– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த மாதம் விவேகத்தோடு நடந்து கொள்வீர்கள். எந்த இடத்திலும் சுயமரியாதையையும், சுய கௌரவத்தையும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கும். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், குழப்பம் இருக்காது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். தலைகுனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வெளியிடங்களில் அதிகமாக சாப்பிட வேண்டாம். திங்கட்கிழமையில் விநாயகர் வழிபாடு செய்வது நன்மையை தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சுறுசுறுப்பு இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் நெகட்டிவ் ஆக சிந்திக்கவே மாட்டீர்கள். உங்களுக்கு சாதகமாக உங்களுடைய எண்ணங்களும், பேச்சும் சிந்தனையும் அமையும். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். சுப செலவுகள் தான். பயப்பட வேண்டாம். சுப செலவுகளுக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். திருமணம் காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு உங்கள் நிதி நிலைமையை சீர் செய்யும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சந்தோஷம் நிறைந்த மாதமாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறைய துவங்கும். வங்கி கடன் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய புது விஷயங்களை சிந்திப்பீர்கள். புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த வாக்குவாதம் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். செவ்வாய்க்கிழமை துர்க்கை வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இந்த மாதம் மன நிம்மதியான மாதமாக இருக்கும். பெருசாக எந்த டென்ஷனும் இருக்காது. நிதி நிலைமை சீராக இருக்கும். வாங்கிய கடனை திருப்பி அடைக்க நல்ல நேரம் காலம் பிறந்து விடும். நகையை அடமானத்திலிருந்து மீட்டுக் கொள்வீர்கள். பிள்ளைகளுடைய நலனில் முன்னேற்றம் இருக்கும். மனதிருப்தி இருக்கும். வேலையில் திறமைகள் வெளிப்படும். எப்படியாவது டார்கெட்டை முடித்தே ஆக வேண்டும் என்று நேரம் காலம் பார்க்காமல் உழைப்பீர்கள். எதிரிகள் முன்பு கொஞ்சம் கவனமாக செயல்படவும். எதிரிகளை குறைத்து எடை போட வேண்டாம். சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாடு நன்மையை தரும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கொஞ்சம் சோதனைகள் நிறைந்த மாதமாகத் தான் இருக்கும். உங்களுடைய நேர்மையை அந்த கடவுள் சோதிப்பான். நண்பர்கள் உறவுகள் யாராவது உங்களுடைய மனதை கலைப்பதற்கு போராடுவார்கள். உங்களை குறுக்கு வழியில் அழைத்துச் செல்ல திட்டம் தீட்டுவார்கள். ஆனால் அதற்கெல்லாம் நீங்கள் துணை போகக் கூடாது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கக்கூடாது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். கடின உழைப்பு உங்களுக்கான பலனை தேடிக் கொடுக்கும். அனாவசியமாக எந்த இடத்திலும் பொய் சொல்லாதீர்கள். மேலதிகாரிகளுக்கு உண்மையாக நடந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றபடி பெருசாக எந்த பிரச்சனையும் இருக்காது. மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்தால், இந்த மாதம் தப்பித்துக் கொள்ளலாம். தினமும் முடிந்தால் கூட, சிவபெருமானை வழிபாடு செய்யுங்கள். உங்களுக்கு மனதில் ஒரு தெளிவு பிறக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை இருந்து வந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். நல்ல வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு, கையில் பணம் இல்லாமல் தவித்து வந்தவர்களுக்கு எல்லாம் இனி வரக்கூடிய காலகட்டத்தில் நிச்சயம் வசந்தம் வீசும். திருமணம் ஆகாமல் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. கூடிய சீக்கிரம் திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்ய கடன் தொகை கிடைக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தினமும் குலதெய்வத்தை வழிபடுங்கள் நல்லது.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் ரொம்ப பிசியான மாதமாக இருக்கப் போகிறது. அடுத்தடுத்த வேலைகள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கும். பெருசாக ஓய்வு எடுக்க நேரம் இருக்காது. குறிப்பாக கொஞ்சம் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு வெளியூர் பிரயாணம் செய்வது, உங்களுக்கு கீழே பணிபுரிபவர்களை கவனித்துக் கொள்வது, என்று கொஞ்சம் சிரமங்கள், இருக்கும். ஆசிரியர் தொழிலில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். பாராட்டுகளும் புகழும் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். பண பரிவர்த்தனையில் கவனம் இருக்கும். யாரை நம்பியும் கண் மூடிக்கொண்டு ஜாமின் கையெழுத்து போடக்கூடாது. ஜாக்கிரதை, வியாழக்கிழமை குரு பகவான் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த மாதம் சந்தோஷம் நிறைந்த மாதமாக இருக்கும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்க துவங்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை உயர்த்துவீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வேலையிலும் வியாபாரத்திலும் நன்மையே நடக்கும். வேலையில் இருந்து வந்த டென்ஷன்கள் குறையும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சில பேருக்கு பதவி, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டில் பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்ளுங்கள். அவர்களுடைய பேச்சை மீற வேண்டாம். சனிக்கிழமை ஹனுமன் வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தேவையற்ற சிந்தனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் நேரத்தை வீணடிக்க கூடாது. சொன்ன வேலையை சொன்ன நேரத்தில் முடித்துக் கொடுப்பதில் மட்டும் முதலில் அக்கறையாக இருக்க வேண்டும். நண்பர்கள் உறவுகள் பொழுதுபோக்கு, வீண் செலவு என்று எந்தவிதமான விஷயங்களிலும் நீங்கள் தலையிடக்கூடாது. இந்த மாதம் உங்களுக்கு கூடுதல் பொறுப்பு தேவை. பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டவும். குடும்ப செலவுகளில் அக்கறை காட்டவும். பெரியவர்களுடைய ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். பிரச்சனைகள் வந்தால் மனம் துவண்டு போகக் கூடாது. எப்போதும் துணிச்சலோடு நடந்து கொள்ள வேண்டும். மேலதிகாரிகளின் ஆதரவை பெற கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும். இந்த மாதம் சிரமங்களில் இருந்து விடுபட வேண்டும் என்றால் உழைப்பு உழைப்பு என்று இருக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானை வழிபடுங்கள். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள் நல்லதே நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கொஞ்சம் கூடுதல் பொறுப்புகள் இருக்கும். கூடுதல் செலவுகள் இருக்கும். வெளியூர் பயணங்களில் மூலம் கொஞ்சம் அலைச்சல் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் டென்ஷன் அதிகரிக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருக்கலாம். வியாபாரத்தில் பொருத்தவரை நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல லாபமும் கிடைக்கும். ஆனால் வியாபாரத்தை தொடர்ந்து முன்னேற்ற பாதையில் எடுத்து செல்ல உங்களுடைய ஆரோக்கியம் ஒத்துழைக்காமல் போகலாம். கவனமாக இருங்கள். எல்லாம் நல்லபடியாக நடந்தாலும் இறுதியில் திருஷ்டி போட்டு வைத்தது போல ஒரு கஷ்டம் வரும். அதற்காக பயந்து விடக்கூடாது. கஷ்டத்தை எதிர்கொள்ள துணிச்சலோடு நடந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நேரத்தை வீணாக செலவழிக்க வேண்டாம். ஏதாவது சந்தேகம் என்றால் பெரியவர்களிடம் ஆலோசித்து முடிவு எடுக்கவும். முருகர் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
கும்பம்
கும்ப ராசியை பொறுத்தவரை இந்த மாதம் ஏற்ற இறக்கத்தோடு இருக்கும். மாதத்தின் துவக்கத்தில் பெருசாக பிரச்சனை இருக்காது. ஆனால் மாதத்தின் இறுதி கட்டத்தில் கொஞ்சம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வேலையில் அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள். நாளை செய்யலாம் என்ற வார்த்தையை சொல்லக்கூடாது. அன்றைக்கான வேலையை அன்றே செய்து விட வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து நடக்க வேண்டும். வாக்குவாதம் செய்யக்கூடாது. வீட்டில் முதியவர்களின் நலனில் அக்கறை காட்டுங்கள். எந்த இடத்திலும் முன் கோபம் வர வேண்டாம். இந்த மாதம் பணிவாக இருந்தாலே பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். தினமும் பெருமாள் வழிபாடு நன்மையை செய்யும்
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் லட்சியம் நிறைவேற கூடிய மாதமாக இருக்கும். கடந்து வந்த பிரச்சனைகளை எல்லாம் முடிப்பதற்கு கடவுள் உங்களுக்கு நல்ல வழியை காண்பிக்க போகின்றார். நிதிநிலைமை சீராகும். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான அத்தனை முயற்சிகளும் மேற்கொள்வீர்கள். மன நிம்மதி கிடைக்கும். எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்ற திருப்தியும் இருக்கும். வேலையில் முட்டி மோதி எப்படியும் உங்களுடைய டார்கெட்டை முடித்து விடுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆனால் எல்லா விஷயத்திலும் ஒரு பொறுமை தேவை. உங்களுடைய நலனை நீங்களே ஊர் முழுவதும் தம்பட்டம் அடித்துக் கொள்ள கூடாது. குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam