மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் முன்னேற்றம் நிறைந்த மாதமாக இருக்கும். குறிப்பாக வியாபாரத்தில் யார் உங்களை ஏமாற்றி விட்டு சென்றார்களோ, அவர்களே திரும்பி வந்து அந்த பணத்தை கொடுத்து விடுவார்கள். தொழிலில் இருந்த நஷ்டம் விலகும். வாழ்க்கையின் முன்னேற உங்களுக்கு என்ன விஷயங்கள் எல்லாம் தடை கற்களாக நின்றதோ, அவையெல்லாம் படி கற்களாக மாறும். பயப்படவே வேண்டாம் வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல இந்த மாதம் நல்ல நேரம் கை கூடி வந்திருக்கிறது. வருமானம் அதிகரிக்கும். கஷ்டங்கள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். முடிந்த அளவு உங்கள் கையால் இந்த மாதம் பசியோடு இருக்கும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். நிச்சயம் உங்கள் குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வேலை வியாபாரம் எல்லாமே நல்லா தான் இருக்குது. கை நிறைய சம்பாத்தியம் பெறுவீர்கள். இந்த மாத பண்டிகைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வீட்டிற்கு செய்து கொடுப்பீர்கள். வெளியிடங்களில் இருக்கும் பகைவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல பெயர் தானாக தேடி வரும். ஆனால் நீங்கள் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தான் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளுடைய போக்கை கவனிக்க வேண்டும். அவர்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். குடும்ப விஷயத்தில் அக்கறை காட்டினால் இந்த மாதம் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம். முடிந்தவரை பசு மாட்டிற்கு உங்கள் கையால் தானம் கொடுங்கள். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்கள் இந்த மாதம் சோம்பேறித்தனத்தை விட்டு விட வேண்டும். ஓய்வு என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது. இரவு தூக்கம் மட்டும் தான் ஓய்வு. மற்ற நேரத்தில் அயராது உழைத்தால் மட்டுமே வெற்றி காண முடியும். வேலையிலும் வியாபாரத்திலும் கவனமாக இருக்க வேண்டும். புது மனிதர்களை முழுசாக நம்ப வேண்டாம். மற்றபடி பெருசாக எந்த பிரச்சனையும் வராது. அதிக நேரம் கைப்பேசி பார்க்காதீங்க. நேரத்தை அனாவசியமாக செலவு செய்ய வேண்டாம். அடுத்தவர்களுடைய விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். சுறுசுறுப்பாக இருந்தாலே போதும். இந்த மாதம் சிக்கலில் இருந்து தப்பிக்கக்கூடிய பாக்கியம் உங்களுக்கு கிடைத்துவிடும். தினமும் தோறும் முருகர் பாதங்களை பார்த்து வழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்.கடகம்கடக ராசிக்காரர்கள் இந்த மாதம் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வருமானம் வருவது போல் தான் இருக்கும். நிதி நிலைமை சீராக இருப்பது போல் தான் இருக்கும். ஆனால் மாத கடைசியில் கொஞ்சம் பணம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் வந்துவிடும். உஷாராகவே இருந்துக்கோங்க. யாரையும் நம்பி கொடுக்கல் வாங்கலில் ஈடுபடாதீங்க. ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் முழு கவனம் தேவை. எச்சரிக்கை தேவை. சொந்த பந்த பிரச்சனை, சொத்து பிரச்சனை இதைப் பற்றி எல்லாம் சிந்திக்க கூட வேண்டாம். எதுவாக இருந்தாலும் அடுத்த மாதம் தள்ளிப் போடுங்கள். என்ன நடந்தாலும் உங்களுடைய குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதீங்க. கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது தினமும் பெருமாள் வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த மாதம் வெற்றி காணக்கூடிய மாதமாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலைகளை துவங்கலாம். புதுசாக சொத்து வாங்குவது வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவது வண்டி வாகனம் வாங்குவது இதுபோல விஷயங்களை மேற்கொள்ளலாம். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெரிய பெரிய நன்மைகள் நடந்தாலும், லட்சம் லட்சமாக பணம் வந்தாலும், ஒருபோதும் உங்கள் மனது குறுக்கு வழியை தேர்ந்தெடுக்க கூடாது. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். அரசுக்கு புறம்பான காரியங்களில் ஈடுபடாதீங்க. இது புரட்டாசி மாதம் முன்னோர்களையும் குல தெய்வத்தையும் வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிக மிக கவனம் தேவைப்படக்கூடிய மாதமாக இருக்கப் போகிறது. பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். அவசரமே படக்கூடாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. வேலையில் மேலதிகாரிகளை எதிர்த்துக் கொள்ளக் கூடாது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. வேலை பளுவும் அதிகமாகத்தான் இருக்கும். வீண்விரய செலவுகள் அதிகமாக இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு கொஞ்சம் சுமாரான மாதமாக தான் இருக்கிறது. கஷ்டங்களில் இருந்து விடுபட வேண்டும் என்றால் நேர்மையாக நடக்க வேண்டும் யாரிடமும் பொய் சொல்லி மாட்டிக் கொள்ளக் கூடாது. அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். இந்த மாதம் முழுக்க முழுக்க வாராகி மனதில் நினைத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் பிரச்சினையிலிருந்து உங்களை காப்பாற்றி விடுவாள். – Advertisement -துலாம்துலாம் ராசி காரர்களுக்கு இந்த மாதம் நிறைய நன்மைகள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெரிய பெரிய பிரச்சனையில் இருந்து கூட சுலபமாக தப்பித்து விடுவீர்கள். ஏதேதோ தில்லுமுல்லை செய்து உங்களுடைய பிரச்சனைகளை சமாளித்துக் கொள்வீர்கள். இந்த மாதம் முதல் கட்டத்தில் இதுபோல தப்பிக்க நிறைய வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இந்த மாதத்தின் இறுதி கட்டத்தில் நீங்கள் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதிகமாக கடன் வாங்க கூடாது. வியாபாரத்தில் பெருசாக முதலீடு செய்யக்கூடாது. உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களோடு பழகும் போதும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய வீட்டு விஷயங்களை அனாவசியமாக வெளியில் சொல்லாதீங்க. வீட்டின் அருகில் எங்கேயாவது லட்சுமி நரசிம்மர் கோவில் இருந்தால் தினமும் அந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்கள் இந்த மாதம் ரொம்பவும் நெருக்கமான நண்பர்கள் உறவுகளிடம் இருந்து கொஞ்சம் ஒதுங்கி இருக்க வேண்டும். யாரையெல்லாம் நீங்கள் நம்புகிறீர்களோ, அவர்களெல்லாம் உங்களுக்கு எதிராக செயல்பட கொஞ்சம் வாய்ப்புகள் இருக்கிறது. மற்றபடி நிதிநிலைமை சீராக இருக்கும். பண்டிகைகளை சந்தோஷமாக கொண்டாடுவீர்கள். சொந்த பந்தங்களோடு கூடி உங்களுடைய நேரத்தை செலவு செய்கிறீர்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் எல்லாம் மீண்டும் நடக்கும். இந்த துரோகத்தில் இருந்து தப்பிக்க, பிரச்சனையிலிருந்து தப்பிக்க வாராகி வழிபாடு அல்லது பிரத்யங்கரா வழிபாடு மேற்கொள்ளுங்கள் நல்லது நடக்கும்.தனுசுதனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த மாதம் நிதானம் தேவைப்படும். அவசர அவசரமாக ஒரு முடிவை எடுக்கவே கூடாது. ஒரு பிரச்சனை நடந்தால் அதை ஆற போடுங்கள். நாலு நாள் யோசித்து பிறகு முடிவை எடுப்பது நல்லது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசக்கூடாது. தேவையில்லாத ஒரு மன பயம் பதட்டம் மனதில் இருக்கும் போது வாயை திறக்க வேண்டாம். மௌன விரதம் இருங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் பெரிய தொல்லை இருக்கும். டார்ச்சர் பண்ணுவாங்க. ஆனா இருக்கும் வேலையை இப்போது தக்க வைத்துக் கொள்வது மட்டும்தான் ஒரே வழி. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகிவிடும். வீண் விரைய செலவுகள் கொஞ்சம் குறையும். மற்றபடி பிரச்சினைகளை எதிர்கொள்ள மன தைரியத்தை வர வைத்துக் கொள்ள சிவனை கும்பிடுங்கள்.மகரம்மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கம் நிறைந்த மாதமாக தான் இருக்க போகிறது. இந்த மாதம் ஒருவருக்கு வாக்கு கொடுக்கும் போது பலமுறை யோசிக்க வேண்டும். முடிந்தால் யாருக்கும் வாக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது. நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத விஷயங்களுக்கு அதிகமாக பேசாதீங்க. குறிப்பாக விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். கோபத்தோடு எந்த ஒரு பொருளையும் கையில் எடுக்கக்கூடாது. கூர்மையான பொருட்களை சமையலறையில் கையாளும்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அடிபட்டு ரத்த காயம் ஏற்படுவதற்கான சின்ன வாய்ப்பு இருக்கிறது ஜாக்கிரதை. மற்றபடி வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய, கடன்கள் கிடைக்கும். வியாபாரத்தை முன்னேற்றி தருவதற்கு உதவிகளும் கிடைக்கும். இந்த மாதம் பாதிப்புகள் வராமல் தடுக்க குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.கும்பம்கும்ப ராசிக்காரர்கள் நிதானமாக பொறுமையோடு சிந்தித்தால் இந்த மாதம் நிறைய நல்ல விஷயங்களில் சாதிக்கலாம். அவசரப்பட்டு முன் கோபப்பட்டால் இருக்கும் நல்ல விஷயங்களை இழப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பஞ்சாயத்துகள் ஒரு முடிவுக்கு வரும். இடைவெளியோடு இருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில் மேலதிகாரிகளுடைய பிரஷரை சில பேரால் தாங்க முடியாது. இருப்பினும் யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. வியாபாரத்தை பொருத்தவரை நீண்ட நாட்களாக பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களை எதிர்த்துக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் அனுசரணை, இந்த மாதம் நிறைய நன்மைகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவை குறைக்க வேண்டும். கைநீட்டி யாரிடமும் கடனாக பணம் வாங்காதீங்க. பெருமாள் வழிபாடு செய்யுங்கள் நன்மை உண்டு.மீனம்மீன ராசிக்காரர்கள் இந்த மாதம் எடுத்து வைக்கக்கூடிய ஒவ்வொரு அடியிலும் கவனம் தேவை. அடுத்தவர்களுடைய பிரச்சினையில் தலையிட்டு அடுத்தவர்களுடைய குறைகளை சுட்டிக்காட்டும் போது, பிரச்சனைகள் வரும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. மனைவி சொந்த பந்தங்களோடு பேசும் போதும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளில் கவனம் செலுத்துங்கள். அனாவசியமாக பேசாதீர்கள். அழையாத வீட்டிற்கு விருந்தாளியாக ஒருபோதும் செல்லாதீர்கள். தேவையற்ற அவமானங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் வரும். நிதானம் பொறுமை அனுசரனை இந்த மாதம் உங்களை காப்பாற்றும். விநாயகர் கோவிலில் அரச மரத்தடியில் சர்ப்ப நாகங்கள் இருக்கும் அதை வணங்கினால் நல்லது நடக்கும்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam