
மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்த நல்ல காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் கிடைக்கும். ப்ரமோஷனுக்கு கூட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. மனது நிறைய சந்தோஷம் இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். இறைவனுடைய பரிபூரண ஆசி உங்களுக்கு இருக்கு.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கவனத்தோடு இருக்க வேண்டிய நாள். தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள். அத்தியாவசிய வேளையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். தேவையில்லாத விஷயங்களை உங்களை விட்டு ஒதுக்கி வைத்து விடுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்கவும். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன வருத்தம் இருக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் பிரச்சனைகள் வரலாம். உறவுகளோடு சண்டை சச்சரவுகள் வரலாம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள். அடுத்தவர்கள் மனதில் நோகும்படி எதுவும் பேசிட வேண்டாம். இறைவனின் மீது பாரத்தை போட்டு, இறை வழிபாடு செய்து விட்டு இந்த நாளை துவங்கவும்.கடகம்கடக ராசி காரர்களுக்கு இன்று மன அமைதியும் சந்தோஷமும் சேர்ந்து இருக்கும். உற்சாகத்தோடு வேலை செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் முன்னேற நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் வெற்றியைக் கொடுக்கும். இறைவனுக்கு நன்றி சொல்ல மறக்க வேண்டாம். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயமும் பதட்டம் இருக்கும். புது வேலைகளை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். மூன்றாவது நபரை முழுசாக நம்ப வேண்டாம். புது வேலை தேடுவது, புது தொழில் துவங்குவது, போன்ற விஷயங்களை இன்று செய்யாதீங்க. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். அனாவசியமான சந்தேகத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். நிறைய தண்ணீர் குடித்து உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொண்டால், நல்லது. நேரத்தை வீணடிக்க வேண்டாம். கைப்பேசியை அதிக நேரம் பார்க்க வேண்டாம். நல்ல நண்பர்களோடு மட்டும் பழக்கம் வைத்துக் கொள்ளுங்கள். – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடுவது, புது வியாபாரம் துவங்குவது, போன்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம். உங்களுக்கு நல்லதே நடக்கும். கொடுக்கல் வாங்கலில் மட்டும் கூடுதல் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள்.விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று தைரியம் அதிகமாக இருக்கும். எந்த ஒரு பயமும் இல்லாமல் உங்களுடைய பேச்சாற்றல் வெளிப்படும். எதிரிகளை பந்தாட கூடிய நாள். உங்களை பார்த்து எல்லோரும் பயப்படுவார்கள். அந்த அளவுக்கு இந்த நாளில் அதிரடி இருக்கப் போகிறது. எல்லா விஷயங்களையும் வெட்டு ஒன்று தொண்டு இரண்டு என்று பேசி ஒரு முடிவுக்கு கொண்டு வருவீர்கள்.தனுசுதனுசு ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஒரு துளி நேரத்தை கூட வீணாக்க மாட்டீர்கள். வாழ்க்கையில் முன்னேற அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக அமையும். இறைவனின் பரிபூரண அருள் ஆசி கிடைக்கும். நீண்ட தூர பயணத்தின் போது மட்டும் கவனமாக இருக்கவும்.மகரம்மகர ராசிக்காரர்கள் இன்று நேர்வழியில் நடக்க வேண்டும். குறுக்குப் பாதையை தேர்ந்தெடுக்கக் கூடாது. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை கூடவே கூடாது. சின்ன சின்ன சோதனைகளை கடவுள் உங்களுக்கு கொடுக்கப் போகின்றான். அதனை நீங்கள் சரியாக தாண்டிவிட்டால், வாழ்க்கையில் ஜெயித்து விடலாம்.கும்பம்கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சு நடக்கும். தடைபட்டு வந்த சுபகாரியங்களை நடத்த பிள்ளையார் சுழி போடுவீர்கள். சுப செலவுகள் உண்டு. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்ய வேண்டாம். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கவும்.மீனம்மீன ராசிக்காரர்கள் இன்று உணர்வு பூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். உங்களை பொதுப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். அடுத்தவர்களுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். திறமையால் பிரச்சனைகளை சீக்கிரம் சரி செய்து விடுவீர்கள். இறைவனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam