ஜூன் மாத ராசி பலன் 2025 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

ஜூன் மாத ராசி பலன் 2025 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Qries


மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஒரு சவாலான மாதமாக இருக்கப் போகிறது. நீங்கள் எதிர்பார்க்காத சிக்கல்கள் பிரச்சனைகள் எல்லாம், உங்கள் வாழ்க்கையில் வரலாம். ஆனால் அதற்காக நீங்கள் ஒரு துளி கூட பயப்படவே வேண்டாம். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு. பிரச்சினைகளில் இருந்து, வெளிவரக்கூடிய சூட்சம வித்தையை நீங்கள் சரியாக தெரிந்து வைத்துக் கொள்வீர்கள். இதனால் பிரச்சனைகளை தாண்டி வெற்றி காணக்கூடிய வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன போராட்டத்திற்கு பிறகு, பெரிய வெற்றியை காண்பீர்கள். உறவுகளோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். ஆண் பிள்ளைகள், தந்தையோடு சண்டை போடக்கூடாது. தினந்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு செய்வது நல்லது.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்கள் இந்த மாதம் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். முன் கோபப்படக்கூடாது. வார்த்தைகளை கடினமாக பயன்படுத்தக்கூடாது. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் அவசியம் தேவை. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். தேவையில்லாத பஞ்சாயத்து ,தேவையில்லாத கோர்ட்டு கேஸ் வழக்குகளுக்கு செல்லாமல் இருப்பது நல்லது. உங்களுடைய பிரச்சினைகளையும் நீங்களே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். மூன்றாவது நபர்களை உள்ளே இழுக்காமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உணவு கட்டுப்பாடு தேவை. இந்த மாதம் திங்கட்கிழமையில் விநாயகரை கும்பிடுங்கள் நல்லது நடக்கும். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்கள் இந்த மாதம் அலட்சியமாக இருக்கக் கூடாது. உங்களுடைய வேலைகளை நீங்கள் பொறுப்போடு செய்து முடிக்க வேண்டும். நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது. மூன்றாவது நபரின் பேச்சை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். வீட்டு விஷயங்களை நண்பர்களிடமோ வெளி ஆட்களிடமோ பகிர்ந்து கொள்ள வேண்டாம். நீண்ட தூர பயணத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் பணம் நகை சொத்து இவைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஆடம்பர செலவு கூடாது. இந்த வாரம் சனிக்கிழமைகளில் ஹனுமன் வழிபாடு செய்வது சிறப்பு.கடகம்கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலை தொழில் எல்லாம் அமோகமான வரவேற்பு கொடுக்கும். வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றம் வர வாய்ப்புகள் இருக்கிறது. குடும்ப உறவுகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். எதிரி பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, நீங்கள் ஆரோக்கியத்தை கவனிக்க மறக்க கூடாது. நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுங்கள். ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த மாதம் எதிர்கால சேமிப்பிற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளலாம் நன்மை நடக்கும். செவ்வாய்க்கிழமை முருகர் வழிபாடு செய்வது சிறப்பு. – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்கள் இந்த மாதம் வெற்றி வாகை சூடுவீர்கள். எல்லா நல்ல வாய்ப்புகளும் உங்கள் வீட்டு வாசல் கதவை தட்டும். நன்மைகள் வந்து குவியும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத பொறுப்புகள் உங்கள் கையை வந்து சேரும். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். நீங்கள் நினைத்த ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதற்கு அத்தனை நல்லதும் கைகூடிவரும். பெரியதாக பிரச்சனை இல்லை. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. புதன்கிழமை பெருமாள் வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.கன்னிகன்னி ராசிக்காரர்கள் இந்த மாதம் புது முயற்சிகளை துவங்கும் போது, கவனமாக இருக்க வேண்டும். புது மனிதர்களை முழுசாக நம்ப வேண்டாம். ஒப்பந்தங்கள் போடும் போது, புது வியாபாரம் துவங்கும் போது, சில விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போடாதீர்கள். பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி குடும்ப உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியை நிகழ்ச்சிகள் துவங்கவும் வாய்ப்புகள் உள்ளது. வண்டி வாகனம் ஓட்டும் போது கவனக்குறைவு வேண்டாம். வியாழக்கிழமையில் குரு பகவான் வழிபாடு செய்வது சிறப்பு. – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் குஷியான மாதமாக இருக்கும். குறிப்பாக இளம் வயதினர்கள் இந்த மாதத்தில் தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றி அடையும். அப்போது சிறு குழந்தைகளும் வயதானவர்களும் கஷ்டப்படுவார்களா? அப்படி கிடையாது. இளைஞர்கள் இந்த மாதம் புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளலாம். புது படிப்பிற்கு பிள்ளையார் சுழி போடலாம். எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்பதால் உங்களுக்கு இது அதிர்ஷ்டமான மாதமாகும். மற்றபடி வேலை செய்பவர்கள் வியாபாரம் செய்பவர்களுக்கும் இந்த மாதம் சீரான நல்ல பலனை பெறுவீர்கள். வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமியை கும்பிடுங்கள். மேலும் நன்மை நடக்கும்.விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலை பளு அதிகம் ஆவதற்கு கொஞ்சம் வாய்ப்புகள் உள்ளது. மாதத்தில் முதல் பகுதியிலேயே சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும். எல்லா வேலைகளையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னால் தலை பாரம் தான் அதிகமாகும். அன்றாட நேரத்தை பயனுள்ளபடி செலவு செய்யுங்கள். நேரத்தை வீணடித்தால் பிரச்சனை உங்களுக்குத்தான் வரும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்ட வேண்டும். பெரியவர்களுடைய பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். சிந்தனையை சிதற விடக்கூடாது. ஜாக்கிரதை தினமும் நீங்கள்சிவனை கும்பிட்டாலும் தவறு கிடையாது.தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கப் போகிறது. நீங்கள் எதிர்பார்த்த நல்லது மட்டுமல்ல, எதிர்பார்க்காத நல்லதும் நடக்கும். வியாபாரத்திலும் வேலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாராக்கடன் வசூல் ஆகும். மன நிம்மதி கிடைக்கும். தேவையற்ற பிரச்சனைகள் எதிரி தொல்லைகள் தானாக உங்கள் விட்டு விலகப் போகிறது. இறைவனின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். தினமும் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.மகரம்மகர ராசிக்காரர்கள் இந்த மாதம் யாரையும் கண்முடித்தனமாக நம்ப கூடாது. புது மனிதர்களோடு நட்பு வைத்துக் கொள்ளும் போது, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். யாரெல்லாம் உங்களிடம் அதிகமாக தேன் போல பேசுகிறார்களோ, அவர்களெல்லாம் நல்லவர்கள் என்று நம்பாதீர்கள். உங்களை திட்டுபவர்கள் எல்லாம் கெட்டவர்களும் அல்ல. வெளி உள்ள தோற்றத்தை பார்த்து ஏமாந்து விட வேண்டாம். வாழ்க்கை துணையது பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளுடைய எதிர்கால நலனில் அக்கறை கொள்வது நல்லது. இல்லற வாழ்க்கை சிறக்கும். காதல் கைகூடும். சனிக்கிழமை தோறும் நரசிம்மரை கும்பிடுங்கள் ஏமாற்றத்திலிருந்து தப்பிக்கலாம்.கும்பம்கும்ப ராசிக்காரர்கள் இந்த மாதம் ரொம்ப ரொம்ப அழகாக வேலை பார்ப்பீர்கள். அதாவது உங்களை பார்க்கும் போது அடுத்தவர்களுக்கு பொறாமை வரும் உங்களுடைய தோற்றமும் அழகாக இருக்கும். உங்களுடைய பேச்சும் அழகாக இருக்கும்‌. இந்த மாதம் முழுவதும் ஒரு வசீகரத்தோடு வலம் வரப்போகிறீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எல்லோருக்கும் பிடித்த நபராக இருப்பீர்கள். நீங்கள் நினைத்த வேலைகள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். இந்த மாதத்தை ஒரு சொர்கமாகும் என்று கூட சொல்லலாம். கவலைப்படாமல் என்ஜாய் பண்ணுங்க. திங்கட்கிழமை பைரவரை கும்பிடுங்கள் மேலும் நன்மை நடக்கும்.மீனம்மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று இருக்க வேண்டும். எந்த விஷயத்திலும் கவனக் குறைவு வேண்டாம். வேலை விஷயத்தில் பொய் சொல்ல வேண்டாம். பேச்சில் நிதானமாக இருக்க வேண்டும். நேரத்தை வீணடிக்க கூடாது. நேர்வழியில் நடக்க வேண்டும். செலவுகளை குறைக்க வேண்டும். சேமிப்பை அதிகரிக்க வேண்டும். பிள்ளைகளுக்கு அதிகமாக செல்லம் கொடுக்கக் கூடாது. குடும்ப விஷயங்களை வெளியில் சொல்லக்கூடாது. குறிப்பாக கைபேசி தேவையில்லாமல் பார்க்கக் கூடாது. மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றினால் இந்த மாதம் உங்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் சிவன் வழிபாடு செய்யுங்கள் பிரச்சனைகள் நீங்கும்.

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top