தை மாத ராசி பலன் 2025 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

தை மாத ராசி பலன் 2025 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிறைய நன்மைகள் நடக்கப் போகின்றது. இதுநாள் வரை நீங்கள் எந்தெந்த விஷயங்களை எல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அந்த விஷயங்கள் எல்லாம் தானாக நடந்து முடியும். பின்தங்கிய காரியங்கள் எல்லாம் நடைபெறும். குறிப்பாக வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும். வீடு வாங்க வேண்டும், நிலம் வாங்க வேண்டும், நிலம் வாங்கிய இடத்தில் வீடு கட்ட வேண்டும், அப்ரூவல் கிடைக்கவில்லை லோன் கிடைக்கவில்லை, என்று காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு வரிசை கட்டி நன்மை நடக்கும். மகிழ்ச்சி, இரட்டிப்பாகும். நிதிநிலைமை உயரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு வெளிநாட்டில் படிக்க செல்ல வேண்டும் என்று நினைத்திருப்பவர்களுக்கு எல்லாம் நல்ல காலம் பிறக்கும். வியாபாரம் ஓஹோ என நடக்கும். தை மாதத்தில் வரும் திங்கட்கிழமையில் சிவபெருமானை சென்று வழிபடுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிதிநிலைமை கொஞ்சம் சீர்படும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுத்து, மன நிம்மதி அடைவீர்கள். இரவு நிம்மதியாக உறக்கத்தை பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் தேவை. எதிரிகளோடு ஜாக்கிரதையாக பழக வேண்டும். நட்பு உறவாடி கெடுக்கக்கூடிய எதிரிகள் யார் என்பதை சரியாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். வீன் சண்டைக்கு போகாதீங்க. தேவையற்ற பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது. வம்பு வழக்கு கோர்ட்டு கேஸ் போலீஸ் இதுபோல பிரச்சனைகளில் சிக்காமல் இருப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. அளவோடு பேசவும். வியாபாரிகள் தங்களுடைய முதலீட்டிலும், பார்ட்னர்ஷிப்பிலும் கவனமாக இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் வாராகி அம்மனை வழிபாடு செய்வது நல்லது.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கொஞ்சம் நிதி நிலைமை ஏற்ற இறக்கத்தோடு காணப்படும். வீட்டில் முதியவர்களுடைய உடல் நலனில் பாதிப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதிகமாக வெளியிடங்களில் சாப்பிடக்கூடாது. வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நன்மைகள் நடக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் சற்று குறைவாகவே இருந்தாலும், நிம்மதியாக அன்றாட வியாபாரத்தை கவனிப்பீர்கள். திங்கட்கிழமை தோறும் விநாயகர் வழிபாடு செய்யுங்கள். நன்மை நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த மாதம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். வீட்டில் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி வாக்குவாதம் செய்யக்கூடாது. ஈகோ பிரச்சனை தலைதூக்கக் கூடாது. பெரியவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். குறிப்பாக பெண்கள் தங்களுடைய கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி வேலை தொழில் எல்லாம் நீங்கள் நினைத்ததை விட நல்லபடியாக நடக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். தொழிலில் புதிய முதலீடுகளை செய்யலாம். நீண்ட தூர பயணம் நன்மையை தரும். செவ்வாய்க்கிழமை முருகர் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தேவையற்ற பிரச்சனைகள், தேவையற்ற எதிரிகள் எல்லாம் தானாக விளக்குவார்கள். உடல் உபாதைகள் நீங்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் ஒரு முடிவுக்கு வரும். வேலையில் சொன்ன வாக்கை சொன்ன நேரத்தில் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். மேனேஜரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாளாக பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற நண்பர்களிடம் இருந்து தானாக விலகி விடுங்கள். குறுக்குப் பாதையை ஒருபோதும் தேர்ந்தெடுக்காதீர்கள். வியாழக்கிழமை குரு பகவான் வழிபாடு உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் திறமைகள் வெளிப்படும் மாதமாக இருக்கும். நீண்ட நாள் குழப்பத்தில் இருந்து வெளி வருவீர்கள். தேவையற்ற பிரச்சினைகள் உங்களை விட்டு தானாக விளக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த அளவுக்கு நன்மைகள் நடக்கவில்லை என்றாலும், பெருசாக பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. சனிக்கிழமை பைரவர் வழிபாடு உங்கள் பிரச்சனைக்கு தீர்வை கொடுக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு தான் இருக்கும். நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கடன் கொடுப்பதிலும், கடன் வாங்குவதிலும் கூடுதல் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை வரும். வீட்டு சாப்பாடு சாப்பிடுவது நல்லது. நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. வியாபாரத்தை பொருத்தவரை நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில் கொஞ்சம் கடினமாக உழைக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். தினம்தோறும் குலதெய்வ வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றம் தரக்கூடிய மாதமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த டென்ஷன் எதிரி தொல்லை நீங்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய பார்ட்னர் சேர்க்கை லாபத்தை கொடுக்கும். சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்களுக்கு கூட இந்த மாதம் அமோகமான லாபம் கிடைக்கும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வார்த்தை உங்களுக்கு சாதகமாக இந்த மாதம் அமையப்போகிறது. குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் நடக்கும். சுப காரிய நிகழ்ச்சிகள் பேசும்போது மூத்தவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். சொந்த பந்தங்களிடம் கவனமாக இருக்க வேண்டும். சில வாக்குவாதம் வரலாம். ஒருத்தர் பேச்சுக்கு ஒருத்தர் முரண்பாடாக பேசி வாய் தகறாரு வர வாய்ப்பு உள்ளது. நல்லது நடந்தாலும் அதில் குழப்பங்கள் ஏற்படும். கவனமாக இருந்து கொள்ளுங்கள். வேகத்தை விட விவேகத்தோடு செயல்படுவது தான் நல்லது. செலவுகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். வேலையில் பொறுமை காப்பது நல்லது. மேனேஜரை முதலாளியை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்திலும் கொஞ்சம் பொறுமையாக நடந்து கொள்ளவும். வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற நண்பர்களிடம் இருந்து விலகி நில்லுங்கள். எந்த இடத்திற்கு சென்றால் மரியாதை உங்களுக்கு கிடைக்காது என்று நினைக்கிறீர்களோ, அந்த இடத்திற்கு செல்ல வேண்டாம். கோடி ரூபாயை கொடுத்தாலும் மரியாதை இல்லாத இடத்திற்கு போகாதீங்க. வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் பிரச்சனைகள் வரும். மேலதிகாரிகளோடு வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கோர்ட்டு கேஸ் வழக்குகள் போலீஸ் ஸ்டேஷன் வாசல் படி மிதிப்பது, இது போன்ற பிரச்சனைகள் வரவும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நான் இளைஞர்கள் இந்த மாதம் கவனமாக இருக்கவும். தினமும் நரசிம்மரை மனதார நினைத்து வழிபடுவது உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் நிதி நிலைமை கொஞ்சம் பிரச்சினையாக இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் அகல கால் வைக்காதீங்க. வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வதற்கு முன்பு ஒன்றுக்கு ஆயிரம் முறை சிந்திக்க வேண்டும். அதிக விலை கொடுத்து ஒரு பொருளை வாங்குவதாக இருந்தால், கொஞ்சம் சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை உயர்த்துங்கள். வேலையை தக்க வைத்துக் கொள்ள பாருங்கள். புதிய வேலை கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். எதுவாக இருந்தாலும் நிதானமும் பொறுமையும் உங்களுக்கு தேவை. நிதானத்தை இழந்தால் இந்த மாதம் பிரச்சனைகள் வரும் ஜாக்கிரதை. சனிக்கிழமை வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ளுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு கடந்த கால கஷ்டங்கள் எல்லாம் மறந்து போகக்கூடிய மாதம் தான். கடினமான பாதையை கடந்து வந்தவர்களுக்கு, இந்த தை, இதமான மாதமாக அமையும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு திருமணம் ஆகாதவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு எல்லாம் நல்லது நடக்கும். நல்ல வேலை கிடைக்கும். திருமணம் நடக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற ஒரு நல்ல வழி பிறக்கும். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். இதுவரை வாழ்வில் இல்லாத பிடிப்பு இனிமேல் ஏற்பட்டுவிடும். ஆனால் உங்களுடைய வாயை மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகமாக பேசக்கூடாது. நூறு வார்த்தை பேசக்கூடிய இடத்தில் ஒரு வார்த்தையை பேசினால் போதும். வாழ்க்கையில் நீங்கள் எங்கோ சென்று விடுவீர்கள். ஞாயிற்றுக்கிழமை அம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மை செய்யும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top