
– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய பணம் கையில் சேருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஏதாவது ஒரு வகையில், ஒரு குறிப்பிட்ட தொகை உங்கள் கையை வந்து சேரும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையலாம். நீண்ட நாள் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்த கடன் காரர்கள் பணத்தை திருப்பி கொடுத்து விட்டு செல்லலாம். இப்படி ஏதோ ஒரு வகையில் வரவு இருக்கும் சந்தோஷம் பெருகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று புதிய முதலீடுகளை செய்யலாம். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். லாபம் நிறைந்த இந்த நாளில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும். உங்களுடைய சிந்தனையும் யோசனையும் உங்களை இந்த சமுதாயத்திற்கு பொலிவாக காட்டும். இன்று நீங்கள் மெருகேற்றத்தோடு காணப்படுவீர்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இந்த நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கப் போகிறது. உங்கள் மனதில் நினைத்த வேலைகளை எல்லாம் சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். சுற்றி இருப்பவர்களிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று பாராட்டும் புகழும் கிடைக்கும். பெரியவர்களுடைய ஆசிர்வாதத்தால் குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அனாவசிய செலவு உங்களுடைய சேமிப்பை மொத்தமாக காலி செய்ய வாய்ப்புகள் உள்ளது. அதேபோல யாரை நம்பியும் பணத்தை கொடுக்காதீங்க. முன்பின் தெரியாதவர்களை நம்புவதன் மூலம் உங்களுக்கு இன்று ஏமாற்றம் ஏற்படலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் அபரிவிதமான முன்னேற்றம் இருக்கும். ஒரு குறிப்பிட்ட வேலையில் உங்களுடைய பெயரை நிலை நிறுத்த நீங்கள் மேற்கொண்ட முயற்சி பிரம்மாண்ட வெற்றியை அடையும். உங்களுக்கான பாராட்டும் புகழும் தேடிவரும். சில பேருக்கு இன்று சாதனை படைக்கும் அளவுக்கு வாய்ப்புகள் இருக்கு பயன்படுத்திக்கோங்க.
– Advertisement –
துலாம்
துலாம் ராசி காரர்கள் இன்று ரொம்பவும் கோபத்தோடு நடந்து கொள்வீர்கள். பொறுமை இழக்க, நிறைய காரணங்கள் இருக்கலாம். இருந்தாலும் கொஞ்சம் அமைதியாக இருக்கும் பட்சத்தில் இன்றைய நாள் இனிதே நகர்ந்து செல்லும். முன்கோபத்தால், நல்ல நண்பர்கள், நல்ல வாய்ப்புகளை இழக்க கூடும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். பெரியவர்களின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். அன்றாட வேலையில் கவன குறைவு வேண்டாம். அடுத்தவர்களை குறை கூற வேண்டாம். வாக்குவாதம் செய்ய வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கி இருக்கவும். உங்கள் கடமைகளில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்தால் போதும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். வீட்டு வேலை, அலுவலக வேலை, பிள்ளைகளை பார்ப்பது என்று எல்லா சுமையும் உங்கள் தலைமையில் விழுவது போல சூழ்நிலைகள் உண்டாகும். இருந்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து விடுவீர்கள். இன்று மாலை கொஞ்சம் உடல் அசதி ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் ஜாக்கிரதை.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை செய்யும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். குடும்பத்திற்காக பெண்கள் எடுக்கும் முடிவுகள் இன்று குடும்பத்திற்கு சாதகமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பெருகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் வந்த வண்ணம் இருக்கும். உங்களுடைய பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. வேலையிலும் வியாபாரத்திலும் திறமையாக செயல்படுவீர்கள். உங்களோடு இருப்பவர்களை வாழ்க்கையில் முன்னேற்றி விட, சில பல உதவிகளையும் செய்வீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். செலவுகளை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொள்வது நன்மையை தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். இன்றைய நாளில் நாள் ஓய்வு கிடைக்கும். நிறைய பிரச்சனைகளுக்கு மத்தியில் சின்னதாக சந்தோஷம் வரும். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். டென்ஷன் குறையும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தவும். மற்றபடி நிதி நிலைமை சீராக இருக்கும். இந்த நாள் இனிமையாக நகரும்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam