நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 28 ஏப்ரல் 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 28 ஏப்ரல் 2026 nithyasubam


– Advertisement –

மேஷம்

மேஷ ராசியினருக்கு இன்று தனலாபம் பெருகும் நாளாகும். வாராக் கடன்கள் வசூலாகும் வாய்ப்புகள் உருவாகும். நிதி நிலை உயர்வடையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உறவுகளுடன் இணக்கமான பொழுதைக் கழித்து உள்ளம் தெளிவுறும். தெய்வ வழிபாடு மன அமைதியை நல்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியினர் இன்று சுறுசுறுப்புடன் செயலாற்ற வேண்டியது அவசியம். காலதாமதம் பல சிக்கல்களை உருவாக்கும். முக்கிய நேர்காணல்கள், சந்திப்புகள் இருப்பின் குறித்த இடத்திற்கு குறித்த நேரத்திற்கு முன்னரே சென்றடைவது நலம். சோம்பலைத் தவிர்த்து, தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகுந்த கவனம் தேவை.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இன்று செலவினங்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ள நாள். சிலர் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படலாம். அதிக வட்டிக்குக் கடன் பெறுவதைத் தவிர்ப்பது நல்லது. இயன்றவரை செலவுகளைக் குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். மற்றபடி தொழில் மற்றும் வியாபாரம் சுமுகமாக நடைபெறும்.

கடகம்

கடக ராசியினருக்கு இன்று நல்லாதரவு பெருகும் நாள். உங்கள் சொற்களுக்கு சபையில் மதிப்பு உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தேவையான நிதி ஆதாரம் கையில் இருக்கும். தெய்வ அருளால் முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உடல்நலக் குறைபாடுகள் அகலும்.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இன்று மனமகிழ்ச்சி பெருகும் நாளாகும். நெடுநாள் பிரிந்திருந்த உறவுகள் மீண்டும் இணையும். காதல் நிறைவேறி, மணவாழ்க்கைக்கு வழிவகுக்கும். மனதிற்கு உகந்தவருடன் இணக்கமான உரையாடலில் ஈடுபட வாய்ப்பு கிட்டும். மனபாரங்கள் நீங்கி, உள்ளம் லேசாகும்.

கன்னி

கன்னி ராசியினர் இன்று வெற்றிகள் குவிப்பீர்கள். புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் மேற்கொள்ளலாம். பிள்ளைகளின் கல்வியில் இருந்த தடங்கல்கள் விலகும். உயர்கல்விக்கான முயற்சிகள் வெற்றி பெறும். வாகனப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை.

– Advertisement –

துலாம்

துலாம் ராசியினருக்கு இன்று கருணை மனம் மேலோங்கும். பிறருக்கு உதவும் எண்ணம் அதிகரிக்கும். பகைவரையும் மன்னித்து நண்பர்களாக்கும் பக்குவம் உண்டாகும். பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். பங்காளித் தகராறுகளுக்கு ஒரு தீர்வு எட்டும். நெடுநாளைய சொத்துப் பிரச்சனைகளுக்கு நல்லதொரு விடிவு காலம் பிறக்கும். உங்கள் மனமாற்றம் வாழ்வினில் உன்னத முன்னேற்றத்தை நல்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினர் இன்று மேன்மையான குணத்துடன் செயல்படுவீர்கள். இடர்ப்பாடுகள் வந்தாலும், அவற்றை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் வெளிப்படும். புதிய மனிதர்களின் அறிமுகம் இனிமையான அனுபவங்களைத் தரும். புதுமையான அனுபவங்கள் கிட்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு

தனுசு ராசியினருக்கு இன்று மன அமைதி நிலவும். பல குழப்பங்களுக்குத் தெளிவு கிட்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிலவி வந்த இடர்ப்பாடுகள் நீங்கும். பகைவர்களின் தொல்லைகள் அகலும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு.

மகரம்

மகர ராசியினருக்கு இன்று பெயர், புகழ், கௌரவம் உயரும். அவமானப்பட்ட இடத்தில் தலைநிமிர்ந்து நிற்பீர்கள். பகைவர் முன்பு சிறந்து வாழ்ந்து காட்டுவீர்கள். மனபாரம் குறையும். இரவு நல்ல உறக்கம் கிட்டும். இயன்றவரை நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நலம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கும்பம்

கும்ப ராசியினர் இன்று நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். அதிகம் பேசுவதைத் தவிருங்கள். சிக்கல்களிலும் பிரச்சனைகளிலும் சிக்கும் வாய்ப்பு உண்டு. எந்தக் காரியத்திலும் அகலக்கால் வைக்க வேண்டாம். அறியாத செயல்களில் தலையிடுவதைத் தவிருங்கள். அன்றாடப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். புதிய முயற்சிகளை இன்று மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.

மீனம்

மீன ராசியினருக்கு இன்று நற்பலன்கள் நிறைந்த நாளாக அமையும். சுப காரியங்களுக்கு உகந்த நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் காணப்படும். கடமைகளைத் தவறாமல் நிறைவேற்றுவீர்கள். கோடைக்காலத்தில் ஆரோக்கியத்தில் தனிக்கவனம் செலுத்துங்கள். போதிய நீர் அருந்துங்கள்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

Scroll to Top
I am Online
I am Online