ஜூலை மாத ராசி பலன் 2025 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

ஜூலை மாத ராசி பலன் 2025 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Qries


மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நேர்மறையான சிந்தனைகள் இருக்கும். எந்த ஒரு குழப்பமான விஷயத்திற்கும் நிதானமாக சிந்தித்து ஒரு தீர்வை கொடுப்பீர்கள். உங்களுடைய வாழ்க்கையில் மென்மேலும் உயர்வு ஏற்பட என்ன முயற்சிகள் தேவையோ, அதையெல்லாம் மேற்கொள்வீர்கள். இந்த மாதம் உங்களுக்கு மேல் நோக்கு மாதமாக அமையப் போகிறது. உங்களுடைய மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உயரும். உங்கள் வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்களை தேடி தேடி செய்வீர்கள். வெற்றி காண்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். நிதிநிலைமை மேலோங்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்களுடைய படிக்கும் நேரத்தை எக்காரணத்தை கொண்டும் வீணடிக்கக் கூடாது. இந்த மாதம் ஈப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம், சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். இரண்டு சிவனடியார்களுக்கு முடிந்தவரை தானம் கொடுங்கள். நல்லது நடக்கும்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்கள் இந்த மாதம் பொறுமையாக இருக்க வேண்டும். வேலை வியாபாரம் குடும்ப விஷயம் எதிலும் அவசரப்படக்கூடாது. நிதானமாக சிந்தித்து செயல்பட்டால், வரக்கூடிய பிரச்சனையிலிருந்து 75% தப்பித்துக் கொள்ளலாம். 25% நீங்கள் சாதுரியமாக செயல்பட வேண்டும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கும் போதும் சரி, சொத்து சுகம் எதிலாவது முதலீடு செய்ய வேண்டும் என்றாலும் சரி, ஒன்றுக்கு பலமுறை பெரியவர்களிடமும், அனுபவசாலிகளிடமும் கேட்டு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். கூடுமானவரை இந்த மாதம் பெரிய முதலீடு எதுவும் செய்யாமல் இருப்பதும் நல்லது. தெரியாத விஷயங்களில் தலையிட வேண்டாம். முன்பின் தெரியாத நபரை முழுமையாக நம்ப வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். வீட்டிலிருக்கும் பெண்களுக்கு உறவுகளோடு இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். சந்தோஷம் பிறக்கும். இந்த மாதம் துர்க்கை அம்மன் வழிபாட்டை செய்யும் பட்சத்தில் மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொருளாதார நிலை உயரும். நீண்ட நாள் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட நாள் கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். பணத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் பிரச்சனை இருக்காது. ஆனால் வேலை வியாபாரத்தில் எல்லாம் பொறுப்புகளும் வேலைகளும் அதிகமாக இருக்கும். நிம்மதியாக சாப்பிட, நிம்மதியாக தூங்க நேரம் ஒதுக்க முடியாது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். சோர்ந்து போய் உட்கார கூடாது. ஒரு வேலையை நாளைக்கு செய்யலாம் என்று தள்ளிப் போடக்கூடாது. மாணவர்கள் தகாத நட்புறவு வைத்துக் கொள்ள வேண்டாம். பெற்றோர்கள் பிள்ளைகளுடைய முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும். தினமும் பிள்ளையாரை கும்பிட்டாலும் இந்த மாதம் தவறு கிடையாது. பிள்ளையாரை கும்பிட கும்பிட உங்களுக்கு நல்லது நடக்கும்.கடகம்கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் அணுகவுளமான வாரமாக இருக்கும். எல்லா நல்ல காரியங்களும் கை கூடி வரும். தேவையற்ற எதிர்ப்புகள், எதிரிகள் பிரச்சனைகள் எல்லாம் உங்களை விட்டு விலகும். குறிப்பாக இதுநாள் வரை உங்களிடம் ஒட்டிக் கொண்டிருந்த சோம்பேறித்தனம் தூக்கம், இயலாமையெல்லாம் உங்களை விட்டு விலகப் போகிறது. இனி வரக்கூடிய நாட்களில் நீங்கள் பம்பரம் போல சுழன்று வேலை செய்து, நல்ல பெயர் வாங்க போகிறீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்டு அதிகமாக சிந்திக்காதீர்கள். கடவுள் உங்களுக்கு நிச்சயம் நல்லதை கொடுப்பான். நெகட்டிவா பேசுறவங்களிடமிருந்து, நீங்க தள்ளி நிற்பது நல்லது. தினமும் முருகரை கும்பிடுங்கள் நல்லது நடக்கும். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சி நிறைந்த மாதமாக தான் இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கசப்பான சம்பவங்கள் மறைந்துவிடும். இனி வரும் நாட்களில் வீட்டில் சுப செய்திகள், கெட்டி மேள சத்தம் கேட்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. இருந்தாலும் நீங்கள் பணம் விஷயத்தில், நட்பு விஷயத்தில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். உங்களுடைய வேலைகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் யாரையும் முழுசாக நம்ப வேண்டாம். எதுவாக இருந்தாலும் உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கட்டும். பிள்ளைகளுடைய எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை மேலோங்கும். சேமிப்பு அதிகரிக்கும். உடல் உபாதைகள் நீங்கும். சனிக்கிழமை தோறும் பைரவர் வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.கன்னிகன்னி ராசிக்காரர்கள் இந்த மாதம் நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். மூன்றாவது நபருடைய வாழ்க்கையில் தலையிடக்கூடாது. அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் பஞ்சாயத்து செய்யாதீங்க. அனாவசியமாக பேசுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். வேளையிலும் சரி, வியாபாரத்திலும் சரி, உங்களுக்கு தேவையானதை மட்டும் பாருங்கள். மற்றபடி குடும்பத்தில், சந்தோஷம் இரட்டிப்பாகும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. நிதி நிலைமை சீராகும். பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்கு தேவையான நல்லது நடக்கும். இந்த மாதம் கூடுமானவரை ஹனுமன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் நல்லது நடக்கும். – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பிரச்சினையிலிருந்து விடுபடக்கூடிய மாதமாக இருக்கும். உங்களுடைய கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். யார் தவறு செய்தாலும் முகத்திற்கு நேரே சொல்லி விடுவீர்கள். இதனால் புது எதிரிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் உங்களுக்கு இருக்கக்கூடிய கெட்ட பெயர் விலகும். உங்கள் மீது விழுந்த பழி விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். வீட்டிலிருக்கும் பெண்கள் உங்களுடைய உரிமைக்காக போராட்டம் நடத்துவீர்கள். உறவுகளுக்குள் சின்ன சின்ன மன கசப்பு வர வாய்ப்பு உள்ளது. கவனமாக இருந்து கொள்ளுங்கள். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அனாவசியமாக இந்த மாதம் வெளியில் ஊர் சுற்ற வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்த மாதம் நரசிம்மர் வழிபாடு வாராகி வழிபாடு இதுபோல உக்கிர தெய்வ வழிபாடு உங்களுக்கு கை கொடுக்கும்.விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்ல முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும். எந்த இடத்தில் எல்லாம் தலை குனிந்து நின்றீர்களோ, அந்த இடத்தில் எல்லாம் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். யாரெல்லாம் உங்களை அவமானப்படுத்தினார்களோ, அவர்கள் வாயால் பாராட்டு பத்திரம் வாசிப்பார்கள். உங்களுடைய அயராத உழைப்பும் கூடுதல் முயற்சியும், வெற்றிகளை வாரி வாரி கொடுக்கும். இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கு நல்லதொரு பலனை இந்த மாதம் காண்பீர்கள். இறைவனின் பரிபூரண ஆசி உங்களுக்கு இருக்கு. கூடுதல் முயற்சியும், வெற்றிகளை வாரி வாரி கொடுக்கும். இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கு நல்லதொரு பலனை இந்த மாதம் காண்பீர்கள். இறைவனின் பரிபூரண ஆசி உங்களுக்கு இருக்கு. வீட்டில் குடும்ப சண்டைகளும் ஒரு முடிவுக்கு வரும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும் வாய்ப்புகள் இருக்கிறது. இந்த மாதம் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். வருமானத்தை உயர்த்த நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். சேமிப்பு அதிகரிக்கும். வீட்டில் பெண் பிள்ளைகளுக்கு நகை வாங்குவதற்கும், இந்த மாதம் நல்ல வாய்ப்புகள் கைகூடிவரும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேளையிலும் வியாபாரத்திலும் நீங்கள் விட்ட இடத்தை பிடிப்பீர்கள். புதிய முயற்சிகள் நல்லபடியான வரவேற்பை கொடுக்கும். உங்களுடைய உழைப்பு என்றுமே வீண் போகாது. சோர்வடையாமல் உங்களுடைய வேலைகளை பார்க்க கடவுள் உங்களுக்கு இந்த மாதம் நல்ல வழியை காட்டிக் கொடுப்பான். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். விடாமுயற்சியையும் நம்பிக்கையும் கைவிடாதிர்கள். தினமும் மகாலட்சுமி வழிபாடு செய்யுங்கள். மேலும் நன்மை நடக்கும்.மகரம்மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அமோகமான அற்புதமான வாரமாக இருக்கும். எல்லா நல்லதையும் இறைவன் உங்களுக்கு கொடுக்க போகின்றான். பெயர் புகழ் அந்தஸ்து பணம் எல்லாம் தேடி வரும். ஆனால் அதை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள் என்பதில் தான் இந்த மாதம் சவால் இருக்கிறது. வருமானத்தை சேமிக்க வேண்டும் பெயர் புகழ் அந்தஸ்து வரும்போது, தலைகனத்தோடு நடந்து கொள்ளக் கூடாது. அடுத்தவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். உங்களுடைய நிலை தடுமாறாமல் நடந்து கொள்ள வேண்டும். தலைகனத்தோடு, அடுத்தவர்களை மதிக்காமல் கொஞ்சம் கர்வமும் அகந்தையும் வெளிப்பட்டால் தேவையற்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த மாதம் தன்னடக்கம் அவசியம் தேவை. பார்த்துக்கோங்க மனதிற்குள் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லுங்கள். எல்லாம் அவன் செயல் என்று நம்புங்கள் நல்லது நடக்கும்.கும்பம்கும்ப ராசிக்காரர்கள் இந்த மாதம் வெற்றிவாகை சூடுவீர்கள். நீண்ட நாள் முயற்சிகள் நல்ல பலனை கொடுக்கும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். அடமானத்தில் வைத்திருந்த சொத்து நகைகளை மீட்பதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். தேவையற்ற பேச்சுகளை பேசாமல் இருப்பது நல்லது. கண் திருஷ்டி விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தை பொருத்தவரை நல்ல லாபம் கை நிறைய கிடைக்கும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளவும். சில பேருக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் பெரிய அளவில் வரும். நல்லதை அடக்கத்தோடு ஏற்றுக் கொள்ளுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள். நிச்சயம் மேலும் நல்லது நடக்கும்.மீனம்மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கப் போகிறது. நீங்கள் செய்த தவறை உணர்ந்து திருத்திக் கொள்வீர்கள். வாழ்க்கையில் முன்னேற முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். சோம்பேறித்தனம் விட்டு அகலும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் நீங்கள் செய்யும் முதலீடு பெரிய அளவில் லாபத்தை கொண்டு வந்து சேர்க்கும். உழைப்பு உழைப்பு என்று இந்த மாதம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும், அதை எல்லாம் சமாளித்து குடும்பத்தை சரி கட்டி வாழ்க்கையை சரியான பாதையில் எடுத்துச் செல்ல, கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பான். கவலையே படாதீங்க. கடமையை சரியாக செய்யுங்கள். பலனை எதிர்பார்க்காதீர்கள். நிச்சயம் இந்த மாதம் நல்லதே நடக்கும் அம்மன் வழிபாடு கை கொடுக்கும்.

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top