மாசி மாத ராசி பலன் 2025 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

மாசி மாத ராசி பலன் 2025 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிதி நிலைமை சீராகும். செலவுக்கு பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, கையில் தேவைக்கு ஏற்ப பணம் வந்து சேரும். உறவுகளுக்கு செய்ய வேண்டிய செயல்முறை, கடனாளிகளுக்கு கொடுக்க வேண்டிய கடன், என்று உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நல்லது நடக்கும். லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் அனுசரணை இருக்கும். தேவையற்ற நண்பர்கள் தானாக விலகி விடுவார்கள். ஆகவே மனதிற்கு பிடித்த நண்பர்கள் பிரிந்து விட்டார்களே, என்று எந்த கவலையும் பட வேண்டாம். இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு கடவுள் நல்ல விஷயங்களை மட்டும் தான் கொடுப்பார். கெட்ட விஷயங்களை உங்களை விட்டு விலக்கி வைப்பார். கடவுளின் மீது பாரத்தை போட்டு அன்றாட வேலையை துவங்குங்கள். தினமும் குலதெய்வத்தை கும்பிடுங்கள் நல்லதே நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த மாதம் முழுவதும் எல்லா விஷயங்களையும் சரியாக பிளான் செய்து செய்வீர்கள். நேரா நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு, முதலில் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். பிறகு வேலையில் கவனத்தை செலுத்தலாம். இந்த மாதம் வேலை தொழில் எல்லாம் நல்லபடியாக நடந்தாலும், மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கு கொஞ்சம் வாய்ப்புகள் இருக்கிறது. வேலை வியாபாரம் இவைகளோடு சேர்த்து உங்களுடைய உடல் நலனில் கட்டாயம் அக்கறை காட்ட வேண்டும். ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிட வேண்டும். வெளியிடங்களில் உணவு சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் இந்த மாதம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மாணவர்கள் நேரத்தை வீணாக செலவழிக்க கூடாது. தேவையற்ற நண்பர்களோடு சேர்ந்து வெளியிடங்களில் சுற்ற வேண்டாம். தினமும் சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடை செய்யலாம். முடியாதவர்கள் திங்கட்கிழமை சிவன் கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ளவும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஓட்டம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஒரு இடத்தில் நிலையாக தங்க முடியாது. நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வேலை சம்பந்தமாக வெளியூர், வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சில பேர் குடும்பத்தோடு சுற்றுலா செல்வீர்கள். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ளவும் வாய்ப்புகள் இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் போல்டாக நடந்து கொள்ள வேண்டும். எதற்கெடுத்தாலும் தயங்க கூடாது. தவறு என்று மனதிற்கு பட்டால் தவறை எடுத்துச் சொல்லுங்கள். திறமையை வெளிப்படுத்துங்கள். அப்போதுதான் இந்த மாதம் உங்களுக்கு நல்லது நடக்கும். செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கை அம்மனை வழிபாடு செய்யுங்கள் மன தைரியம் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த மாதம் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சேமிப்புகள் கரைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ள வேண்டும். முதலில் வேலை, பிறகு மற்ற விஷயங்களை எல்லாம் கவனிக்க வேண்டும். நேரத்தை அனாவசியமாக செலவு செய்து விட்டு, கடைசி நேரத்தில் கஷ்டப்பட்டால் ஒன்றுமே செய்ய முடியாது. அடுத்தவர்களை குறை சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளுடைய நலனில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையோடு சண்டை போடக்கூடாது. இந்த மாதம் சின்ன சின்ன எதிர்ப்புகள், சின்ன சின்ன பிரச்சனைகள், சின்ன சின்ன கஷ்டங்களை சந்தித்து தான் ஆக வேண்டும். அனுமனை வழிபாடு செய்யுங்கள். மொத்த தைரியமும் உங்களிடத்தில் வந்துவிடும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் புதுப்புது வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். அயராது உழைப்பீர்கள். புதிய வேலை, புதிய தொழில் என்று நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு, புது அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். நிதிநிலைமை சீராகத்தான் இருக்கும். செலவுக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மன நிம்மதி இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை இருக்கும். இந்த மாதம் விநாயகர் வழிபாடு இன்னும் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் லாபம் நிறைந்த மாதமாக இருக்கப் போகின்றது. நீண்ட நாள் முன்பு முதலீடு செய்த பணத்தில் இருந்து வருமானம் வரும். கடன் தொல்லை குறையும். அடமானத்தில் வைத்திருந்த நகை சொத்து பத்திரத்தை மீட்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். இந்த மாத இறுதியில் சில பல பிரச்சனைகள் வந்தாலும் அதை துணிச்சலோடு எதிர் கொள்வீர்கள். நல்ல விஷயங்களை எல்லாம் இந்த மாத துவக்கத்திலேயே செய்து முடித்து விடுங்கள். தினமும் அங்காளம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சுறுசுறுப்பான மாதமாக இருக்கும். பெருசாக எந்த பிரச்சனையும் உங்களுக்கு இந்த மாதம் வராது. வேலையில் திறமை வெளிப்படும். வியாபாரத்தில் சுறுசுறுப்பு இருக்கும். எப்படியாவது லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடி ஓடி உழைப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேர்வுக்கு படிக்கக்கூடிய வேலையில் கவனத்தோடு இருப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவியும் செய்வீர்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரிய பேச்சுக்கள் நடக்கும். சுப செலவுகள் உண்டாகும். வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு வேலை வியாபாரம் தொழில் எல்லாம் நல்லபடியாக தான் நடக்கும். சுற்றி இருப்பவர்கள் எல்லாம் உங்களுக்கு நல்லது செய்வார்கள். வீட்டை விட்டு வெளியே வந்து விட்டால், எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போதும், இரவு வீடு திரும்பும் போதும் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். கணவன் மனைவி வாக்குவாதம் செய்து சண்டை போடக்கூடாது. பிள்ளைகளுடைய நலனிலும் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும். பெரியவர்களை மரியாதையோடு நடத்த வேண்டும். ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். இந்த மாதம் முருகன் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கப் போகின்றது. எதிர்பாராத நல்லது நடக்கும். தேவையில்லாத பிரச்சினைகள், தேவையில்லாத நண்பர்கள் உங்களை விட்டு தானாக விலகி செல்வார்கள். மன நிம்மதியை அடைவீர்கள். பண பிரச்சனை தீரும் வீடு நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் சீக்கிரம் சரியாகிவிடும். புதுசாக ஏதேனும் சொத்து வாங்குவதாக இருந்தால் முயற்சி செய்யலாம். குழந்தை பாக்கியம் இன்றி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வீட்டில் கெட்டிமேல சத்தம் கேட்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். வீட்டில் சந்தோஷம் நிலைத்திருக்கும். குடும்பத்தோடு குலதெய்வ வழிபாடு செய்யுங்கள் நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றம் நிறைந்த மாதமாக இருக்கும். நீங்கள் இருக்கும் நிலையில் இருந்து வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு காலடி எடுத்து வைப்பீர்கள். ப்ரோமோஷன் கிடைப்பதாக இருந்தாலும் சரி, வெளிநாட்டில் வேலை கிடைப்பதாக இருந்தாலும் சரி, எல்லா நன்மைகளும் உங்களைத் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேர்வுகளில் அதிகம் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றால், வரக்கூடிய நாட்களில் படிப்பில் கவனம் செலுத்துங்கள். தேவையற்ற நண்பர்களிடம் இருந்து வெளியே வாங்க. மாணவர்கள் மொபைல் போனை எடுக்கவே எடுக்காதீங்க. நேரத்தை அனாவசியமாக வீணடிக்காதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் எல்லோருமே கவனமாக இருக்க வேண்டும். வராகி வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் கூடுதல் கவனம் தேவை. அலட்சியமாக இருக்கக் கூடாது. வியாபாரத்தில் பார்ட்னரோடு வாக்குவாதம் செய்யக்கூடாது. கடனுக்கு பரிவர்த்தனை செய்ய வேண்டாம். புதிய முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும். அதிக வட்டிக்கு கடன் வாங்க கூடாது. வேலையிலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். இருக்கும் வேலையே தக்க வைத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம். கணவன் மனைவிக்குள் ஈகோ பார்க்க கூடாது. உறவினர்களிடையே அனுசரித்து செல்ல வேண்டும். முன் கோபத்தை குறைக்க வேண்டும். தினமும் 5 நிமிடம் மனதை ஒருநிலைப்படுத்தி பிடித்த இறைவனின் பெயரைச் சொல்லி தியான நிலையில் இருக்கவும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டும். நிதி நிலைமையில் சவால் இருக்கும். வேலையில் சவால், வியாபாரத்தில் சவால், என்று வாழ்க்கையை கொஞ்சம் போர்க்களம் போலத்தான் செல்லும். எவ்வளவுதான் வருமானம் வந்தாலும், இந்த கடனை மட்டும் அடைக்க முடியாத சூழ்நிலை இருக்கும். குறிப்பாக வீட்டில் மனைவியை சமாளிக்க முடியாத சூழ்நிலை இருக்கும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். மன அழுத்தம் ஏற்படலாம். பிடித்த பாடலை கேளுங்கள். சோசியல் மீடியாவில் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். தினமும் பிள்ளையாரை கும்பிடுங்கள் நன்மை நடக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top