இன்றைய ராசிபலன் – 26 ஜனவரி 2025

இன்றைய ராசிபலன் – 26 ஜனவரி 2025

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நன்மைகள் நடக்கும். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்வீர்கள். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். மனைவிக்கு ஆடம்பரப் பொருட்களை வாங்கி கொடுத்து, கணவன்மார்கள் சந்தோஷத்தை அடைவீர்கள். புதுசாக திருமணமான தம்பதிகளுக்கு இந்த நாள் இந்த அதிர்ச்சிகள் காத்துக் கொண்டிருக்கிறது. இனிமையான நாள் இந்த நாள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் தேடி வரும். வேலையில் நல்ல உயர்ந்த நிலமைக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இடமாற்றத்தோடு சில ப்ரோமோஷன்களும் உங்கள் வீட்டு கதவை தட்டும். நல்ல வாய்ப்பாக இருந்தால் நிச்சயம் பயன்படுத்திக்கொள்ளுங்கள். வியாபாரத்தில் முதலீட்டின் போது கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தை விரிவு படுத்தக்கூடிய முயற்சிகளில் ஈடுபடலாம்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் சந்தோஷம் இருக்கும். பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் வீட்டிற்கும் தேவையான பொருட்களை ஷாப்பிங் செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். தொலைபேசியின் மூலம் சண்டைகள் வரவும் வாய்ப்புகள் இருக்கிறது‌. மேல் அதிகாரிகளுடன் ஜாக்கிரதையாக பேசுங்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எதிர்பாராத பரிசு பொருட்களும் உங்களை வந்து சேரும். மன மகிழ்ச்சி இருக்கும். வீட்டிற்கு விருந்தாளிகளின் வருகை கொஞ்சம், சுப செலவுகளை ஏற்படுத்தும். இல்லத்தரசிகளுக்கு இன்று மகிழ்ச்சி கொடுக்கும் நாளாக அமையும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத உதவி தக்க சமயத்தில் நன்மை செய்யும். தீராத பிரச்சினைகள், தீராத சிக்கல்கள் வரும்போது தக்க சமயத்தில் உதவி செய்யும் நண்பர்களின் அருமை பெருமைகளையும் உறவினர்களின் அருமை பெருமைகளையும், இன்று நன்றாக புரிந்து கொள்வீர்கள். நல்ல அனுபவங்கள் கிடைக்க கூடிய நாளாக அமையும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் பிரச்சனை புது புது எதிரிகள் உருவாகுவார்கள். உங்களுடைய வெற்றி அடுத்தவர்கள் கண்களை உறுத்தும். கண் திருஷ்டி உண்டாக்கும். இதனால் வீட்டிலும் வேலையிலும் தொழிலிலும் சில பல பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையாக இருங்கள்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பங்களில் இருந்து விடுபடக்கூடிய நாள். மன தெளிவு இருக்கும். புது முடிவுகளை எடுக்கலாம். சுபகாரிய பேச்சுக்களை வீட்டில் துவங்கலாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழலாம். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும்.
விருச்சிகம்
விருச்சக ராசி காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் நன்மையை கொடுக்கும். புது வேலை தேடுவது, வீட்டிற்கு புது பொருட்களை வாங்குவது, புதுசாக ஏதாவது பயிற்சிகள் மேற்கொள்வது, இதுபோல உங்களுக்கு தேவையான விஷயங்களை நீங்கள் துவங்கிக் கொள்ளுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையும். சுப செலவுகள் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். வேலையில் நல்ல பெயர் எடுப்பீர்கள். புது விஷயங்களை ஆர்வத்தோடு கற்றுக் கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு அந்த விஷயத்தை சொல்லிக் கொடுக்கவும் செய்வீர்கள். இதனால் உங்களுடைய நினைவாற்றல் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். உற்சாகம் பிறக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சிரித்து சிரித்து வாய் வலிக்கும். அந்த அளவுக்கு மனமகிழ்ச்சி இருக்கும். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வீர்கள். பிரிந்த காதல் கை கூடி வரும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்த தடை விலகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு மழை தான். நல்ல பெயர் தான். உற்சாகம்தான் சந்தோஷம்தான். எந்த குறையும் இருக்காது. ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் இருக்கும். மனைவி குழந்தை என்று உங்களுடைய இந்த நாள் இனிய நாளாக செல்லும். வண்டி வாகனத்தில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனம் தேவை.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் வேலைகளை சுறுசுறுப்பாக செய்வீர்கள். விடுமுறை நாளை பயனுள்ளபடி மாற்றிக் கொள்வீர்கள். குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குவீர்கள். வெளியிடங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சுப செலவுகள் கொஞ்சம் ஏற்படும். நிதி நிலைமை கொஞ்சம் பற்றாக்குறையாக தான் இருக்கும். இருந்தாலும் நன்மையே நடக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top