ஆகஸ்ட் மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

ஆகஸ்ட் மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமான மாதம் திகழப்போகிறது. பொருளாதாரத்தைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். இருப்பினும் செலவுகள் செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் வார்த்தைகளில் கவனம் செலுத்துவது நல்லது. கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
வேலை மற்றும் தொழிலைப் பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. முயற்சிகள் அனைத்திற்கும் நற்பலன்கள் கிடைக்கும். தேவையற்ற பேச்சை தவிர்ப்பது நல்லது. திடீர் அதிர்ஷ்டம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. பங்குச்சந்தை, ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட தொழில்களில் அதிகளவு லாபம் கிடைக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.
– Advertisement –

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பண வரவு ஏற்படும். ஒரு சிலருக்கு திடீர் பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது. சொத்துக்கள் வாங்கும் அமைப்பு உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதற்குரிய பலன்கள் எதையும் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை நல்ல லாபம் கிடைக்கும். கடினமாக உழைத்து எதிர்பார்த்ததை விட அதிகமான வெற்றியை பெறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு மகாலட்சுமியை வழிபட வேண்டும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மாற்றங்கள் நிறைந்த மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு இருக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. கவனம் தேவை. தேவையற்ற வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கோபத்தை கட்டுப்படுத்தினாலே பல பிரச்சினைகளை தவிர்க்க முடியும். தேவையில்லாத குழப்பங்களும் வாக்குவாதங்களும் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
வேலையைப் பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்றார் போல் சலுகைகளும் அதிகரிக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை மிகப் பெரிய வளர்ச்சிக்கு கொண்டு போகக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.
– Advertisement –

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிம்மதி பெருமூச்சு விடும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பண வரவும் அதிர்ஷ்டமும் உண்டாகும் சூழ்நிலை உண்டாகும். நகை, நிலம் வாங்குவதற்குரிய யோகமும் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகளும் மனக்கசப்புகளும் நீங்கும். வீட்டிற்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் வாங்க முற்படுவீர்கள். திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.
வேலையை பொருத்தவரை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. புதிதாக வேலை தேடுபவருக்கு சாதகமான காலமாக திகழ்கிறது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். இருப்பினும் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானையும் பார்வதி அம்மனையும் வழிபட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கம் நிறைந்த மாதமாக திகழப்போகிறது. ஒரு சிலருக்கு எதிர்ப்பாராத அதிர்ஷ்டம் ஏற்படக்கூடும். பொருளாதாரத்தை பொருத்தவரை திடீர் பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது. அதே சமயம் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவர் ரீதியான செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமணத்திற்காக முயற்சி செய்பவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. எதிர்பார்த்த உயர் பதவிகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. வேலை சுமை அதிகரிக்கும். கடின உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். இருப்பினும் அதிக அளவில் முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும்.
கன்னி
கன்னி ராசிகாரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பண வரவு ஏற்படும். இருப்பினும் செலவுகள் அதிகரித்துக் கொண்டே செல்லும். குடும்பத்தில் பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்படுவது மிகவும் முக்கியம். பேச்சில் கவனம் தேவை. திருமணத்திற்காக முயற்சி செய்பவர்கள் இந்த மாதத்தை தவிர்ப்பது நல்லது. கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை எந்த அளவிற்கு சிறப்பாக செய்தாலும் அதனால் எந்தவித பலனும் ஏற்படாத ஒரு சூழ்நிலை உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது என்றாலும் நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்தி கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு அர்த்தநாரீஸ்வரரை வழிபட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் லாபகரமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு திடீர் பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். சேமிப்புகள் உயர்வதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. திருமணத்திற்காக முயற்சி செய்பவர்கள் இந்த மாதத்தை தவிர்ப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களுடன் பழகுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். இல்லையேல் சங்கடங்கள் உண்டாகும். ஆடம்பர செலவுகள் எதையும் செய்வதை தவிர்க்க வேண்டும். இல்லையேல் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
வேலையை பொருத்தவரை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். வேலையில் முழு கவனம் செலுத்தி செய்வது இன்னும் பல அனுகூலமான தன்மையை கொடுக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததைவிட அதிக அளவு லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளை மேற்கொண்டு தொழிலை நல்ல முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு அம்பாளை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது. முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். பேரும் புகழும் கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நல்ல காரியங்கள் நடைபெறும். வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான மாதமாக அமையும். திருமண முயற்சிகள் வெற்றியைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பருவ கால நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
வேலையை பொருத்தவரை இடமாற்றம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. அந்த இடமாற்றத்தை ஏற்றுக் கொண்டு வேலையை செய்வதன் மூலம் நல்ல சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும் என்றாலும் தொழிலில் புதிதாக முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றகரமான மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். அதற்கு இணையாக செலவுகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கூடுதல் வருமானம் பெறுவதற்கு அதிகளவில் முயற்சி செய்து கடன்களை அடைப்பதில் கவனம் செலுத்துவீர்கள். பூர்வீக சொத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். திருமண முயற்சிகள் வெற்றி பெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகரிக்கும். பொறுமையை கடைப்பிடிப்பதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகளை பெற முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பைரவரை வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஆசைகள் நிறைவேறும் மாதமாக திகழப் போகிறது. நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும். பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். கடன் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மூன்றாவது நபரின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. பணத்தை சேமிக்க முயற்சி செய்ய வேண்டும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது.
வேலையை பொருத்தவரை சாதகமான மாதமாக திகழப்போகிறது. புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என்றாலும் அந்த பணம் கைக்கு வருவதில் சிறிது தாமதம் ஏற்படும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலனை கிடைக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மன நிம்மதி பெறும் மாதமாக திகழப் போகிறது. இதுவரை இருந்து வந்த நெருக்கடிகள் அனைத்தும் நீங்கும். பிரச்சினைகள் விலகும். ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தன்னம்பிக்கை குறையாமல் செயல்படுவதன் மூலம் பல அற்புதமான பலன்களை பெற முடியும். பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். செலவுக்கேற்ற வரவு உண்டாகும். சொத்துக்கள் வாங்குவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது. குடும்பத்தில் மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. விட்டு கொடுத்து செல்வது நன்மையை தரும். பேச்சில் கவனம் செலுத்துவது நல்லது . உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
வேலையை பொருத்தவரை சாதகமற்ற சூழ்நிலையை நிலவுகிறது. எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அதற்குரிய பலனை பெற முடியாது. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதம் சாதகமாக இல்லை. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று சிரமமாகவே இருக்கும். முழு கவனத்துடன் செய்வதன் மூலமே நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு நரசிம்மரை வழிபட வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மங்களகரமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு ஏற்படாது. அதே சமயம் தேவையில்லாத வீண் விரயங்களும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். திருமணம் கைகூடும். வருமானத்தை சேமிப்பாக மாற்ற முயற்சி செய்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறிது உடல்நல பாதிப்பு ஏற்பட்டாலும் உடனே அதை சரி செய்து விட வேண்டும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை கவனத்துடனும் திறமையுடனும் செய்து முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்வதற்கு முன்பு ஒரு முறைக்கு பலமுறை தீர்க்கமாக ஆலோசித்து பிறகு முதலீடு செய்ய வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top