மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் பக்குவமாக நடந்து கொள்வீர்கள். உங்களிடம் யார் சண்டைக்கு வந்தாலும் சரி, அநாகரிகமாக பேசினாலும் சரி, உங்களுடைய நிலையிலிருந்து நீங்க தடுமாற மாட்டீங்க. பெரிய பெரிய பிரச்சனைகளை எல்லாம் கூட சுலபமாக சமாளித்து விட்டு கடந்து செல்வீர்கள். அனுபவரீதியாக நிறைய நல்லது உங்களுக்கு இன்று நடக்கப்போகிறது. கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்கள் அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மனநிறைவை அடைவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் விட்டுக்கொடுத்து நடப்பீர்கள். எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணம் உங்களுக்குள் வரும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். பொறுமை என்றைக்கும் வீணாகாது என்பதை புரிஞ்சுப்பீங்க. – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். விடுமுறை நாள் என்பதால் கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு இருப்பீர்கள். இருந்தாலும் வீடு குடும்பம் வேலை மனைவி என்று உங்களுடைய சிந்தனை அலைபாயும். இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்வீர்கள் சுப செலவுகள் ஏற்படும் நாள்.கடகம்கடக ராசிக்காரர்கள் இன்று போட்டிப்போட்டு கொண்டே இருப்பீர்கள். எதிலும் விதாண்டா வாதம் வாக்குவாதம் பேசுவீர்கள். அதெல்லாம் வேண்டாம், நிச்சயம் உங்களுக்கான நல்லது கிடைக்கும். அடுத்தவர்களிடம் உங்கள் நியாயத்தை கொண்டு போய் பேசாதீங்க. உங்களுக்கு பிடிக்காத இடத்திலிருந்து ஒதுங்கி வந்து விடுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையும். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வேலை வியாபாரம் எல்லாம் நல்லபடியாக நடக்கும். உங்களுக்கு ஆதரவாக நாலு பேர் பேசுவாங்க. மனதுக்கு ஆறுதல் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை, பிள்ளைகளுடைய எதிர்காலம் பற்றிய சிந்தனை எல்லாம் நல்லபடியாக நடக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம். புதிய வங்கி கடன் முயற்சி செய்யலாம். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவு நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நாளில் கிடைக்கக்கூடிய நேரம் இனிமையாக செல்லும். மீண்டும் மறக்க முடியாத அளவுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்க நிறையவே வாய்ப்புகள் இருக்கு. – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று விரும்பியதெல்லாம் நல்லபடியாக நடக்கும். கேட்ட பொருள் எல்லாம் கிடைக்கும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பிள்ளைகள் இளைஞர்களுக்கு இந்த நாள் இனிய நாள். ஆனால் பெற்றவர்களுக்கு செலவுகளை வர வைக்கக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. பார்த்து ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க.விருச்சிகம்விருச்சிக ராசி காரர்களை பொறுத்தவரை இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். தேவையற்ற வீண் விரயம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஷாப்பிங் போகாதீங்க. வாழ்க்கைத் துணையோடு வம்பு பண்ணாதீங்க. விட்டுக்கொடுத்து செல்லுங்கள். இன்று பணம் செலவானாலும் நாளை வந்துவிடும். ஆனால் வாழ்க்கை துணையோடு பிரச்சனை வந்தால் காலத்திற்கும் பிரச்சனை ஜாக்கிரதை.தனுசுதனுசு ராசிக்காரர்கள் இன்று ஒரு வேலையை லாபம் இல்லாமல் கையில் எடுக்க மாட்டீர்கள். எல்லா விஷயத்திலும் ஆதாயம் பார்ப்பீங்க. நண்பர்கள் உறவுகள் பிள்ளைகள், குடும்பம் எதிலும் பாரபட்சம் கிடையாது. எனக்கு எது லாபம், எது நஷ்டம் என்று உங்களுடைய சுயநலத்தோடு சிந்திக்க கூடிய நாள் இன்றைய நாள். அப்படி தான் இருக்கும் வேறு வழி இல்லை. யாராவது சண்டைக்கு வந்தால் நீங்கதான் சமாளிக்கணும்.மகரம்மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு டென்ஷன் அதிகரிக்கும். தலைவலி வரக்கூட வாய்ப்பு உள்ளது. வீட்டில் விருந்தாளிகளின் வருகை இரட்டிப்பு வேலை என்று கொஞ்சம் சிரமங்கள் வரலாம். அனுசரித்துக் கொள்ளுங்கள்.கும்பம்கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் துணிச்சலாக செயல்படுவீர்கள். பேச்சு, வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று வெளிப்படும். எதிரில் இருப்பவர்களுக்கு இது கஷ்டமாக இருந்தாலும், இதுதான் உண்மை என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். நேர்மையாக இருக்கும் போது புதிய எதிரிகள் உருவாகலாம். பரவால்ல பாத்துக்கலாம்.மீனம்மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நல்ல ஓய்வு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் விலகும். ஏதோ ஒரு மனதிருப்தியோடு இந்த விடுமுறை நாளை நகர்த்திச் செல்வீர்கள். வாழ்க்கை துணைக்கு உதவியாக இருப்பீர்கள்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam