ஏப்ரல் மாத ராசி பலன் 2025 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

ஏப்ரல் மாத ராசி பலன் 2025 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றம் தரக்கூடிய மாதமாக இருக்கும். புதிய முடிவுகளை மேற்கொள்ளலாம். புது வேலைக்கு முயற்சி செய்யலாம். புதுசாக வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு இருந்த கெட்ட பெயர் நீங்கும். வியாபாரத்தில் திறமையாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகளை எல்லாம் சமூகமாக முடித்து விடுவீர்கள். பேச்சு திறமை வெளிப்படும் மாதமாக இந்த மாதம் இருக்கும். சிக்கலான சூழ்நிலை வரும் சமயத்திலும் உங்களுடைய சாதுரிய திறமையால் சிக்கலை, சுலபமாக சரி செய்து விடுவீர்கள். இந்த மாதம் படிக்க முடியாத ஏழை குழந்தைகளுக்கு இருநூறு ரூபாய் செலவு செய்து உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் நன்மை நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த மாதம் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். கொஞ்சம் கூட சோம்பேறித்தனத்தோடு அமரக்கூடாது. அன்றைக்கான வேலையை அன்றே செய்து முடிப்பது நல்லது. நாளை என்ற வார்த்தை உங்கள் அகராதியில் இருந்தால், வாழ்க்கையில் பின்னடைவு உண்டாகும். ஜாக்கிரதை, மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெற்றவர்கள் பிள்ளைகளுடைய நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வரக்கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அனுபவ சாலிகளுடைய பேச்சை தட்டிக் கழிக்க வேண்டாம். எப்போதும் வீட்டு மொட்டை மாடியில் வெளிப்பக்கத்தில், வாயில ஜீவன்களுக்கு உங்கள் கையால் தண்ணீர் வையுங்கள்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சில பல பிரச்சனைகள் வரக்கூடிய மாதமாகத் தான் இருக்கும். உடனே பயப்பட வேண்டாம். எல்லா விஷயத்திலும் வெளிப்படையாக பேச வேண்டும். உண்மையை மறைக்கக்கூடாது. பொய் சொல்லக்கூடாது. குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கக்கூடாது. நேர்மையாக இருக்க வேண்டும். வெளிப்படையான பேச்சு உங்களை இந்த மாதம் காப்பாற்றி விடும். வேலையாக இருக்கட்டும், வியாபாரமாக இருக்கட்டும், சொந்த விஷயமாக இருந்தாலும், மனதில் பட்டதை பளிச்சுன்னு பேசுங்க. யாராவது தவறு செய்தால் அதை சுட்டிக் காட்டுங்கள். மௌனமாக இருந்தால் இந்த மாதம் இக்கட்டான பிரச்சனையில் சிக்கிக் கொள்வீர்கள். வெயிலில் கஷ்டப்படும் வியாபாரிக்கு செருப்பு வாங்கி தானம் கொடுங்கள் நன்மை நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த மாதம் எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நேரமும் காலமும் வரும். வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் உங்கள் தலைமையில் வந்து விழும். பொறுப்புகளை சமாளிப்பதில் சிரமம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வீட்டு வேலையையும் அலுவலக வேலையையும் சமாளிக்க முடியாத சூழ்நிலை நிலவும். இந்த மாதம் பெண்கள் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். முன்கூட்டியே எல்லா வேலைகளையும் பொறுப்போடு முடித்து வைத்து விட வேண்டும். சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. ஜாக்கிரதை, மற்றபடி வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். அதிக வெயிலில் வெளியே செல்ல வேண்டாம். தினமும் 10 நிமிடம் மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை நினைத்து தியானம் செய்யுங்கள்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கும். வேலையில் பிரச்சனை வரும். வியாபாரத்தில் பிரச்சனை வரும். இருந்தாலும் துணிந்து எதிர்கொள்வீர்கள். எதிரிகளை நேருக்கு நேர் மோதி ஜெயித்து காட்டுவீர்கள். சில எதிரிகள் உங்களிடம் சரண் அடைவார்கள். சில எதிரிகள் உங்களை விட்டு விலகி விடுவார்கள். இதுநாள் வரை அமைதியாக இருந்த நீங்கள், பொங்கி எழுந்தால் என்ன நடக்கும் என்பதை உலகத்திற்கு காண்பித்து விடுவீர்கள். இருக்கும் பிரச்சினைகளில் இருந்து வெளிவந்து மன நிம்மதியை அடைவீர்கள். நீண்ட நாள் கடன் சுமை குறையும். வருமானம் உயரும். வீட்டிற்கு தேவையான பொன் பொருள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். சாதிக்க முடியாத விஷயங்களை சாதித்து வெற்றி கொள்ளக் கூடிய மாதம் இந்த மாதம். குல தெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இந்த மாதம் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். யாரையும் முழுசாக நம்ப கூடாது. குடும்ப விஷயங்களை வெளிநபர்களோடு பகிர்ந்து கொள்ள கூடாது. நீங்கள் யாரிடமாவது கைநீட்டி பணம் வாங்கி இருந்தால், அதை சரியான நேரத்தில் திருப்பிக் கொடுக்கவும். அப்படி திருப்பி கடனை திருப்பிக் கொடுக்க முடியாத பட்சத்தில், கடனை விரைவில் திருப்பி தந்து விடுவேன், என்று குறிப்பிட்ட நபரிடம் வெளிப்படையாக பேசுங்கள். எந்த விஷயத்தையும் மறக்காதீர்கள். கைநீட்டி யாரிடம் கடன் வாங்கினீங்களோ, அவர்களை அலட்சியப்படுத்தினால், தேவையற்ற அவமானங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருக்கவும். கணவன் மனைவிக்குள் எந்த ஒலிவு மறைவும் இருக்கக் கூடாது. பிள்ளைகளுடைய எதிர்காலத்திலும் கூடுதல் கவனம் தேவை. தினமும் பிள்ளையார் வழிபாடு செய்வது நல்லது.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த மாதம் முழுவதும் நேரத்தை பொன் போல பாதுகாக்க வேண்டும். நேரத்தை அனாவசியமாக செலவு செய்தால், பிரச்சனை உங்களுக்குத்தான். மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். பொழுதுபோக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். குறிப்பாக செல்போனில் ரிலீஸ் பார்ப்பது, ஃபேஸ்புக் பார்ப்பது, இதுபோல பழக்கத்தை குறைப்பது நல்லது. மாணவர்கள் கையில் கைபேசி கொடுக்க வேண்டாம். உஷாராக இருந்தால் மட்டுமே இந்த மாதம் உங்களால் சாதிக்க முடியும். இல்லையென்றால் பிரச்சனையில் சிக்கிக் கொள்வீர்கள். ஜாக்கிரதை தினமும் அம்மன் வழிபாடு செய்யுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இந்த மாதம் மன உறுதியோடு இருப்பீர்கள். எவ்வளவு பெரிய பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், மனம் துவண்டு போக மாட்டீர்கள். சோர்ந்து போக மாட்டீர்கள். கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று நேர்வழியில் நடந்து கொள்வீர்கள். இதுவே பல பேருக்கு பிரச்சனையாக இருக்கும். உங்களுடைய திறமையை பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு, உங்களுடைய உழைப்பு, இந்த மாதம் அதிகமாக இருக்கப் போகிறது. இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கிறது. வேலையில் முன்னேற்றம், வியாபாரத்தில் முன்னேற்றம் என்று கடின உழைப்பால் உங்கள் வாழ்க்கை பாதையில் முன்னேற்றம் காண்பிப்பீர்கள். தினமும் பசு மாட்டிற்கு இரண்டு வாழைப்பழம் வாங்கிக் கொள்ளுங்கள். மேலும் நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டு மாதமாக இருக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தொல்லை கொடுத்து வந்த மேல் அதிகாரி மாற்றம் ஆகி விடுவார், அல்லது உங்களுக்கு இடம் மாற்றம் கிடைத்துவிடும். அக்கம் பக்கம் வீட்டாரிடம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிரி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இப்படி பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு பெரும் மூச்சு, நிம்மதியான மூச்சு, விடக்கூடிய நேரம் காலம் வந்துவிட்டது. இந்த ஏப்ரல் மாதத்தில் உங்களுடைய முன்னேற்றம் படிப்படியாக உயரும் தினமும் பைரவரை கும்பிடுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கம் நிறைந்த மாதமாக இருக்கும். நன்மைகள் பல நடந்தாலும், உங்களுடைய எண்ணங்களில் சிறிது குழப்பம் இருக்கும். என்ன முடிவை எடுப்பது என்று தடுமாறுவீர்கள். எண்ணத்தை எப்போதும் தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். மூன்றாவது நபருடைய பேச்சை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் அகல கால் வைக்க வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடக்கவும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வோம். வியாபாரத்தில் அனுசரணையோடு நடந்து கொள்ளுங்கள். பண இழப்பு பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை, நரசிம்மர் வழிபாடு செய்வது உங்களுக்கு நன்மையை தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மனதிற்கு பிடித்த விஷயங்கள் நடக்கப் போகிறது. நீண்ட நாள் பிரிந்த உறவுகளோடு ஒன்று சேருவீர்கள். வெளியூரில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள், சொந்த ஊர் திரும்பி உங்கள் மனைவி பிள்ளைகளை பார்க்கக்கூடிய வாய்ப்புகளும் இருக்கிறது. சந்தோஷம் இரட்டிப்பாகும் மாதம் இது. முதல் விஷயம், வேலையிலும் வியாபாரத்திலும், எவ்வளவு டென்ஷன் வந்தாலும் அதை வீட்டில் கொண்டு வந்து காண்பிக்க வேண்டாம். பிள்ளைகளோடு அனுசரணையாக பேச வேண்டும். குடும்பத்தில் அன்புடன், அனுசரித்து நடக்க வேண்டும். கணவன் மனைவி வாக்குவாதம் பெரிய பிளவை உண்டு பண்ணிவிடும். ஜாக்கிரதை, யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்த நடக்கவும். செலவையும் கூடுமானவரை குறைத்துக் கொள்ளுங்கள். அதிகம் வாய் பேசாதீர்கள். குறிப்பாக உங்களுடைய பெருமையை நீங்களே பேசிக்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லுவது மனதிற்கு அமைதியை தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த மாதம் பொறுமையை இழக்கக்கூடாது. பொறுமையை இழந்து ஒரு நிமிடத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு, உங்கள் வாழ்க்கையை புரட்டிப்போட்டு விடும். எதுவாக இருந்தாலும் அமைதி காக்கவும். குறிப்பாக வாழ்க்கை துணை பேச்சை கேட்காமல் நடந்து கொண்டால் நஷ்டம் ஏற்படும். கணவன், மனைவி பேச்சை கேட்க வேண்டும். மனைவி, கணவன் பேச்சைக் கேட்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட தூர பயணங்களில் மூலம் அலைச்சல் ஏற்படும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருந்தாலும், வாழ்க்கை பாடம் உங்களுக்கு நிறைய அனுபவங்களை கற்றுத் தரும். ஜாக்கிரதை, தலைகனம் வேண்டாம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top