ஆனி மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

ஆனி மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றம் மிகுந்த மாதமாக திகழப் போகிறது. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கௌரவம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஒரு சிலருக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த காரியங்கள் விரைவிலேயே நிறைவேறும்.
தொழிலில் நல்ல லாபம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சி உண்டாகும். செல்வ செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு சொத்து, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மாதமாக திகழப்போகிறது. பணம் சம்பாதிப்பது தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். எந்த அளவுக்கு பணவரவு இருக்கிறதோ அதே அளவிற்கு செலவுகளும் அதிகரிக்கும். வீண் விரயங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளும், ஒப்பந்தங்களும் தேடிவரும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்களின் திறமையை வெளிப்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.
தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அதனால் நிதிநிலை அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். உடல் நலனில் கவனம் தேவை. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் மாதமாக இந்த மாதம் திகழப்போகிறது. எந்த ஒரு முடிவையும் திறம்பட எடுப்பீர்கள். அரசு பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சாதகமான பதில் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வேலை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றமும், வளர்ச்சியும் ஏற்படும்.
ஒரு சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் கடினமான சூழ்நிலை ஏற்பட்டாலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதன் மூலம் அதில் நல்ல பலனை பெற முடியும். எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியைத் தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு நரசிம்மரை வழிபட வேண்டும்.
– Advertisement –

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வரவை மிஞ்சிய செலவு ஏற்படும் மாதமாக திகழப் போகிறது. ஒரு சிலருக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. போட்டிகள் அதிகரிக்கும் சூழ்நிலை உண்டாகும். அதனால் சரியாக திட்டமிட்டு செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் வருமானம் சிறப்பாக இருக்கும். என்னதான் வருமானம் சிறப்பாக இருந்தாலும் செலவுகள் அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும் என்பதால் வீண் விரயங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது.
குடும்பத்தில் இருக்கும் உறவுகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து முடிந்த அளவிற்கு விட்டுக் கொடுத்து செல்வது மனஸ்தாபத்தை குறைக்கும். உடல் நலனில் கவனமாக இருக்க வேண்டும். வேலையில் எதிர்பார்த்த அளவிற்கு மாற்றங்கள் ஏற்படாது. மறைமுக எதிரிகளால் பிரச்சனைகள் உண்டாகும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சனி பகவானை வழிபட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றிகரமான மாதமாக திகழப் போகிறது. இந்த மாதத்தில் பலவிதத்தில் நன்மைகளை பெறுவீர்கள். உறுதியான மனநிலை உண்டாகும். தொழிலிலும் வியாபாரத்திலும் உங்களுடைய உழைப்பிற்கேற்ற லாபத்தை நீங்கள் அடைவீர்கள். வேலை தொடர்பான விஷயங்களில் உழைப்பிற்கு ஏற்ற பதவி உயர்வு கிடைக்கும். இதனால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் லாபமும் சேமிப்பும் அதிகரிக்கும்.
குடும்பத்தில் இருக்கும் அனைவரும் மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் இருப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வேலையிலும் தொழிலிலும் நினைத்த வெற்றியை அடைவீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமான பலன்களை தரும் மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். எதிர்பாராத வகையில் பல ஆதாயமான விஷயங்கள் நடைபெறும். தொழில் தொடர்பாக வெளியூர் பயணங்கள் வெற்றியைத் தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். இருப்பினும் அதிக போட்டிகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும்.
வேலையில் வேலை சுமை அதிகமாக இருந்தாலும் அதை திறம்பட செய்து முடித்து எதிர்பார்த்த சலுகைகளை பெறுவீர்கள். இழந்த மதிப்பையும் மரியாதையையும் பெரும் மாதமாக இந்த மாதம் திகழும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக செயல்பட வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அனுசரித்து விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். உடல் நலனில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு நடராஜரை வழிபட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்கும் மாதமாக திகழப்போகிறது. நீண்ட நாட்களாக வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்று முயற்சி செய்தவர்களுக்கு அந்த முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.
தொழிலைப் பொறுத்தவரை எதிர் பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் இருக்கும் உறவினர்கள் ஆதரவு கரம் நீட்டுவார்கள். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு மகாலட்சுமியை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கௌரவம் அதிகரிக்கும் மாதமாக திகழப் போகிறது. சமூகத்தில் உயரிய அந்தஸ்தையும் செல்வாக்கையும் பெறுவீர்கள். கடினமான காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒரு சிலருக்கு வேலை ரீதியாக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதனால் வேலையில் கூடுதல் கவனம் செலுத்தி கடினமாக உழைக்க வேண்டும்.
எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு ஏற்படுவது சற்று சிரமமாக இருக்கும். வரவை விட செலவு அதிகரிக்கும். முடிந்த அளவிற்கு திட்டமிட்டு பணத்தை செலவு செய்ய வேண்டும். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்த்தால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கலவையான பலன்களை பெறும் மாதமாக திகழப் போகிறது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் வெளிவட்டார பழக்கவழக்கங்களில் நல்ல ஆதரவு கிடைக்கும். வேலை மற்றும் தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை நல்ல முன்னேற்றமும் லாபமும் உண்டாகும்.
முடிந்த அளவிற்கு பணத்தை கையாளும் பொழுது சற்று கவனத்துடன் கையாள வேண்டும். தேவைக்கேற்ற பண வரவு ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். அதனால் உற்சாகமாக செயல்படுவீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மாதமாக திகழப் போகிறது. நீண்ட நாட்களாக பொருளாதாரத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படி படியாக குறையும். பணப்பரிவர்த்தனை அதிக அளவில் ஏற்படும். இருப்பினும் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. வேலை தொடர்பாக இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் இருந்து வந்த போட்டிகள் அனைத்தும் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது அதிக அளவில் கவனம் செலுத்தினால் நல்ல பலனை பெற முடியும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பொறுமையுடன் பேசுவது நன்மையை ஏற்படுத்தும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பைரவரை வழிபட வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக திகழப்போகிறது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் புதிய வாய்ப்புகள் ஏற்படும். வேலையில் நல்ல பலன்கள் உண்டாகும். தொழிலில் அதிக அளவு லாபம் ஏற்படும். பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு அதிகமாகும். இருப்பினும் செலவுகளை கட்டுப்படுத்தி சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். யார் பெரியவர் என்று போட்டி போடாமல் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். இல்லையேல் மன கவலைக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடல் நலனில் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சற்று சஞ்சலம் மிகுந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு பணவரவு ஏற்படாது. இருப்பினும் பிறரிடம் இருந்து கடன் வாங்குவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. வேலையில் அதிக அளவு வேலை சுமை இருக்கும். முயன்ற அளவிற்கு வேலையை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்.
தொழிலை பொருத்த வரை லாபகரமான சூழ்நிலை ஏற்பட்டாலும் கடினமான போட்டியை சமாளிக்க வேண்டிய நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். இருப்பினும் மன அழுத்தம் காரணமாக யாரிடமும் தேவையற்ற பேச்சுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு வராகி அம்மனை வழிபட வேண்டும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top