ஜனவரி மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

ஜனவரி மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்லது நடக்கும். நினைத்த காரியங்களை உங்களுக்கு சாதகமாக செய்து முடிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பிரமோஷன் கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. சொத்து சுகம் வாங்க வாய்ப்புகள் இருக்கிறது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். எதிரிகளையும் நண்பர்களாக மாற்றிக் கொள்ளுவீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். ஜனவரி மாதம் திங்கள்கிழமை சிவன் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கும். வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கு, கை நிறைய சம்பளத்துடன் தகுதியான வேலை கிடைக்கும். வறுமையில் வாடி வதங்கியவர்கள் எல்லாம் வருமானத்தில் சந்தோஷமாக ரெக்கை கட்டி பறப்பீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த டென்ஷன் குறையும். உங்களுக்கு ஆதரவாக நண்பர்களும் உறவினர்களும் இருப்பார்கள். மனநிம்மதி கிடைக்கும். குழந்தைகளுடைய ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். மாதத்தின் இறுதி நாட்களில் மட்டும் கொஞ்சம் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். வேலைகளை நிலுவையில் வைக்கக்கூடாது. செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு உங்களுக்கு தைரியத்தை கொடுக்கும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ஜனவரி மாதம் நிறைய நன்மைகள் தேடி வர போகிறது. கெடுதல் செய்பவர்கள் தானாக உங்களை விட்டு விலகுவார்கள். வேலையில் இருக்கும் எதிரிகள் பிரச்சனை சரியாகும். தொல்லை கொடுத்த மேனேஜர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு விடுவார். இல்லை என்றால் நீங்கள் இட மாற்றம் வாங்கிக் கொள்வீர்கள். ஆக மொத்தத்தில் தொல்லைகளிலிருந்து இந்த மாதம் உங்களுக்கு விடுதலை கிடைக்கும். கணவன் மனைவி பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். சொத்து பத்து உங்கள் பக்கம் தீர்ப்பாகும். சொத்து சுகம் வாங்குவதற்கும் யோகங்கள் இருக்கிறது. தினமும் குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த மாதமாக தான் இருக்கும். உடனடியாக மனதை கஷ்டப்படுத்திக் கொள்ளக் கூடாது. தைரியத்தோடு இருங்கள். இதையே நினைத்துக் கொண்டு பிரச்சனைகள் வந்தால் சோர்ந்து போகக் கூடாது. குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள். தினமும் காலையில் எழுந்து முக்கியமான வேலைகளை முடித்துவிட்டு, பிறகு மற்ற கடமைகளை பார்க்கவும். வியாபாரத்தில் கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும். அன்றைக்கான வேலையை அன்றே முடித்து ஆக வேண்டும் என்று ஒரு குறிக்கோளுடன் செயல்படுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வருமானம் உயரக்கூடிய மாதமாக இருக்கும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து வெளிவருவீர்கள். மனபாரம் குறையும். நிம்மதியான தூக்கமும் இருக்கும். மாத துவக்கத்தில் பிரச்சனைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து விடுவீர்கள். மாத இறுதியில் கொஞ்சம் பணக்கஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே கொஞ்சம் சேமிப்பை மாத இறுதி நாட்களுக்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நீண்ட தூர பயணங்கள் எல்லாம் நல்ல படியாக நடந்து முடியும். வியாபாரத்தில் சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வரும். எதிர்காலத்திற்கு தேவையான யோசனைகள் உங்களுக்கு அதிகமாக இருக்கும். தினமும் அஷ்டலட்சுமிகளை வழிபாடு செய்யுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கொஞ்சம் கவனம் கூடுதலாக இருக்க வேண்டும். ஜனவரி மாதம் முழுவதும் கவனக்குறைவாக எந்த வேலையையும் செய்யக்கூடாது. உங்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைத்தால், நீங்கள் தான் அந்த பொறுப்புகளில் கவனமாக இருக்க வேண்டுமே தவிர, அந்த பொறுப்பை அடுத்தவர்கள் கையில் நீங்கள் ஒப்படைக்க கூடாது. உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல பெயரையும் அடுத்தவர்கள் தட்டி செல்வார்கள். வரக்கூடிய பழியையும் உங்கள் மேல் போட்டு விடுவார்கள். ஜாக்கிரதை, தினமும் பிள்ளையாரை கும்பிடுங்கள்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசி காரர்கள் இந்த மாதம் முழுவதும் மிக மிக அழகாக அம்சமாக வலம் வரப்போகிறீர்கள். தோற்றத்திலும் சரி, புத்திசாலித்தனத்திலும் சரி, உங்களை மிஞ்ச யாராலும் முடியாது. பேச்சு திறமையும் அதிகரிக்கும். சுறுசுறுப்பும் அதிகரிக்கும். நிதி நிலைமையும் மேல் ஓங்கும். இறைவனுக்கு நன்றி சொல்லி விடுங்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் சின்ன சின்ன ஐடியாக்கள் கூட பெரிய அளவில் லாபத்தை கொடுக்கும். உடன் பணி புரிபவர்களால் சந்தோஷம் அடைவீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். தினம் தோறும் முருகர் வழிபாட்டால் பிரச்சனைகள் நீங்கும்.
விருச்சிகம்
விருச்சக ராசி காரர்கள் இந்த மாதம் கொஞ்சம் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முயற்சிகள் ஒரு முறையில் வெற்றியை கொடுக்காது. மேலதிகாரிகளோடு வாக்குவாதம் வரவும் வாய்ப்புகள் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் பொறுமையாக இருக்க வேண்டும். வார்த்தைகளை கடினமாக பிரயோகப்படுத்தக் கூடாது. பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். மேலதிகாரிகளுக்கு மரியாதை கொடுத்து நடக்க வேண்டும். சின்ன சின்ன விஷயத்திற்கு கூட டென்ஷன் ஆக கூடாது. மனதை ஒருநிலைப்படுத்துங்கள். தினமும் 10 நிமிடம் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி நாளை துவங்குங்கள். நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் ஜனவரி மாதம் முழுவதும் சந்தோஷமாக உங்களுடைய நாட்களை செலவு செய்யப் போகிறீர்கள். நீங்கள் விரும்பியது எல்லாம் உங்கள் கையை வந்து சேரும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையும். சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் நண்பர்களால் புதிய பார்ட்னர்களால் பெரிய அளவில் வெற்றி காண்பீர்கள். சந்தோஷம் அடைவீர்கள். கடன் சுமையிலிருந்து வெளிவருவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மாணவர்களுக்கும் கல்வியில் கூடுதல் கவனம் தேவை.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் திறமைகள் வெளிப்படக்கூடிய மாதமாக இருக்கும். கலைஞர்களுக்கு, மாணவர்களுக்கு, தொழில்நுட்ப ரீதியாக வேலை செய்பவர்களுக்கு எல்லாம் பெரிய வெற்றி கிடைக்கும். கைத்தொழில் செய்பவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பாராட்டுகள் கிடைக்கும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். வருமானம் பெருகும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. குறிப்பாக பெண்கள் கற்பனையில் கோட்டை கட்டி வாழக்கூடாது. செலவு அதிகம் செய்யக்கூடாது. தினமும் வாராகி வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சந்தோஷம் நிறைந்த மாதமாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேவைப்படுபவர்கள் முயற்சி செய்யலாம். இடம் மாற்றத்தால் நன்மை உண்டாகும். நேரத்தை அனாவசியமாக செலவு செய்யக்கூடாது. எப்போதுமே பொழுது போக்கு என்று இருப்பவர்கள் உங்களுடைய கடமைகளை சரிவர செய்து முடித்து விடுங்கள். பிறகுதான் பொழுதுபோக்கு தேவை. மொபைல் போனில் அதிகமாக நேரத்தை செலவு செய்யாதீர்கள். மூன்றாவது மனிதருடைய வாழ்வில் மூக்கையும் நுழைக்காதீர்கள். அடுத்தவர்களுடைய வாழ்க்கையை விமர்சனம் செய்யாதீர்கள். இந்த மாதம் அங்காளம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
மீனம்
ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கொஞ்சம் போராட்டம் நிறைந்த மாதமாக தான் இருக்கும். நினைத்ததெல்லாம் நடக்கும். அதில் எந்த பயமும் வேண்டாம். ஆனால் அதற்கான முயற்சிகள் கொஞ்சம் கடினமாக இருக்கும். சில தோல்விகள் வரும், சில தடைகள் வரும், அதையெல்லாம் கடந்து செல்லும்போது இனிமையான நாட்கள், உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும். சுப செலவு ஏற்படும். மனது கொஞ்சம் ஆன்மீகத்தில் ஈடுபடும். மனதிருப்தியை நன்றாக உணருவீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். நிதி நிலைமை சீராகும். கடன் தொல்லை குறையும்‌ தினமும் ஐயப்பன் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top