மேஷம்
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் மனமகிழ்ச்சி பெருகும். கடந்த கால நினைவுகள் உங்களை ஆனந்தப்படுத்தும். பிரிந்திருந்த மனம் விரும்பியவர்களைச் சந்திக்கும் இனிய வாய்ப்பு கிட்டும். தொலைபேசி வழியே நற்செய்திகள் வந்து சேரும். நீண்ட நாள் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் சிறு சிறு எதிர்ப்புகள் எழ வாய்ப்புண்டு. மனதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அன்புக்குரியவர்களின் சொற்கள் சிலவேளை மனதைப் புண்படுத்தக்கூடும். நிதானத்துடன் செயல்படுவது அவசியம். எக்காரணம் கொண்டும் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். ‘எதுவும் கடந்து போகும்’ என்னும் தத்துவத்தை இன்று நினைவில் நிறுத்துங்கள்.
மிதுனம்
மிதுன ராசியினர் இன்று வெற்றி வாகை சூடுவர். உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும். சுபச் செலவுகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். சிறு சிறு ஆசைகள் ஈடேறும். இல்லத்தரசிகளுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டு.
கடகம்
கடக ராசியினருக்கு இன்றைய தினம் தடைகள் உருவாக வாய்ப்புண்டு. புதிய முயற்சிகளை ஒரு நாள் ஒத்திவைப்பது நல்லது. பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். காலத்தை வீணடிப்பதைத் தவிர்க்கவும். அனுபவம் மிக்கோரின் அறிவுரைகளைக் கேட்டு நடக்கவும். உறவினர்களுடன் உரையாடும்போது வார்த்தைகளில் கவனம் தேவை.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இன்று நட்பு ரீதியாகப் பல நன்மைகள் உண்டாகும். புதிய உறவுகளின் அறிமுகம் உங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைச் செய்யலாம்; விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். மாணவர்களின் உயர்கல்விக் கனவுகள் ஈடேறும்.
கன்னி
கன்னி ராசியினர் இன்று மன உறுதியுடன் செயல்பட வேண்டும். துணிவுடன் இருங்கள். சிறு சிறு ஏமாற்றங்கள் ஏற்பட்டாலும், அவற்றைச் கடந்து முயற்சிக்கும் மனப்பக்குவத்தைப் பெற வேண்டும். ஏமாற்றங்களைக் கண்டு துவண்டுவிட வேண்டாம். இறைவழிபாடு செய்து, மனதை ஒருநிலைப்படுத்திக் கொள்ளுங்கள்.
துலாம்
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் லாபகரமான நாளாக அமையும். புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். வங்கிக் கடன் முயற்சிகளில் ஈடுபடலாம். வியாபார விரிவாக்கத்திற்கான புதிய திட்டங்களைச் செயல்படுத்தலாம். புதிய ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளலாம். எதிர்கால சேமிப்பிற்கு பிள்ளையார் சுழி இடலாம். மாணவர்கள் தங்கள் உயர்கல்வி குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கலாம். யாவும் நன்மையில் முடியும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் இன்று உற்சாகத்துடன் காணப்படுவர். உங்களை நீங்களே தேற்றிக்கொள்வீர்கள். சோம்பல் எழும்போது, உங்கள் தோள்களைத் தட்டிக்கொடுத்து உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். இன்றைய நாள் இனிய நாளாக அமையும். பணப்புழக்கம் சீராக இருக்கும். மனமகிழ்ச்சிக்கு எவ்விதக் குறையும் இராது. இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
தனுசு
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் சுபகரமான வாழ்வு கிட்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுறுசுறுப்புடனும் மகிழ்ச்சியுடனும் ஈடுபடுவீர்கள். செல்லும் இடமெல்லாம் மதிப்பும் மரியாதையும் பெருகும். இகழ்ந்தோர் முன்பு தலை நிமிர்ந்து நிற்பீர்கள். எதிரிகளை வீழ்த்துவீர்கள். வெற்றி வாகை சூடவிருக்கும் இந்நாளில், உங்களால் இயன்ற உதவியை இயலாதவர்களுக்குச் செய்து மனமகிழ்ச்சி அடையுங்கள்.
மகரம்
மகர ராசியினருக்கு இன்றைய தினம் சற்று உடல் அசதியும், சோம்பலும் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய அளவில் சுறுசுறுப்பு இருக்காது. அன்றாட முக்கியமான பணிகளை மட்டும் முடித்துவிட்டு, போதுமான ஓய்வை மேற்கொள்ளுங்கள். புதிய முயற்சிகளை நாளைக்கு ஒத்திவைப்பது நலம்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் பெயரும் புகழும் அந்தஸ்தும் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். வெளிநாட்டில் வாழ்பவர்களுக்குத் தாயகம் திரும்புவதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். ஒருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குடும்ப விஷயங்களில் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள்.
மீனம்
மீன ராசியினர் இன்று ஆக்கப்பூர்வமான பல நற்காரியங்களைச் செய்வீர்கள். உங்களின் தேவைகள் பூர்த்தியாகும். நிதிநிலைமை சீராக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய அளவில் பிரச்சனைகள் இராது. குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். ஆயினும், கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்கள் எழக்கூடும். கவனமாகச் செயல்பட வேண்டும். பேச்சைக் குறைத்துக் கொள்வது நன்மை பயக்கும்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam


