
மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வேலைகள் எல்லாம் சரியாக நடக்கும். எந்த வேலையிலும் முன்வைத்த காலை நீங்கள் பின் வைக்க மாட்டீர்கள். உங்களுடைய திறமை முழுமையாக வெளிப்படும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். வாழ்க்கையில் எப்படியும் ஜெயித்து விடலாம் என்ற துணிச்சல் பிறக்கும். இந்த நாள் இனிய நாள்தான்.ரிஷபம்ரிஷப ராசி காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். சந்தோஷமாக குடும்பத்தோடு இந்த நாளை என்ஜாய் பண்ணுவீங்க. தேவையற்ற கெட்ட பழக்கங்கள் உங்களை விட்டு நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வாழ்க்கையில் இன்னும் முன்னேற வேண்டும் என்ற உத்வேகம் கிடைக்கும். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்று அயராது உழைப்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற பலன் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். வியாபாரத்தில் கைநிறைய லாபம் கிடைக்கும். குடும்பம் குழந்தை மனைவி என்று இந்த நாள் சந்தோஷமாக செல்லும்.கடகம்கடக ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். உங்களுடைய வேலைகளை சரிவர சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை சின்ன சின்ன இடையூறுகள் வந்தாலும் நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்பு கிடையாது. இடையூறுகளை எதிர் கொள்ள கொஞ்சம் துணிச்சல் தேவை. அவ்வளவு தான். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரியாக கவனிக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியமாக இருந்தால் நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். வியாபாரத்திலும் வேலையிலும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். வீட்டில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வரும். விவசாயிகளுக்கு மன நிறைவான நாளாக இருக்கும். சின்ன சின்ன பெட்டி கடை வைத்திருப்பவர்கள் முதல், பெரிய வியாபாரம் செய்பவர்கள் வரை என்றும் அமோகமான லாபத்தை பெறுவீர்கள். – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். எதிலும் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். சுலபமாக உங்களால் எதிலும் ஜெயிக்க முடியாது. இருந்தாலும் இந்த நாளை போராடி வெல்வதற்கு உடம்பிலும் மனதிலும் அதிகமான தெம்பு இருக்கும். கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கும்.விருச்சிகம்விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று தேவையான உதவி தேவையான நேரத்தில் கிடைக்கும். சிக்கலில் சிக்கி இருப்பவர்கள் கூட சுலபமாக அந்த சிக்கலில் இருந்து வெளி வருவீர்கள். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். இனி வாழ்க்கையில் எந்த தவறையெல்லாம் செய்யக்கூடாது என்று இன்று நீங்கள் தெளிவாக புரிந்து கொள்வீர்கள்.தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல அனுபவம் கிடைக்கும். மேலதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்கும். வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். தவறாக புரிந்து கொண்ட கணவன் மனைவி கூட சரியாக புரிந்து கொண்டு, இன்றைய நாளை சந்தோஷமாக ஒன்றாக சேர்ந்து கொண்டாடி மகிழ்வீர்கள்.மகரம்மகர ராசிக்காரர்களுக்கு இன்று தனம் தானியம் நிறைந்த நாளாக இருக்கும். ஏதாவது ஒரு வகையில் கைக்கு பணம் வரும். பிரச்சனைகளை சரி செய்யும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கச் செய்யும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். நீண்ட நாள் கடன் சுமை குறையும். மன நிம்மதி பெறுவீர்கள் இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.கும்பம்கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பமான மனநிலை இருக்கும். எது நல்லது, எது கெட்டது என்று அலசி ஆராய முடியாமல் திண்டாடுவீர்கள். புது முடிவுகளை எடுக்க வேண்டாம். முக்கியமான விஷயங்களை பேசுவதாக இருந்தால் நாளை தள்ளி வையுங்கள். அன்றாட வேலையில் மட்டும் இன்று கவனம் செலுத்தினால் போதும். இறைவனை முழுமையாக நம்புங்கள். நல்லது நடக்கும்.மீனம்மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சலும் இருக்கும். சோம்பேறித்தனமும் இருக்கும். வேலையில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். வியாபாரத்தை பொருத்தவரை எப்போதும் போல செல்லும். பிரச்சனை கிடையாது. ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். இறைவனின் மீது பாரத்தை போடுங்கள். நல்லது நடக்கும் கவலை படாதீங்க.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam