மேஷம்
மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. வேலையில் கவனமாக செயல்பட வேண்டும். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வயதானவர்கள் உங்களுடைய ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். வெயில் நேரத்தில் வெளியில் செல்லக்கூடாது. தேவையில்லாத பிரச்சனையில் தலையிடக்கூடாது. நீங்கள் உண்டு உங்க வேலை உண்டு என்று இருக்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். புது வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புது மனிதர்களின் சந்திப்பு புது அனுபவங்களை கற்றுக் கொடுக்கப் போகிறது. மனதில் இருந்த பாரம் குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுகபோக வாழ்வு இருக்கும். சென்ற இடமெல்லாம் மதிப்பு மரியாதையும் உயரும். எந்த இடத்தில் எல்லாம் அவமானப்பட்டு நின்றீர்களோ, அந்த இடத்தில் எல்லாம் உங்கள் கை ஓங்கி நிற்கும். பட்ட அவமானத்திற்கு, செயலால் பதில் சொல்வீர்கள். அதிகம் பேச மாட்டீங்க. திறமைகள் வெளிப்படும் நாள். ஜெயம் உண்டாகும் நாள்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பட்ட கஷ்டத்திற்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். உங்களுடைய கடமையிலிருந்து தவற மாட்டீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன அமைதி இருக்கும். தேவையற்ற டென்ஷன் குறையும். உங்களுடைய ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் இன்னும் நிறைய சாதிப்பீர்கள். நீண்ட தூர பயணங்கள் இனிமையாக அமையும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். நல்ல விஷயங்களாகவே நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை மனதிற்கு அமைதியை தரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று மன உறுதியோடு செயல்படுவீர்கள். உங்களுடைய பேச்சிலும் செயலிலும் ஒரு நேர்மை வெளிப்படும். அநாவசியமான பயம் உங்களை விட்டு விலகும். உங்கள் மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். தைரியமாக செயல்படுவீர்கள். எதிரி பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும். மனதில் இருந்த பெரிய பாரம் குறையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று இறக்க குணம் வெளிப்படும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கவனத்தோடு செயல்படுவீர்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் உங்களை ஊக்குவித்துக் கொண்டே இருக்கும். முயற்சிகள் வெற்றி அடையும் நாள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும் நாள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். இதனால் சில பல பிரச்சனைகள் வரும். சின்ன சின்ன எதிரிகள் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளது. கூடுமானவரை பேசும்போது, யோசித்துப் பேசுங்கள். எந்த இடத்தில் பேச வேண்டும், எந்த இடத்தில் பேசக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளவும். குறிப்பா மீட்டிங் ஏதாவது இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன எதிர்ப்புகள் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சிந்தித்து செயல்பட வேண்டும். மூன்றாவது மனிதர்களை கண்மூடித்தனமாக நம்ப கூடாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். திருடு போவதற்கு சின்ன வாய்ப்பு உள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் விலகும். வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரத்தை பொருத்தவரை முன்னேற்றதோடு காணப்படும். புதிய முதலீடுகளின் போது மட்டும் கவனம் இருக்கட்டும். முன்கோபம் வேண்டாம் நிதானமாக செயல்படுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதுசாக தொழில் தொடங்குவதாக இருந்தால் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலைக்கு முயற்சி செய்யலாம். புது சேமிப்பை துவங்கலாம். இன்று நீங்கள் துவங்கும் காரியங்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை கொடுக்கும். மற்றபடி உங்களுடைய வேலை ஆரோக்கியம் எல்லாம் சீராகவே இருக்கும். தேவையான அளவு ஓய்வும் கிடைக்கும்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam
