– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற எதிர்ப்புகள் இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொண்டால் யாராவது ஏதாவது ஒரு குறையை சொல்லி உங்களை பின்னுக்கு தள்ளி விடுவார்கள். அடுத்தவர்கள் சொல்வதை கேட்டு இன்று எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். உங்கள் மனதிற்கு சரி என்று பட்டதை செய்யுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் இருக்கும். அடுத்தவர்களை பார்த்து உங்களுடைய வாழ்க்கையை வாழாதீர்கள். உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறதோ, உங்களுக்கு என்ன வருமானம் இருக்கிறதோ அதற்கு தகுந்தபடி வாழ வேண்டும். அகல கால் வைக்கக் கூடாது. இன்றைய தினம் நிதானம் தான் உங்களுக்கு நல்லதை செய்யும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வேகத்தை விட விவேகம் தான் அதிகமாக இருக்கும். திறமையாக செயல்படுவீர்கள். சிந்தித்து செயல்படுவீர்கள். பிரச்சனைகளை எல்லாம் சுலபமாக சரி செய்வீர்கள். பக்குவம் என்றால் எப்படி இருக்கும் என்பது பல பேர் உங்களை பார்த்து கற்றுக் கொள்வார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். நீங்களே கற்பனையில், நிறைய நெகட்டிவ் விஷயங்களை சிந்திக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் உங்களுக்கு நல்லது மட்டும்தான் அது கடவுள் செய்து கொடுப்பான். கவலை படாதீங்க. மன பயம் விலக இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யுங்கள். பதட்டத்தோடு புது விஷயங்களை துவங்க வேண்டாம்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். நினைத்தபடி எதுவும் நடக்காத காரணத்தால், கொஞ்சம் டென்ஷன் ஏற்படும். இருந்தாலும் அனுசரித்து தான் செல்ல வேண்டும். எல்லா நாளும் ஒரே போல இருக்காது. இறைவனை நம்புங்கள். வேலை செய்ய முடியாதவர்கள், அமைதியாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். கோபத்தை அனாவசியமாக மூன்றாவது நபரிடம் காட்டாதீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கை நிறைய வருமானம் வரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்க இருக்கிறது. ஆடை அணிகலன்கள் வாங்குவதற்கான யோகமும் இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் துவங்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் இருக்கும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுடைய பிரச்சனையில் தலையிட்டு உங்களுடைய பிரச்சனையை அதிகரித்துக் கொள்வீர்கள். தலைகனத்தோடு நடந்து கொள்வீர்கள். சில காரியங்களை எல்லாம் செய்யக்கூடாது என்று உங்களுக்கே தெரியும். ஆனால் வீம்பு பிடித்து போய் செய்து வலிய வம்பில் மாட்டிக் கொள்வீர்கள். உஷாரா இருந்துக்கோங்க.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். செய்யும் காரியங்கள் எல்லாம் வெற்றியடைய காலரை தூக்கி விட்டுக் கொண்டு பேசுவீர்கள். எதிரிகள் முன்பு தலை நிமிர்ந்து வாழ்வீர்கள். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் இன்று உயரும். சந்தோஷமும் அதிகரிக்கும். என்ஜாய் பண்ணுங்க.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியோடு இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வெளிநாட்டில் இருப்பவர்கள் தாயகம் திரும்ப வாய்ப்புகள் உண்டு. வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் விலகும். நிதி நிலைமை சீராகும். கடன் பிரச்சனை சரியாகும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஆசைகள் நிறைவேற கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். மன மகிழ்ச்சியோடு உங்களுக்கு பிடித்த வேலையை செய்து சந்தோஷமடைவீர்கள். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. சுப செலவுகள் ஏற்படும். இன்றைய நாள் சந்தோஷத்திற்கு ஒரு குறைவும் இருக்காது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். பிரச்சனைகளை எல்லாம் தூர தூக்கிப்போட்டு விடுவீர்கள். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். வியாபாரத்தில் கொஞ்சம் டென்ஷன் இருக்கும். முதலீட்டில் கவனம் செலுத்துங்கள். கொடுக்கல் வாங்கலில் சாட்சி ரொம்ப ரொம்ப முக்கியம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். பயணங்கள் நல்லபடியாக இனிதே நடந்து முடியும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். சோசியல் மீடியாவில் அதிக நேரம் செலவு செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள். தெரியாத மனிதர்களின் நட்பு வேண்டாம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam