இன்றைய ராசிபலன் – 23 டிசம்பர் 2024

இன்றைய ராசிபலன் – 23 டிசம்பர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். சுகமாக இருக்கும். நினைத்த வேலையை நினைத்த நேரத்தில் நடத்தி முடிப்பீர்கள். பயணங்கள் நல்லபடியாக நடக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். சண்டை போட்டுக் கொண்டிருந்த குடும்பத்தோடு ஒற்றுமையாக வாழ மனதை தயார் செய்து கொள்வீர்கள். பிடிவாதம் குறையும். ஈகோ குறையும். சந்தோஷம் பிறக்கும். வேலை தொழில் எல்லாம் நினைத்ததை விட நல்லபடியாக செல்லும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய உறவுகள் நண்பர்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். உற்சாகத்தோடு வேலை செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்ளலாம். புதிய முதலீடு செய்யலாம். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். பிரச்சனைகளை சுலபமாக முடிக்க திறமையாக சிந்திப்பீர்கள். சுறுசுறுப்பு இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். மன நிம்மதி இருக்கும். தேவையற்ற டென்ஷன் உங்களை விட்டு விலகும். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவை. எந்த விஷயத்திலும் அவசர பட கூடாது. நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் பொருள் இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். இல்லை என்றால் சில பல பணம் சம்பந்தப்பட்ட நஷ்டங்கள் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. ஜாக்கிரதை முதலீடு செய்யவும். கவனம் இருக்கட்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் எந்தவித கஷ்டமும் இல்லாமல் வெற்றியடையும். சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். நீங்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் உங்களுக்கு ராஜபோக வரவேற்பு தான். உபசாரம் தான். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் நல்ல ஓய்வு எல்லாம் கிடைக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை இருக்க வேண்டும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற நண்பர்களிடம் உறவினர்களிடமிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் பிரச்சனை இல்லை.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு ஆதரவாக இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சில பேருக்கு இடமாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தை பொருத்தவரையில் சின்ன சின்ன ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். கடின உழைப்பு முதலீட்டாக போட்டால் நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். கூடுமானவரை நீண்ட தூர பயணத்தை மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள். உடைமைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியம் இல்லாத உணவுகளை வெளியிடங்களில் சாப்பிட வேண்டாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். தேவையற்ற குழப்பங்கள் நீங்கும். சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி உண்டு. பிள்ளைகளுடைய படிப்பிற்கு தேவையான அத்தனை முயற்சிகளையும் மும்மரமாக செய்வீர்கள். அவர்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பையும் உயர்த்துவீர்கள். குடும்ப அக்கறை இன்று உங்களுக்கு கொஞ்சம் கூடுதல் பொறுப்பாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். பிரமோஷன் கிடைக்கும். உங்களுடைய தகுதியை உயர்த்திக் கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். அதை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அலட்சியமாக இருக்கக் கூடாது ஜாக்கிரதை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் கூடக்கூடிய நாள். உங்களுடைய கடமைகளை சரிவர செய்வீர்கள். சுப செலவுகள் உண்டாகும். முன்னோர்களின் ஆசியும் இறைவனின் ஆசிர்வையும் பரிபூரணமாக கிடைக்கும். நிதி நிலைமை சீராகும். தேவைக்கு ஏற்ப பணம் இருக்கும் நிம்மதி கிடைக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top