இன்றைய ராசிபலன் – 29 நவம்பர் 2024

இன்றைய ராசிபலன் – 29 நவம்பர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன வருத்தம் உள்ள நாளாக தான் இருக்கும். சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலை செய்யும் இடத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். வேகத்தோடு நடக்கக் கூடாது. விவேகத்தோடு நடந்து கொள்ளுங்கள். சிந்தித்து செயல்பட்டால் இன்றைய பிரச்சனைகள் விலகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக உங்களுடைய நாளை நகர்த்திச் செல்வீர்கள். மனதிற்கு பிடித்த மனிதர்களை சந்திப்பீர்கள். உற்சாகமாக இருப்பீர்கள். வேலையிலும் தொழிலிலும் எதிர்பார்த்ததை விட நல்லது நடக்கும். லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த விஷயங்களில் நீங்கள் இன்று மனநிறைவு அடைவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த வேலை, நீண்ட நாள் எதிர்பார்த்த பணம் எல்லாம் உங்களை வந்து சேரும். சந்தோஷத்திற்கு குறைவில்லை. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான சுறுசுறுப்பான நாளாக இருக்கும். இதுநாள் வரை உங்களை தொடர்ந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நேரத்தை வீணாக்காமல் சரியாக வேலைகளை செய்வீர்கள். உற்சாகத்தோடு இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். உழைப்புக்கேற்ற வருமானமும் இருக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. எவ்வளவுதான் இழுத்துப்பிடித்தாலும் தேவையற்ற விஷயங்களுக்கு கொஞ்சம் காசு செலவாக வாய்ப்புகள் இருக்கிறது. கூடுமானவரை இன்று ஷாப்பிங் போகாதீங்க, தள்ளுபடி விலையில் எந்த பொருட்களையும் வாங்காதீங்க. ஃபோனில் ஆன்லைனில் அதிக நேரம் இருக்காதீங்க. சோசியல் மீடியாவில் இருக்கும் போது பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் பொறுமையாக நடந்து கொள்வீர்கள். எந்த ஆர்ப்பாட்டமும் இருக்காது. நல்லது நடக்கும். பாராட்டு கிடைக்கும். இருந்தாலும் பெரிய மனுஷன் தன்மை உங்களோடு இருக்கும்‌. வேலையிலும் தொழிலிலும் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் இருக்கும். குடும்ப விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மூன்றாவது நபரை நம்பி குடும்பத்திற்குள் விடாதீர்கள்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சாதனை படைக்கக்கூடிய நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். உயர் கல்வி படிக்க முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெளிநாட்டில் கூட நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். சின்ன சின்ன வியாபாரிகளும் சந்தோஷப்படும் அளவுக்கு நிகழ்வுகள் நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று ரொம்பவும் நுணுக்கமான விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். வாழ்க்கையில் நிறைய பாடங்களை படிப்பீர்கள். நிறைய அனுபவங்கள் உங்களுக்கு கிடைக்கும். வேலையிலும் தொழிலிலும் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து விலகும். இன்று மாலை உடல் சோர்வு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது ரொம்ப ரொம்ப நல்லது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் பொறுமையாக இருப்பீர்கள். பிரச்சனைகள் வரும். எதிரிகளால் வாக்குவாதம் ஏற்படும். நல்ல விஷயங்களை இழப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இருந்தாலும் எல்லாம் விதிப்படி நடக்கிறது என்று நீங்களே உங்களுடைய மனதை தேற்றி கொள்வீர்கள். சின்ன சின்ன இழப்புகளை சந்திக்கும் போது தான் வாழ்க்கையில் பெரிய நன்மைகள் நம்மை தேடி வரும். நல்ல நல்ல அனுபவங்களும் கிடைக்கும். ஆக இன்று எதற்காகவும் சோர்ந்து போக வேண்டாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று புகழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் செய்த வேலை, செய்யாத வேலைக்கும் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு சில பேருக்கு எதிர்பாராமல் வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கும். சில பேருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. வெளிநாட்டில் இருப்பவர்கள் தாயகம் திரும்ப வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் மனது நிறைய இன்று ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். இறைவழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் கோவிலுக்கு சேவை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரம் வேலை எல்லாம் குறித்த நேரத்தில் முடியும். கடமையில் கண்ணியமாக நடந்து கொள்வீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் இருக்கும். சுறுசுறுப்பாக எல்லா வேலையும் முடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வீர்கள். சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைப்பீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும் நிதி நிலைமை மட்டும் கொஞ்சம் சிக்கலாக இருக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top