடாது. வியாபாரத்தில் நல்ல லாபம் வரக்கூடிய சூழ்நிலை நிலவும். – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்த முயற்சிகளை மேற்கொள்ளலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பத்திலிருந்து விடுபடக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். எதிரி தொல்லை விலகும். வியாபாரத்தில் முன்னேற்றமான பாதையில் செல்வீர்கள். புதிய முதலீடுகளை செய்யலாம். புது பார்ட்னரை சேர்த்துக் கொள்ளலாம். நல்லது நடக்கும் நாள்.தனுசுதனுசு ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு இருப்பீர்கள். எப்படியாவது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் நல்ல வெற்றியை கொடுக்கும். அடுத்தவர்களுடைய மனதில் சீக்கிரமாக இடம் பிடிப்பீர்கள். காதல் கை கூடும் திருமணம் வரை செல்லும். வண்டி வாகனத்தில் செல்லும்போது மட்டும் கவனம் இருக்கட்டும்.மகரம்மகர ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புது வேலை தேடலாம். புது வியாபாரம் துவங்க முயற்சிகளை மேற்கொள்ளலாம். பிள்ளைகளுடைய படிப்பில் புது விஷயங்களை செயல்படுத்தலாம். புதிய சேமிப்பை துவங்கலாம். இப்படி நிறைய நல்ல விஷயங்கள் துவங்க இன்றைய நாள் நல்ல நாள்.கும்பம்கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல போகிறீர்கள். உங்களுடைய பிரமோஷன் பற்றிய பேச்சுகள், வியாபாரத்தை விரிவுபடுத்த விளம்பரங்கள், இதுபோல முன்னேற்ற பாதையில் செல்ல தேவையான வேலைகளை எல்லாம் இன்று நீங்கள் மேற்கொள்ளலாம். கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பான் நல்லதை செய்வோம்.மீனம்மீன ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். எதிலும் தெளிவாக நடந்து கொள்வீர்கள். பேச்சாற்றல் வெளிப்படும். நடக்காத காரியத்தை கூட பேசி பேசி சாதித்து விடுவீர்கள். வசீகரமான உங்கள் பேச்சு அனைவரையும் கவரும். காதல் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். திருமண பேச்சு வார்த்தை சுபமாக முடியும்.

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top