நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

Today Rasi Palan 07th April 2026

Today Rasi Palan 07th April 2026

மேஷம்

 

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். சிக்கல்கள், பிரச்சனைகள், கவலைகள் இருந்தாலும் உங்களுக்கு ஆதரவாக நாலு பேர் கட்டாயம் இருப்பாங்க. பிரச்சனைகளுக்கு உண்டான ஆலோசனையை அனுபவசாலிகளிடம் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள். அவசரம் வேண்டாம். முன் கோபம் வேண்டாம். இந்த நாளை நிதானமாக நகர்த்தி செல்லுங்கள்.

ரிஷபம்

 

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு, ஆயிரம் முறை சிந்திக்க வேண்டும். அனுபவ சாலிகளின் ஆலோசனையை கேட்க வேண்டும். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் இன்று அவசர அவசரமாக ஒரு முடிவுக்கு வரவே கூடாது.

– விளம்பரம் –

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எடுத்த உடனேயே வெற்றி கிடைக்க வேண்டும், நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்று, நினைக்க வேண்டாம். நீண்ட போராட்டத்திற்கு பிறகு உங்களுக்கான நல்ல பலன் உங்களை வந்து சேரும். நிதானமாக இருங்கள். தலைகனத்தோடு நடக்க வேண்டாம்.

கடகம்

 

கடக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் அசதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். தேவையான வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாத வேலையை கையில் எடுக்க வேண்டாம். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.

– விளம்பரம் –

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய ஒப்பந்தங்கள் போடலாம். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். முன்பின் தெரியாத நபரை நம்ப வேண்டாம். வீட்டில் இருக்கும் பெண்கள் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய விலை உயர்ந்த ஆபரண அணிகலன்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். ‌

– விளம்பரம் –

துலாம்

 

துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுகபோக வாழ்வு இருக்கும். செல்லும் இடமெல்லாம் மதிப்பு மரியாதையும் உயரும். குடும்ப உறவுகளுக்குள் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். சொத்து சிக்கல்கள் ஒரு முடிவுக்கு வரும். கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மன கசப்பு விலகும்.

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். சோகமாகத்தான் இருப்பீங்க. வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக முன்னேற்றம் இருக்காது. அனாவசியமாக பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளவும்.

தனுசு

 

தனுசு ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களுடைய தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் சுப காரிய தடைகள் விலகும்.

மகரம்

 

மகர ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட நாள் முடிக்க முடியாத, அரசாங்க வேலைகள் இன்று நிறைவடையும். புது மனிதர்களின் நட்பு சந்தோஷத்தை கொடுக்கும். மனம் தெளிவாக சிந்திக்கும். தேவையில்லாத நண்பர்கள் உறவுகளிடம் விலகி நிற்பீர்கள். எதிரி தொல்லை நீங்கும்.

கும்பம்

 

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் இருக்கும். புது முடிவுகளை எடுக்க வேண்டாம். இருக்கும் வேலையை தக்க வைத்துக்கொள்ள சின்னதாக போராட்டம் நடக்கும். எதுவாக இருந்தாலும் மனதை தளர்த்தக்கூடாது. எதிர்த்து போராடும் தைரியம் தேவை. இறை வழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

மீனம்

 

மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன வருத்தம் இருக்கும். உடல் சோர்வு காணப்படும். வெயில் நேரத்தில் செல்வதை தவிர்ப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top
I am Online
I am Online