– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் அதிகப்படியாக நடக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. முதலீட்டில் எச்சரிக்கை வேண்டும். பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று எல்லா வேலையிலும் அதிக அக்கறை காட்டுவீர்கள். கூடுதல் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இதனால் மன திருப்தியும் கிடைக்கும். அதற்கு உண்டான பலனும் கை மேல் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வருமானம் பெருகும். நிதி நிலைமை சீராகும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அலைச்சல் கொஞ்சம் இருக்கும். உடல் சோர்வு இருக்கும். முயற்சிகள் முதல் முறையில் வெற்றி காணாது. தேவையற்ற செலவுகளும் இருக்கும். நிதி நிலைமை பின்னோக்கிச் செல்லும். வியாபாரத்தில் கவனமாக இருக்கவும். அலுவலகப் பணியில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கூடுதல் உழைப்பை போடுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று கவனமாக நடந்து கொள்ள வேண்டும். எந்த வேலையிலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. தேவையற்ற டென்ஷன் வியாபாரத்தில் வரும். பாட்னரோடு சண்டைகள் வரும். தானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கக் கூடாது.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்வீர்கள். பிரச்சனைகள் வந்தாலும் அமைதியாக இருப்பீர்கள். கோபத்தை உங்களுக்கு நீங்களே கட்டுப்படுத்தி வாழ்க்கை போன போக்கில் செல்வீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வந்து போகும். வியாபாரத்தில் கொஞ்சம் கவனம் தேவை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கஷ்டங்கள் விலகக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட தூர பயணத்தின் மூலம் நன்மை இருக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு உற்சாகத்தை கொடுக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். நஷ்டங்களும் இன்று லாபமாக மாறும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான வாழ்வு இருக்கும். நல்ல ஓய்வு நல்ல தூக்கம் நல்ல சாப்பாடு இருக்கும். உற்சாகத்தில் ஒரு துளியும் குறை இருக்காது. நீங்கள் மட்டும் உழைப்பதோடு மட்டுமல்லாமல் உங்களுடன் இருப்பவர்களையும் சேர்த்து வாழ்க்கையில் முன்னேற்றச் செல்வீர்கள். புண்ணியத்தை சேர்த்துக் கொள்வீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நலமான வாழ்க்கை இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைவீர்கள். குடும்ப பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கடன் சுமை குறையும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று புகழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நல்லது தேடி வரும். பயணத்தின் மூலம் நன்மை ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. கட்டுமானத் தொழில் நல்லபடியாக நடக்கும். சில பேருக்கு சொத்து சுகம் வாங்குவதற்கான யோகமும் அமையும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். சிந்தித்து செயல்படுவீர்கள். ஆனாலும் முயற்சிகளில் முழுமையாக கவனம் செலுத்த முடியாது. குழப்பமான மனநிலை இருக்கும்போது, புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம். இறை வழிபாட்டில் மனதை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். பொது பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்வீர்கள். வேலையில் இருந்து கொஞ்சம் ஓய்வு தேவை என்று நினைப்பீர்கள். வியாபாரத்தில் கொஞ்சம் கவன குறைவு ஏற்படும். சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். லாபம் ஏற்ற இறக்கத்தோடு இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். முன் கோபத்தை குறைக்க வேண்டும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளக்கூடாது. பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டிய நாள். இன்று வாய் பேசுவதை குறைத்துக் கொண்டால் எந்த பிரச்சனையும் வராது. மௌனமே இன்று உங்களுக்கான ஆயுதம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam