மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாராக்கடன் வசூல் ஆகும். சேமிப்பு உயரும். சொத்து சுகம் வாங்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் திருப்தியான நிலை இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடியுங்கள். அதிக வெயில் சமயத்தில், வெளியே போக வேண்டாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஆசைகள் நிறைவேறும் நாளாக இருக்கும். நீண்ட நாள் நீங்கள் கண்ட கனவு இன்று பலிக்க போகிறது. மனதிற்கு பிடித்த விஷயங்கள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடை விலகும். உயர் படிப்புகள் படிக்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தேவையற்ற டென்ஷன் குறையும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளோடு பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். இதெல்லாம் நடந்தாலும் வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் இருக்க வேண்டும். கடமையிலிருந்து தவறக்கூடாது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்லதே நடக்கும். புது நண்பர்களின் அறிமுகம் புதிய நம்பிக்கையை உண்டு பண்ணும். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் மந்தமான போக்கு நிலவும். இருந்தாலும் பெரிசாக பிரச்சனைகள் வராது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். உயர் அதிகாரிகளோடு அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன அமைதி இருக்கும். மனம் தெளிவாக இருக்கும். தெளிவாக சிந்திப்பீர்கள். வாழ்க்கைக்கு தேவையான முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குழப்பத்திலிருந்து விடுபட்டு பிரச்சினைகளுக்கு முடிவு காணும் நாள் இன்று.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வருமானம் பெருகும் சேமிப்பு உயரும் நாள் இன்று.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். காதல் வெளிப்படும். திருமணம் வரை செல்லும். வீட்டில் சுப காரிய தடைகள் விலகும். நீண்ட தூர பயணத்தின் போது கவனம் இருக்கட்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் வீடு தேடி வரும். சேமிப்பு உயரும். கடன் சுமை குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். மாணவர்கள் கல்வியில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத நட்பில் இருந்து விலகி இருப்பது நல்லது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். புது நண்பர்களின் வருகை மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். புதுசாக காதல் மலர்வதற்கும் வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் நிறைய புதுப்புது அனுபவங்களை இன்று கற்றுக் கொள்வீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவு கிடைக்கும். பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வு கிடைக்கும். உங்கள் பேச்சுக்கு மரியாதை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்து டென்ஷன் குறையும். நீண்ட நாள் பகையிலிருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வெயில் நேரத்தில் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுகபோக வாழ்வு இருக்கும். நேரத்திற்கு சாப்பாடு, நேரத்திற்கு தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்ய வேண்டாம். குடும்ப விஷயத்தில் மட்டும் விட்டுக் கொடுப்பது நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு எடுக்கும் நாளாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். எல்லா விஷயங்களும் நல்லபடியாக நடந்தாலும், உங்களுடைய தேவையற்ற பேச்சினால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பேசுவதை குறைக்க வேண்டும் முன்கோபம் வேண்டாம்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam


