– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக இருக்கும். அந்தந்த வேலைகள் அந்தந்த சரியான நேரத்தில் நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் புது மனிதர்களின் நட்பு நிறைய நல்ல அனுபவங்களை கற்றுக் கொடுக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட தூர பயணங்களை பிளான் பண்ணலாம். சுப செலவுகள் ஏற்படும். சேமிப்பு கொஞ்சம் கரையும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். லாபம் அதிகரிக்கும். வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நல்லது நடக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் வியாபாரத்தில் முன்னேற்றத்தை தரும். படிக்கக்கூடிய மாணவர்களுக்கு நிறைய உதவிகள் கிடைக்கும். படிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு எதிர்பார்த்து படிப்பை படிக்கக்கூடிய வாய்ப்புகள் தானாக வந்து சேரும். அதிர்ஷ்ட காற்று வீசும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்கள் கொஞ்சம் அமைச்சலை கொடுத்தாலும் மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு புது அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு எடுக்கக்கூடிய நாளாக இருக்கும். வயதானவர்களுடைய ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில் கொஞ்சம் ஏற்ற இறக்கம் காணப்படும். இருந்த போதிலும் பிரச்சனைகள் பெருசாக இருக்காது. வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. கடனுக்கு வியாபாரம் செய்யாதீங்க.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூலாகும். சேமிப்பு உயர்த்துவீர்கள். நீண்ட நாட்களாக போராட்டமாக இருந்த கோர்ட் கேஸ் வழக்குகள் உங்கள் பக்கம் சாதகமாக தீர்ப்பாகி பணம் கையை வந்து சேரும். குடும்பத்திற்கும் எதிர்காலத்திற்கும் தேவையான முதலீட்டை செய்யலாம். லாபகரமாக அமையும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு மன நிம்மதியை கொடுக்கும். செலவுக்கு என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு திடீரென்று கடவுள் ரூபத்தில் யாராவது வந்து உதவி செய்வார்கள். இக்கட்டான சூழ்நிலை கொஞ்சம் சரியாகும். வியாபாரம் தொழில் எல்லாம் சுமாராக செல்லும். இறைவனை நம்புங்கள். புது முயற்சிகளை இன்று மேற்கொள்ள வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். வேலையில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. புது வீடு மாற்ற வேண்டும். புது வாகனம் மாற்ற வேண்டும் என்பவர்களுக்கு இன்று நல்லது நடக்கும். முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம்.
தனுசு
தனுசு ராசி காரர்களுக்கு இன்று கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கும். நீண்ட நாள் யோசனை செய்து செய்யாமல் விட்டு வைத்திருந்த காரியங்களை இன்று செய்யுங்கள். நிச்சயம் நல்லபடியாக முடியும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய காரியங்களில் அக்கறை காட்டுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மன கவலை இருக்கும். தேவையில்லாத டென்ஷன் இருக்கும். கணவன் மனைவிக்குள் சண்டை வர வாய்ப்பு உள்ளது. கவனமாக இருங்கள். வீட்டில் எந்த விஷயத்திற்காகவும் பொய் சொல்லி தப்பிக்க வேண்டாம். பிரச்சனையே வந்தாலும் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். உண்மையாக இருங்கள் நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். வாரா கடன் வசூல் ஆகும். வேலையில் பிரமோஷன் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. மேல் அதிகாரிகளை எதிர்த்துக் கொள்ள வேண்டாம். கொஞ்சம் அனுசரித்தால் எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். வியாபாரத்தில் கொஞ்சம் பொறுமையாக இருக்கவும். அவசர முடிவு எடுக்க வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் நினைத்தபடி எல்லாம் நடக்கும். வெளியூர் பயணங்கள் நல்லபடியாக இருக்கும். இறை வழிபாட்டில் மனது நாட்டம் காட்டும். வேலையில் மன நிம்மதி அடைவீர்கள். நிதி நிலைமையில் கொஞ்சம் ஏற்ற இறக்கம் இருக்கும். செலவுகளை சமாளிக்க முடியாது.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam