புரட்டாசி மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

புரட்டாசி மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Qries

– Advertisement –

மேஷம்
இந்த மாதம் உங்களுக்கு அற்புதமான மாதமாக தான் பிறக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பல தொல்லைகள் உங்களை விட்டு நீங்கும். எதிரி பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு மன நிம்மதியை அடைவீர்கள். சில விஷயங்களில் நீங்கள் எடுக்கக் கூடிய தைரியமான முடிவுகள் உங்கள் எதிர்காலத்திற்கு நல்ல பலனை கொடுக்கும். குடும்பத்தில் மட்டும் கொஞ்சம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை துணையோடு வாக்குவாதம் செய்யக்கூடாது. சண்டை போடக்கூடாது. புதுசாக ஏதாவது தொழில் தொடங்குவதாக இருந்தால் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். உங்களுக்கு மூத்தவர்கள் அனுபவசாலிகளின் பேச்சை கேட்டு நடக்க வேண்டும். தினமும் பிள்ளையாரை வழிபாடு செய்ய நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொறுமை தேவை. பொறுமையாக நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். அவசரப்பட்டு நீங்கள் பேசும் வார்த்தை நீங்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் உங்களுக்கு பெரிய அளவில் பிரச்சனையை கொடுத்து விடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொத்து சுகம் சேர்க்கை இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக விளங்குவார்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். நிதிநிலைமை சீராக இருக்கும். தினமும் அம்மன் வழிபாடு செய்வது நன்மையை கொடுக்கும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய மாதமாக இருக்கும். உங்களுடைய கனவுகள் நினைவாகும். மாதத்தின் முதல் பதினைந்து நாட்கள்  அயராது உழைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இந்த உழைப்பிற்கான பலன்கள் எல்லாம் அடுத்து வரக்கூடிய 15 நாட்களில் உங்களுக்கு கிடைத்துவிடும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். உடலுக்கு சூடு கொடுக்கும் பொருட்களை சாப்பிடக்கூடாது. ஆரோக்கிய பிரச்சனை மருத்துவ செலவு வர வாய்ப்புகள் உள்ளது ஜாக்கிரதை, வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. தினமும் பெருமாள் வழிபாடு செய்வது உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இந்த மாதம் லாபகரமான மாதமாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக வராத பணம் உங்கள் கையை வந்து சேரும். எதிர்பார்த்த சேமிப்பை செய்வீர்கள். மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் நீங்கள் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ள முடியும். சொத்து பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். தொழில் அமோகமான வளர்ச்சியை அடையும். முருகர் வழிபாடு இந்த மாதம் உங்களுக்கு நன்மையை செய்யும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் உழைக்கக்கூடிய மாதமாக இருக்கும். சில விஷயங்களை சாதித்தே ஆக வேண்டும் என்று அயராது உங்கள் உழைப்பை முதலீடாக போடுவீர்கள். பம்பரமாக சுழன்று வேலை செய்வீர்கள். கவலைப்படாதீர்கள் உங்களுடைய இலக்கை நிச்சயம் நீங்கள் அடைந்தே தீருவீர்கள். குடும்பத்தில் மன நிம்மதி இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். திருமணம் நடக்காதவர்களுக்கு திருமண பேச்சு வார்த்தை நடக்க தொடங்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளுடைய ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களோடு நட்புறவு பழகுவார்கள். தொழிலில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். முதலீட்டின் போது ஒன்றுக்கு பலமுறை யோசிக்கவும். தினமும் மகாலட்சுமி வழிபாடு செய்வது நன்மை தரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டிய மாதமாக இருக்கிறது. எல்லா விஷயத்திலும் ஒரு அனுசரணை தேவை. எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனம் தேவை. யாராவது ஏதாவது ஒரு விஷயத்தை சொல்கிறார்கள் என்றால் கண்மூடித்தனமாக அந்த வேலையை செய்யக்கூடாது. அந்த தொழிலில் பணத்தை போட்டு விடக்கூடாது. குறிப்பாக நண்பர்கள் பேச்சைக் கேட்டு எந்த வேலையையும் தொடங்காதீங்க. ஆழம் தெரியாமல் காலை விடாதீங்க. கவனத்தோடு இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. யாருக்கும் பணம் கொடுக்காதீங்க, ஏமாற நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது. வாழ்க்கை துணையோடு அனுசரித்து செல்ல வேண்டும். பிள்ளைகளின் போக்கில் கவனம் இருக்க வேண்டும். இந்த மாதம் பிரத்தியங்கிரா தேவி வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கப் போகின்றது. உங்களுடைய சங்கடங்கள் எல்லாம் தீரப் போகின்றது. உடல் உபாதைகள் விலகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நிறைய பிரச்சனையை சந்தித்திருப்பீர்கள். அந்த பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக சரியாகும். வருமானம் படிப்படியாக உயரும். வேலையில் நல்ல பிரமோஷன் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். நீண்ட தூர பயணத்தின் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். இந்த மாதம் ஏதாவது ஒரு காவல் தெய்வத்தை வழிபாடு செய்வது சிறப்பு.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த மாதம் நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படப் போகின்றது. வீடு மாற்றம், இடமாற்றம், தொழிலில் சின்ன சின்ன விஷயங்களை மாற்றுவீர்கள். இதுபோன்ற மாற்றங்கள் உங்களுக்கு நற்பலன்களை கொடுக்கும். திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் கூடி வரும். குழந்தை பாக்கியத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வீடு மனை சொத்து சுகம் வாங்கவும் நல்ல காலம் பிறக்கும். விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் தரும் மாதமாக அமையும். இந்த மாதம் சிவபெருமானை வழிபாடு செய்ய உங்களுக்கு நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இந்த மாதம் நிறைய அனுபவங்களை கற்றுக் கொள்ளக்கூடிய மாதமாக இருக்கப் போகின்றது. சில ஏற்ற இறக்கங்கள் சில வெற்றி தோல்விகள் உங்களை பக்குவப்படுத்தும். ஆகவே உங்களுடைய முயற்சிகளில் வெற்றி அடைந்தாலும், தலைகனம் வரக்கூடாது, தோல்வி அடைந்தாலும் துவண்டு போகக்கூடாது. அன்றாட வேலைகளை அன்றாடம் முடித்து விட வேண்டும். இன்றைக்கான வேலையை நாளை தள்ளி போட வேண்டும் என்று நினைக்க கூடாது. பிள்ளைகளின் போக்கில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக பெண் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பெற்றவர்கள் பார்த்துக் கொண்டே இருங்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. தினமும் குலதெய்வ வழிபாடு உங்களுக்கு மன நிம்மதியை கொடுக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக இருக்கும். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவினர்களுக்குள் இருந்து வந்த பகை விலகும். வீட்டில் சுப செலவுகள் உண்டாகும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் உங்களுடைய முயற்சிகளை இன்னும் வேகமாக வேண்டும். வேலை கிடைக்கவில்லையே என்று துவண்டு போய் அமர்ந்து விட்டால் எதுவும் நடக்காது. எவ்வளவு முயற்சிகளை முதலீடாக போடுகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு நன்மை இந்த மாதம் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. தினமும் மீனாட்சி அம்மனை வழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த மாதம் நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். ஏதாவது நகை சொத்து பத்திரத்தை அடமானம் வைத்திருந்தால், அதை சீக்கிரம் மீட்டு எடுப்பதற்கு உண்டான வழியை பாருங்கள். ஆடம்பர செலவை குறையுங்கள். மற்றபடி வியாபாரம் நல்ல முன்னேற்றத்தோடு இருக்கும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் விலகும். வேலையில் சின்ன சின்ன எதிரிகள் உருவாகலாம். நீங்கள் செய்யக்கூடிய வேலையை குறை சொல்ல மேனேஜர் முன் வந்து நிற்பார்கள். அதையெல்லாம் நீங்கள் தான் சமாளிக்க வேண்டும். இந்த மாதம் முழுவதும் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்ய உங்களுக்கு மன தைரியம் அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் நல்ல ஆதரவு கிடைக்கும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு நண்பர்கள் உறவுகள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். இழுபறியாக இருந்த வேலைகளை எல்லாம் சுலபமாக முடித்து விடுவீர்கள். உங்களுடைய பேராசை தான் சில நஷ்டங்களை உண்டு பண்ண வாய்ப்பு இருக்கிறது. பேராசையை குறைத்துக் கொள்ளுங்கள் செலவை குறைத்துக் கொள்ளுங்கள். அதிகமாக வாய் பேசக்கூடாது. அடுத்தவர்கள் நல்லதுக்காக சில விஷயங்களை சொல்லும்போது, அதை செவி கொடுத்து கேட்க வேண்டும். அலட்சியப் போக்கோடு திரிந்தால் ஆபத்து உங்களுக்குத்தான். ஆரோக்கியத்தில் பிரச்சனை வரவும் வாய்ப்புகள் இருக்கிறது கவனமாக இருந்துக்கோங்க. தினமும் முருகர் வழிபாடு நன்மையை கொடுக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top