– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சந்தோஷம் நிறைந்த மாதமாக இருக்கும். இத்தனை நாட்களாக உங்களைத் தொடர்ந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் நீங்கி, அதிர்ஷ்ட காற்று வீச தொடங்கும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத சம்பள உயர்வு, இடம் மாற்றத்தோடு வரும். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் எல்லாம் விலகும். சேமிப்பை உயர்த்துவதற்கு உண்டான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். பண்டிகையை கூட சிக்கனமாக கொண்டாடி சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். இந்த மாதம் உங்களுக்கு மேலும் சிறப்படைய வேண்டும் என்றால் சனிக்கிழமை தோறும் அனுமன் கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ளவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் பயணங்கள் இருக்கக்கூடிய மாதமாக அமையும். வேலை காரணமாக சொந்த பந்தங்கள், விசேஷ காரணமாக எங்கேயாவது வெளியிடங்களுக்கு செல்வீர்கள். சில பேர் சுற்றுலா செல்வதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு எதிர்ப்பார்த்த நல்ல விஷயங்கள் எல்லாம் நடக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் அன்னியூன்யம் ஏற்படும். பிரிந்த உறவுகளும் ஒன்று சேரும். தொழிலில் முதலீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். மழைக்காலம் என்பதால் நிறைய முதலீட்டை செய்ய வேண்டாம். தேவையான அளவுக்கு வரவு செலவுகளை பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும். இந்த மாதம் முழுவதும் மேலும் சிறப்பான பலனை பெறுவதற்கு செவ்வாய்க்கிழமை வள்ளி தேவயானையுடன் இருக்கக்கூடிய முருகனை வழிபாடு செய்யுங்கள்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கப் போகின்றது. எதிர்பாராத பண வரவு இருக்கும். கோர்ட் கேஸ் வழக்கு உங்களுக்கு சாதகமாக அமையும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. சில பேர் வண்டி வாகனம் சொத்து வாங்கக்கூட வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த மாதம் முழுவதும் மன நிறைவான நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அடம்பிடித்து வந்த பிள்ளைகள் கூட பெற்றவர்கள் சொல் பேச்சைக் கேட்டு நடக்கும். வேலையிலும் தொழிலிலும் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். குறுக்கு வழியில் சென்று சீக்கிரம் பணக்காரராக வேண்டும் என்ற ஆசையை ஒதுக்கி வையுங்கள். செவ்வாய்க்கிழமை என்றால் துர்க்கை அம்மனுக்கு விளக்கு போட்டு வழிபாடு செய்தால் மனநிலை சீராக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் செல்வாக்கு உயரும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதையும் உயரும். உங்களுக்கான அந்தஸ்து பதவி உயர்வு எல்லாம் தானாக தேடி வரும். தலைகுனிந்து நடந்த இடத்தில் தலைநிமிர்ந்து நடக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். இதற்கெல்லாம் அதிர்ஷ்டமோ கால நேரமோ காரணம் கிடையாது. உங்களுடைய உழைப்பு தான், உங்களை உயர்த்தி நிற்க வைத்து இருக்கிறது. வாழ்க்கையில் முன்னேற நிறைய வாய்ப்புகளும் தேடி வரும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். மூன்றாவது நபரோடு நெருங்கி பழக வேண்டாம். குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வெள்ளிக்கிழமை தோறும் துர்க்கை அம்மனுக்கு வழிபாடு செய்தால் எல்லாம் நல்லதாக நடக்கும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த மாதம் முழுவதும் கொஞ்சம் அமைதியை கடைபிடிக்க வேண்டும். முன் கோபத்தை குறைக்க வேண்டும். மேலதிகாரிகளை எதிர்த்து பேசக்கூடாது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை சரியான மரியாதையோடு நடத்த வேண்டும். ஒரு வாடிக்கையாளர்கள் போனாலும் நமக்கு நஷ்டம் தான் என்பதை உணர வேண்டும். ஒருவர் போனால் 10 பேர் இருக்கிறார்கள் என்ற தலைகனம் வரவே கூடாது. பாத்துக்கோங்க. குடும்பத்தில் அனுசரணை தேவை. யாராக இருந்தாலும் வார்த்தையில் கவனம் இருக்கட்டும். வார்த்தையை கொட்டி விட்டால் மீண்டும் அள்ள முடியாது. இந்த மாதம் முழுவதும் நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். தினமும் சிவபெருமானை நினைத்து ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி தியானம் செய்யுங்கள். அதுதான் உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சந்தோஷம் நிறைந்த மாதமாக தான் இருக்கும். வீட்டில் சந்தோஷத்திற்கு குறைவே இருக்காது. ஆனால் வேலையிலும் தொழிலிலும் மட்டும் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பண்டிகை காலம் வருகிறது, செலவுக்கு பணம் தேவை. விருந்தாளிகளையும் கவனிக்க வேண்டும். இதையெல்லாம் கவனிக்கும் போது உங்களுடைய வேலை தொழிலையும் அக்கறையோடு பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி லீவு போடுவது, அடிக்கடி கடையை திறக்காமல் இருப்பது, போன்ற விஷயங்களை செய்யவே கூடாது. எவ்வளவு தலை போகும் வேலையாக இருந்தாலும், கடமை முதலில் கண்ணுக்கு தெரிய வேண்டும். பிறகுதான் பொழுதுபோக்கு விஷயங்களுக்கான நேரத்தை ஒதுக்க வேண்டும். இந்த மாதம் பைரவர் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வீண் வம்புகள் வழக்குகள் வரக்கூடிய மாதமாக இருக்கும். நீங்கள் சும்மாவே இருந்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனை வரும். கோர்ட்டு கேஸ் வழக்குகள் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகக்கூடிய வாய்ப்புகள் கூட சில பேருக்கு வரலாம். ஆகவே அடுத்தவர்களோடு வம்புக்கு போகாதீங்க. தானாக பிரச்சனை வந்தாலும் நீங்கள் தான் தள்ளி நிற்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. மூன்றாவது நபரை நம்பி எந்த ஒரு வேலையையும் புதிதாக தொடங்க வேண்டாம். தெரியாத வேலையில் கால் வைக்க வேண்டாம். ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு தெரிந்தவர்கள், நம்பிக்கையானவர்களை மட்டும் கூட வச்சுக்கோங்க. என்றைக்குமே வாழ்க்கையில் குறுக்கு பாதையில் செல்லக்கூடாது என்ற உறுதி மொழியையும் எடுத்துக் கொள்ளுங்கள். தினமும் நரசிம்மர் வழிபாடு நன்மையை தரும். மனதில் இருக்கும் கெடுதலை விலக்கி வையுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்படக்கூடிய வாரமாக அமையும். வீட்டு வாசல் வரை ஒரு நல்லது வரும். ஆனால் அது உங்களுடைய கைக்கு எட்டாது. தொலைபேசியில் நல்ல செய்தி வரும். ஆனால் அந்த நல்ல செய்தி நடக்காது. இதுபோன்ற இழப்புகளை சந்திப்பதால் மனம் உடைந்து போகும். ஆனால் நீங்கள் சோர்ந்து போய் உட்காரக் கூடாது. விடாமுயற்சியோடு உங்களுடைய வேலைகளை செய்யும் பட்சத்தில் நிச்சயம் வெற்றி காண முடியும். ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. இந்த மாதம் முழுவதுமே உங்களுக்கு கொஞ்சம் அலைச்சலும் கூட இருக்கும். பண்டிகை நாட்கள் என்பதால் அதற்கு உண்டான வேலைகளையும் பார்க்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். சில பேருக்கு சொந்த ஊர் செல்ல வேண்டிய வேலை இருக்கும். இப்படி எல்லா டென்ஷனும் ஒரு சேர இந்த மாதம் கொஞ்சம் டென்ஷனை அதிகரிக்கும் கவலைப்படாதீங்க. குலதெய்வ வழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிம்மதியாக மூச்சு விடக் கூடிய மாதமாக இருக்கும். ஆமாங்க இதுநாள் வரை மூச்சு விட முடியாமல் திணறிக் கொண்டிருந்த பிரச்சனைகளுக்கு கூட இந்த மாதம் தீர்வு கிடைக்கும். அவசரப்பட்டு எந்த முடிவையும் இந்த மாதம் எடுக்கக் கூடாது. நிறைய நல்ல விஷயங்கள் நடந்தாலும் நிறைய வருமானம் வந்தாலும் எந்த ஒரு விஷயத்தையும் அலசி ஆராயாமல் ஏற்றுக்கொள்ளக்கூடாது. இனமாக ஒரு பொருளை கொடுக்கிறார்கள் என்றால் அதற்கு பின்னால் என்ன வம்பு வழக்குகள் வரும் என்பதை யோசிங்கள்.ஏற்கனவே இருந்த பிரச்சனையிலிருந்து வெளிவந்து, நீங்களாகவே இன்னொரு பிரச்சனையில் போய் சிக்கிக் கொள்ளக்கூடாது. கவனமாக இருக்கவும். அனுபவசாலிகளின் பேச்சை கேட்டு நடங்க. அடம்பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்காதீங்க. தினமும் விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் செலவுகள் கொஞ்சம் கட்டுக்கடங்காமல் செல்லும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பண்டிகை செலவை சமாளிப்பதற்கு சரியான நேரத்தில் பணம் கைக்கு வந்து சேராது. நாம கொடுத்த பணத்தை கூட திருப்பி கேட்டால் எதிரிகள் உண்டாகுவார்கள். அந்த அளவுக்கு உங்களுக்கு சோதனை தரக்கூடிய மாதமாக இருக்கும். கவலைப்படாதீங்க மாதத்தின் முதல் 15 நாள் மட்டும் தான் உங்களுக்கு பிரச்சனை. அடுத்து வரக்கூடிய 15 நாட்கள் பிரச்சினையில் இருந்து வெளிவரக்கூடிய நாட்களாக இருக்கும். மன நிம்மதி அடைவீர்கள். ஆரோக்கியத்தையும் முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கு உதவி செய்ய தானாக நிறைய பேர் முன் வருவார்கள். தினமும் முருகனை கும்பிடுங்கள் நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்லது நடக்கும். வீடு தேடி வரக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்திலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களை நம்பி நிறைய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். இரண்டு பேர் செய்ய வேண்டிய வேலை உங்கள் தலைமையில் இருந்தாலும், அதை எல்லாம் சுலபமாக செய்து முடித்து விடுவீர்கள். திறமைகள் வெளிப்படும் மாதமாகவும் அமையும். இருந்தாலும் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். நேரத்திற்கு வீட்டு சாப்பாடு சாப்பிடுவது நல்லது. குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புகள் இருக்கிறது. சுப செலவுகள் ஏற்படும். வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த மாதம் உங்களை நிரூபிப்பதற்கு போராட்டம் செய்வீர்கள். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். பண வரவு சீராக இருக்கும். பண்டிகை நாட்களைக் கொண்டாட தேவையான அத்தனை விஷயங்களும் நல்லபடியாக நடக்கும். சொந்தம் பந்தம் மத்தியில் உங்களுக்கான மரியாதை கூடும். வாகனங்களில் செல்லும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஹெட் போன் அணிவதை குறைத்துக் கொள்ளுங்கள். மனதை அலைபாய விட வேண்டாம். மனதை ஒருநிலைப்படுத்தி வேலையில் கவனம் செலுத்தினால், உங்கள் வாழ்க்கையில் மேலும் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பேச்சுக்களை விட்டு விடுங்கள். சனிக்கிழமை தோறும் நவகிரக வழிபாடு செய்வது நன்மையை தரும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam