– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் நிறைந்த நாளாக இருக்கும். புது வேலைகளை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். திறமை வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். வக்கீல் தொழில் செய்பவர்கள், ஆசிரியர் தொழில் செய்பவர்கள், பேச்சாளர்களுக்கு இன்று சிறப்பான நன்மைகள் உண்டு. எதிரி தொல்லை நீங்கும். மன நிம்மதி கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். சேமிப்பு கரைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. யாராவது மலிவு விலையில் பொருட்களை கொடுக்கிறேன் என்றால், நம்பாதீங்க. ஏமாறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இன்று உஷாராக இருக்கவும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். வேலை தொழில் எல்லாம் நீங்கள் நினைத்ததை விட நல்லபடியாக நடக்கும். வெளியூர் பயணங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நிதிநிலைமை சீராக இருக்கும். செலவுக்கு ஏற்ப வருமானம் வந்து கொண்டே இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொன் பொருளை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நட்பு நன்மையை செய்யும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று அதிகமாக சிந்தனையோடு இருப்பீர்கள். எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்று யோசித்து யோசித்து நேரமே வீணாகி போகும். ஆகவே சிந்திப்பதை விட்டுவிட்டு செயல்பாட்டில் ஈடுபட்டு விடுங்கள். நிச்சயம் நல்லபடியாக எல்லாம் நடந்து முடியும். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கிறது.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டும் புகழும் சேர்ந்து வரக்கூடிய நாளாக இருக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள், அனுமதியை எதிர்பார்த்து கீழே பணிபுரிபவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். தலைமைப் பொறுப்பு வகிப்பவர்களுக்கு இன்று நன்மை நடக்கும். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். சுப செலவுகள் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு இருப்பீர்கள். காலை துவங்குமே கொஞ்சம் தலைபரமாகத்தான் இருக்கும். கவலைப்படக்கூடாது, மனதை உறுதியோடு வைத்துக் கொள்ள வேண்டும். என்ன நடந்தாலும் இன்றைய வேலையை இன்றைக்கு செய்து முடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். நல்லது நடக்கும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோதனையான நாளாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் உடனடியாக நன்மையை தராது. சின்ன சின்ன தடைகளும் தடங்களும் உங்களுக்கு நிறைய அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். என்ன சோதனை வந்தாலும் இறைவனின் மீது நம்பிக்கையை வைத்து உங்களுடைய வேலையில் கூடுதல் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் என்று ஆக்கபூர்வமான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உத்வேகத்தோடு செயல்படுத்துவீர்கள். சுயநலத்தோடு சிந்திக்க மாட்டீர்கள். உங்களுடன் இருப்பவர்களையும் வாழ்க்கையில் முன்னேற்றச் செய்ய உதவிகளை செய்வீர்கள். மன நிம்மதி ஏற்படும். புண்ணிய காரியம் செய்து பாவங்களுக்கான பிரயாசித்தத்தை தேடிக் கொள்வீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சாதனை படைக்க கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். எவ்வளவு கஷ்டமான வேலையை உங்களிடம் கொடுத்தாலும், சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். விவேகத்துடன் நடந்து கொள்வீர்கள். மேலதிகாரிகளே ஆச்சரியப்பட்டு பாராட்டும் தெரிவிப்பார்கள். சில பேருக்கு இதனால் பொறாமையும் வரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று பேராசை கொஞ்சம் பெரு நஷ்டத்தை உண்டாக்கும். அடுத்தவர்களை பார்த்து முதலீடு செய்வது, அடுத்தவர்களை பார்த்து அதேபோல பொருட்களை வாங்கி பயன்படுத்துவது, இது போன்ற விஷயங்களில் எல்லாம் ஈடுபடக்கூடாது. நம் தகுதிக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்து கொண்டால் நல்லது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சிரமங்கள் கொஞ்சம் இருக்கும். ஏற்ற இறக்கம் நிறைந்த நாளாக தான் இருக்கும். அதிக வட்டிக்கு கடன் வாங்கக்கூடாது. பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனது அமைதியாக இருக்கும். பிரச்சினைகளை எடுத்து மண்டைக்குள் போட்டு குழப்பிக் கொள்ள மாட்டீர்கள். போனது போகட்டும் என்று அன்றாட வேலையில் கவனம் செலுத்துவீர்கள். இறைவனின் பரிபூரண அருள் உங்களுக்கு இருக்கிறது. கஷ்ட காலம் முடிவுக்கு வரும். நிச்சயம் நல்லது நடக்கும். சோம்பேறித்தனம் மட்டும் வேண்டாம். அன்றைக்கான வேலையை அன்றே முடித்தாலே போதும் நல்லது.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam