
– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும். உங்களுடைய கெட்ட பெயர் விலகும். உங்கள் மீது விழுந்த பழி விலகி, குற்ற உணர்ச்சியிலிருந்து வெளிவரக்கூடிய நாளாக அமையும். சந்தோஷம் இருக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். முடிந்தால் குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை சமாளிக்கவே முடியாது. சொன்ன வேலையை சரியான நேரத்தில் செய்து தர முடியாததால், தலைகுனிவு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அனாவசியமாக யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். உங்களால் முடிந்த வேலைகளை மட்டும் செய்யுங்கள். வீம்புக்கு எந்த ஒரு விஷயத்தையும் செய்யக்கூடாது. வேகத்தை விட, இந்த நாளில் விவேகத்தோடு செயல்பட வேண்டியது அவசியம்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை அவசியம் தேவை. அவசரம் வேண்டாம். முன் கோபம் வேண்டாம். சிந்தித்து செயல்படுங்கள். நிதானதோடு இருங்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். மௌனமாக இருந்து காரியத்தை சாதித்துக் கொள்வதுதான் இந்த நாளிற்கு உண்டான ஒரே வழி.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இந்த நாள் வாழ்க்கையில் உயர்வுநிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் நாலு பேருக்கு தெரியவரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் தொல்லை குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு வட்டாரத்தின் மூலம், தெரிந்தவர்களின் மூலம் நல்லது நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆதரவு நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நாலு பேர் நிச்சயம் வந்து உதவி செய்வார்கள். மன நிம்மதி இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவியோடு இருந்து வந்த மன குழப்பம் நீங்கும். நீண்ட நாள் வெளியில் சொல்ல முடியாத சில விஷயங்களை சொல்லி மனதிருப்தி அடைவீர்கள். இரவு நல்ல தூக்கத்தையும் பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதியான நாளாக இருக்கும். அந்தந்த வேலைகள், அந்தந்த நேரத்தில் நடக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் நல்ல உபச்சாரமும் இருக்கும். தடைப்பட்டு வந்த சுப காரிய பேச்சுக்கள் மீண்டும் நடக்கும். மனதிற்கு நிம்மதி கிடைக்கும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புகழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் செய்த சின்ன வேலைக்கு கூட பெரிய பாராட்டுக் கிடைக்கும். குறிப்பாக மாணவர்கள், கல்வி துறையில் பணிபுரிபவர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கப் போகிறது. திறமை வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று குழப்பங்கள் தெளிவடையக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த தொல்லைகள் விலகும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். சொத்து சேர்க்கையும் இருக்கிறது. வண்டி வாகன சேர்க்கையும் இருக்கிறது. இன்று புது முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தலைநிமிர்ந்து இருக்கக்கூடிய நாளாக அமையும். தெரியாமல் தவறு செய்த இடத்தில் உங்களுடைய தவறை திருத்திக் கொள்வீர்கள். மன்னிப்பும் கேட்பீர்கள். குற்ற உணர்ச்சியில் இருந்து வெளி வருவீர்கள். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அவமானப்பட்ட சொந்த பந்தங்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கக்கூடிய நாளாக இந்த நாள் அமையும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுபமான நாளாக இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் திருமணம் காதுகுத்து போன்ற விசேஷங்களை நிச்சயிப்பீர்கள். கொண்டாட்டங்கள் துவங்கும் நாளாக அமையும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். மனதிற்கு இதமான சூழல் அமையும். இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பணம் நெருக்கடி இருக்கும். தேவையில்லாமல் இந்த செலவை செய்து விட்டோமோ, என்று சிந்திக்க துவங்குவீர்கள். தவறு செய்தாகிவிட்டது. செலவு செய்தாகிவிட்டது. இனிமேல் யோசித்து எந்த பிரயோஜனமும் இல்லை. இனிமே இந்த தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தவறுகளை திருத்திக் கொள்ளக்கூடிய அனுபவங்கள் கிடைக்கும் நாள் இன்று.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று நினைத்த வேலைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். வெற்றி அடையக் கூடிய நாளாக இருக்கும். வாழ்க்கை அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயரும். கற்பனை செய்யும் விஷயங்கள் எல்லாம் நடைமுறை வாழ்க்கையில் சரிப்பட்டு வராது என்பதை புரிந்து கொள்வீர்கள். நிதர்சனம் எதுவோ அது உங்கள் கண்களுக்கு தெரியும். வாழ்க்கையில் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam