மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகப்பெரிய அளவில் நல்ல மாற்றங்கள் வரப்போகிறது. பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்கால சேமிப்புக்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலையில் பிரமோஷன் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. மாணவர்களுக்கு எதிர்பாராத அளவு கல்வியில் உயர்வு உண்டாகும். வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கெல்லாம் நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். இந்த மாதம் வரக்கூடிய பண்டிகையெல்லாம் உங்கள் குடும்பத்தில் இனிதே நடைபெறும். சனிக்கிழமை தோறும் சிவன் கோவிலில் இருக்கும் விநாயகரை கும்பிடுங்கள்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்கள் இந்த மாதம் பலவிதமான தடைகளை கடந்து வந்து சாதிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வேலையாக இருந்தாலும், வியாபாரமாக இருந்தாலும், பொறுமையாக செயல்பட வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ளக்கூடாது. நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்கள் கைக்கு வராது. நிதி நிலைமை கொஞ்சம் பிரச்சினையாக தான் இருக்கும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கொடுக்கல் வாங்கலில் ஜாமின் கையெழுத்து போடாதீங்க. மன கவலையிலிருந்து விடுபட வெள்ளிக்கிழமை அம்மனை கும்பிடுங்கள். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்கள் இன்று மன உறுதியோடு செயல்படுவீர்கள். துணிச்சல் வெளிப்படும். நீங்கள் எடுக்கும் முடிவு அவ்வளவு சரியானதாக இருக்கும். உங்களுடைய தொலைநோக்குப் பார்வையின் மூலமாக நிறைய பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். புத்திசாலித்தனத்தோடு நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராமல் நடந்து கொள்கிறீர்கள். நீண்ட நாள் துன்பங்கள் துயரங்களில் இருந்து விடுபட்டு, மன நிம்மதியை அடைப்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். பயணங்களின் போது மட்டும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டாம். செவ்வாய்க்கிழமை தோறும் முருகரை கும்பிடுங்கள்.கடகம்கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த மாதம் படிப்படியான முன்னேற்றத்திற்கு பிள்ளையார் சுழி போடக்கூடிய வாரமாக இருக்கப் போகிறது. வேலையிலும் வியாபாரத்திலும் நீங்கள் நினைத்ததை விட உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள். எந்த பிரச்சினையை நினைத்தும் கவலை கொள்ள வேண்டாம். இறைவனின் பரிபூரண அருள் உங்களுக்கு இருக்கும். ஏற்கனவே எடுத்த முடிவுகளை மீண்டும் மீண்டும் யோசித்து குழப்பிக் கொள்ளாதீர்கள். இனி நடக்கப் போவது என்ன என்பதை மட்டும் கவனித்துக் கொண்டால் போதும். இந்த மாதம் செலவுகளை கொஞ்சம் கட்டுப்படுத்த முடியாது. பண்டிகை காலமல்லவா. ஆகவே சேமிப்பை கொஞ்சம் ஜாக்கிரதையாக பார்த்துக்கோங்க. நீண்ட தூர பயணங்களில் போது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தினம் தோறும் ஒரு வாயில்லா ஜீவனுக்கு உங்கள் கையால் உணவு கொடுங்கள் நன்மைகள் நடக்கும். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இந்த மாதம் நினைத்த நல்ல காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். உங்களுடைய பெயர் புகழ் அந்தஸ்து சமுதாயத்தில் உயர்ந்த இடத்திற்கு செல்லும். நீண்ட நாள் வராத பணம் உங்கள் கையை வந்து சேரும். வாராக்கடன் வசூலாகி சாதனை படைப்பீர்கள். உங்களுக்கான சொத்து சுகம் சேர்க்கையும் இருக்கிறது. வேலையில் அயராது உழைத்து நல்ல பெயர் எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சில பேருக்கு வேலை பளு அதிகமாக இருக்கும். இந்த மாதம் இறுதியில் நீங்கள் எதிர் பார்த்த நல்லது எல்லாம், நல்லபடியாக நடக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். உங்களால் முடிந்தால், வாரத்தில் ஒரு நாள் பசியோடு இருக்கும் ஒரு நபருக்கு சாப்பாடு வாங்கி கொடுங்க.கன்னிகன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த அக்டோபர் மாதம் அயராது உழைக்க வேண்டும். சோம்பேறித்தனம் இருக்க வேண்டாம். சொன்ன நேரத்திற்கு சொன்ன வேலையை முடித்துக் கொடுக்க வேண்டும். கைபேசியை அதிக நேரம் பயன்படுத்தாதீங்க. அடுத்தவர்களுடைய வாழ்க்கை பிரச்சனையில் மூக்கை நுழைக்க வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நிதானம் தேவை. சொந்த பந்தத்தோடு வாக்குவாதம் செய்து சண்டை போடக்கூடாது. கணவரை அனுசரித்து செல்லவும். தினமும் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது. – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த மாதம் உங்கள் வாழ்க்கை பயணம் முன்னேற்ற பாதையை நோக்கி நகரும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வேலையில் புதிய பிரமோஷன் கிடைக்கும். வேறொரு இடத்திற்கு இடம் மாற்றம் செய்யவும் வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரத்தை பொருத்தவரை நீங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். புதிய முதலீடுகள் செய்யலாம். புதிய விளம்பரங்கள் செய்யலாம். புது தொழில் துவங்கலாம். மாணவர்கள் இந்த மாதம் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திருமண வாழ்க்கையில் கூடுதல் கவனம் தேவை. கணவன் மனைவி வாக்குவாதம் செய்யக்கூடாது. ஒருவருக்கு ஒருவர் பொய் சொல்லி தப்பிக்க கூடாது. செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இந்த மாதம் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். போட்டிகள் பொறாமைகள் எதிரிகள் தொல்லை இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை பின் தொடரும். எவ்வளவுதான் நல்ல மனிதனாக நடந்து கொண்டாலும், உங்களுக்கு அவ பெயர் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக இருந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நன்மை நடக்கும். வாரா கடன் வசூல் ஆகும். சொத்து சுகம் சேர வாய்ப்புகள் இருக்கிறது.தனுசுதனுசு ராசிக்காரர்கள் இந்த அக்டோபர் மாதத்தில் நிறைய அலைச்சலான விஷயங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். ஒரு வேலையை 10 முறை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். நீண்ட தூர பயணங்கள் உண்டாகும். அலைச்சல் ஏற்படும். ஆனால் இறுதியில் வெற்றி உங்களுக்கு. பல பிரச்சனைகளுக்குப் பிறகு கடவுள் உங்களுக்கு வெற்றியை கொடுக்க போகின்றான். ஆகவே இந்த மாதம் நீங்கள் பிரச்சனைகளை கண்டு துவண்டு போய் உட்காரவே கூடாது. ஆரோக்கியத்தில் கூட இந்த மாத இறுதியில் நல்ல முன்னேற்றத்தை அடையப் போகிறீர்கள். அனுமனை கும்பிடுங்கள். கஷ்ட காலத்தில் நல்லது நடக்கும்.மகரம்மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த மாதம் உங்களுடைய புத்தி கூர்மை அதிகரிக்கும். தொலைநோக்குப் பார்வை சிந்தனை, உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சினைகள் இருந்து உங்களை காப்பாற்றி கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் திறமையாக செயல்படுவீர்கள். பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு எல்லாம் கூட ஒரு நொடி பொழுதில் தீர்வு கொடுக்கும் திறன் உங்களிடம் வெளிப்படும். பாராட்டு கிடைக்கும். முன்னேற்றம் கிடைக்கும். குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகிவிடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். குழந்தைகளுடைய நலனில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மன நிம்மதி இருக்கும். சந்தோஷம் பெருகும். நரசிம்மர் வழிபாடு இந்த மாதம் உங்களை நல்வழிப்படுத்தும்.கும்பம்கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த மாதம் மனதிற்கு பிடித்த நல்ல விஷயங்கள் நடக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பார்க்காத உறவுகள் நண்பர்களை சந்திப்பதற்கு வாய்ப்புகள் உண்டாகும். இந்த மாதப் பண்டிகை உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத பண்டிகையாக அமையும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். செலவுகள் கொஞ்சம் கட்டுக்கடங்காமல் செல்லும். பொறுப்புகள் அதிகரிக்கும். பண்டிகை நாட்களில் இயலாத இரண்டு பேருக்கு புத்தாடைகளை தானமாக கொடுங்கள் நல்லது நடக்கும்.மீனம்மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த மாதம் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். பிரச்சனைகளை கண்டு பயப்பட மாட்டீங்க. பிரச்சனைகள் உங்களை கண்டு பயந்து ஓட செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். மாமியார் வழி உறவுகளோடு பேசும்போது மட்டும் கவனமாக இருக்க வேண்டும். மனைவியோடு வாக்குவாதம் சண்டை வேண்டாம். கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடந்தால் விட்டதை எல்லாம் படித்து விடுவீர்கள். நிதி நிலைமை சீராகும். பண்டிகையை சந்தோஷமாக கொண்டாட கூடிய வாய்ப்புகளும் அமையும். நல்லது நடக்கும். மீனாட்சியம்மன் வழிபாடு உங்களை நல்வழிப்படுத்தும்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam