
மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சாதனை படைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் பல மடங்கு வெற்றிய கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். இன்று விடுமுறை நாள் என்பதால் நல்ல ஓய்வு, நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற நஷ்டங்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. விலை குறைவாக இருக்கிறது என்பதால் டிஸ்கவுண்ட் சேலில் எந்த பொருளையும் வாங்க வேண்டாம். வேலையில் மட்டும் கூடுதல் கவனம் இருந்தால் போதும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்கள் இன்று நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேளையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புது மனிதர்களிடம் பேச வேண்டாம். புதுப்பழக்க வழக்கங்களை வைத்துக் கொள்ள வேண்டாம். தேவையற்ற அவதிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. காலையில் எழுந்தவுடன் குல தெய்வத்தை கும்பிட்டு இந்த நாளை துவங்குங்கள்.கடகம்கடக ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி காணக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தேவையற்ற வேலைகளில் இருந்து உங்களை நீங்களே ஒதுக்கி வைத்துக் கொள்வீர்கள். உங்களுடைய வாழ்வின் நலனுக்காக உங்களுக்கு நீங்களே ஒரு வட்டத்தை போட்டுக் கொள்வீர்கள். இந்த கட்டுப்பாடு எதிர்காலத்தில் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். தேவையற்ற மன கவலைகள் இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஓய்வு தேவைப்படும். கொஞ்சம் வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மன அமைதியோடு தூங்கி உங்களுக்கான ஓய்வை எடுத்துக் கொள்ளுங்கள். ஓடிக்கொண்டே இருந்தால் மட்டும் நன்மை நடக்காது பாத்துக்கோங்க.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை கிடைக்கும். செல்லும் இடமெல்லாம் மரியாதை கிடைக்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், ராஜபோக உபசாரம் தான். இந்த ஞாயிற்றுக்கிழமை சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் உறவுகளோடு வெளியிடங்களுக்கு செல்வீர்கள். மன நிம்மதியை அடைவீர்கள். – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வீட்டில் சண்டை சச்சரவோடு இருந்து வந்த, கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளலாம். பயணங்களால் ஆதாயம் உண்டு.விருச்சிகம்விருச்சிக ராசி காரர்கள் இன்று ரொம்பவும் அமைதியாக இருப்பீர்கள். தேவையற்ற நண்பர்கள் உறவுகள் தொந்தரவு இருந்தாலும், உங்கள் சாந்தத்தை யாராலும் நிலைகுலைக்க முடியாது. மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். மன நிம்மதியை அடைவீர்கள். இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும். கடன் சுமை குறையும். குழந்தைகளுக்கு எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை உயர்த்த முயற்சிகளை மேற்கொள்ளலாம்.மகரம்மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் பதட்டம் இருக்கும். உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்வீர்கள். தாழ்வு மனப்பான்மையின் மூலம் நல்ல வாய்ப்புகள் கைநழுவி போகலாம். உங்கள் பக்கம் நியாயம் இருக்கும்போது, எதற்கும் பயம் வேண்டாம். துணிச்சலோடு பேசி செயல்பட்டால் இந்த நாள் இனிமையான நாளாக அமையும்.கும்பம்கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். நீண்ட தூர பயணத்தின் மூலம் ஆதாயம் உண்டு. புதிய மனிதர்களின் சந்திப்பால் நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால், மேலும் நல்ல பலன் உங்களைத் தேடி வரும்.மீனம்மீன ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். தேவையில்லாமல் கத்தி கூச்சல் போடாதீர்கள். பிள்ளைகளிடம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். அதிக நேரம் கைப்பேசி பார்க்க வேண்டாம். குழந்தைகளுடன் நேரம் செலவு செய்யும் போது, மன அமைதி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam