இந்த வார ராசிபலன் 03/02/2025 முதல் 09/02/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

இந்த வார ராசிபலன் 03/02/2025 முதல் 09/02/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்லது நடக்கக் கூடிய வாரமாக இருக்கும். எப்போதுமே சோம்பேறித்தனத்தோடு இருப்பவர்கள் கூட, இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். எப்படியாவது பொருளாதார நிலையில் உயர்ந்து நிற்க வேண்டும் என்று அயராது உழைப்பீர்கள். வியாபாரத்தை விரிவு படுத்த முயற்சி செய்வீர்கள். அடித்தட்டில் இருந்து ஒரு நூலாவது மேலே உயர வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் ஆழமாக விதைக்கப்படும். நிறைய நல்லது நடக்கும். வீட்டில் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். தினமும் விநாயகரை வழிபாடு செய்தால் நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களாக வராத பணம் கையை வந்து சேரும். நடக்கவே நடக்காது என்ற நல்ல காரியங்கள் கூட நடக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். வியாபாரத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை. எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்கக் கூடாது. புது மனிதர்களை முழுசாக நம்ப கூடாது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். உறவுகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். முருகர் வழிபாடு இந்த வாரம் உங்களுக்கு நன்மையை செய்யும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் பொறுமையாக இருக்க வேண்டும். எல்லா விஷயத்திலும் உஷாராக இருக்க வேண்டும். பெருசாக வாயால் வடை சுடலாம். வாயிலேயே கோட கோபுரம் கட்டலாம். ஆனால் அந்த விஷயத்தை செயல்படுத்தி காட்டும்போது உங்களுக்கு பிரச்சனைகள் வந்துவிடும். அனாவசியமாக அடுத்தவர்களிடம் வாய் சவடால் விடாதீர்கள். பிறகு எந்த இடத்திலாவது தலை குனிந்து நிற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அடக்கத்தோடு இருக்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். காரியத்தில் மட்டும் கண்ணாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. அடுத்தவர்களை குறை சொல்லாமல் இந்த வாரம் முழுவதும் உங்கள் வேலையை பாருங்கள். தினமும் 10 நிமிடம் அமைதியாக அமர்ந்து “ஓம் நமசிவாய” மந்திரம் சொல்லுங்கள் நல்லது நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். சுபகாரியங்களில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உறவுகளோடு ஒன்றாக உங்களுடைய நேரத்தை செலவு செய்வீர்கள். நிதி நிலைமை சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில் முழு கவனத்தோடு இருப்பீர்கள். எந்த அளவுக்கு சொந்த வேலை முக்கியமோ, அதே அளவுக்கு அலுவலகப் பணிக்கும் முக்கியத்துவம் கொடுத்து இரண்டையும் பேலன்ஸ் செய்து வைத்துக் கொள்வீர்கள். இந்த திறமையை உங்களை உயர்த்தி விடும். இந்த வாரம் சிவன் வழிபாடு உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நினைத்தது நடக்கக்கூடிய வாரமாக இருக்கும். நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டு வைத்திருந்த வேலைகளை இன்று கையில் எடுக்கலாம். அரசாங்க வேலைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். கைக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். மன நிம்மதி அடைவீர்கள். முதலீட்டில் ஆர்வம் செலுத்துவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வண்டி வாகனம் ஓட்டுபவர்கள் மட்டும் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். முதியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். மேலும் நன்மைகளை கடவுள் உங்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பான்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் நேரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இந்த வாரம் கவனத்தோடு இருக்க வேண்டும். அன்றைக்கு செய்ய வேண்டிய வேலையை, அன்றே முடித்து விட வேண்டும். நாளை என்ற வார்த்தை உங்கள் வாழ்க்கையில் இருக்கக் கூடாது. சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. அடுத்தவர்களை குறை சொல்லிக் கொண்டே இருக்கக் கூடாது. நம்மால் என்ன முடியும், நம்மால் என்ன முயற்சி எடுக்க முடியும், என்பதை பார்த்து வேலையில் ஆர்வம் காட்டினால் நிச்சயம் உங்களுக்கான வெற்றி வந்து சேரும். வியாபாரத்தில் இருக்கும் தடைகளை எல்லாம் நீக்க அயராது உழைக்க வேண்டும். இறையருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கு. நீங்கள் செய்யும் தவறுகளுக்கு கடவுளை குறை கூறக்கூடாது. தினமும் அம்மன் வழிபாடு உங்களுக்கு மன தைரியத்தை கொடுக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிக்கனம் கொஞ்சம் தேவை. முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும். கடன் கொடுக்கக் கூடாது, கடன் வாங்கக்கூடாது. ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. சேமிப்பிலிருந்து ஒரு ரூபாயை கூட எடுத்து செலவு செய்யக்கூடாது. ஆடம்பரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தேவைக்கு ஏற்ப பொருட்களை வாங்கினால் மட்டும் போதும். டிஸ்கவுண்ட் சேலில், பொருள் கிடைக்கிறது என்பதற்காக எல்லா பொருட்களையும் வாங்கி வீட்டில் குவிக்காதீர்கள். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் நீங்கள் நினைத்தபடி நல்லபடியாக நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். தேவையற்ற நண்பர்களிடம் இருந்து விலகி இருக்கவும். மகாலட்சுமி வழிபாடு செய்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் அந்தஸ்து கூடும். நான்கு பேர் மதிக்கத்தக்க வகையில் உங்களுடைய நிலைமை உயர்ந்து நிற்கும். வியாபாரத்தில் முன்னேறி செல்வீர்கள். குறிப்பாக சினிமா துறையில் இருப்பவர்களுக்கு, அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எல்லாம் எதிர்பாராத நல்லது, அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. எதிர்கால சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகளுடைய நலன், வீட்டில் இருக்கும் பெரியவர்களின் நலனில் அக்கறை காட்டுங்கள். மருத்துவ செலவாக வாய்ப்புகள் இருக்கிறது. தினமும் பெருமாள் வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய அனுபவங்கள் இருக்கும். வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு பாடங்களை உங்களுக்கு கடவுள் கற்றுத் தரப் போகின்றான். உடனே பயந்து விடக்கூடாது. நிறைய மனிதர்களின் சுய ரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். கஷ்டம் வரும்போது சில உறவுகள், நண்பர்கள் உங்களை விட்டு தானாக விலகி செல்வார்கள். சில மன கசப்பான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டிய நேரமும் காலமும் அமையும். மனதை எக்காரணத்தைக் கொண்டும் தளர விடக்கூடாது. மன உறுதியோடு இறை நம்பிக்கையோடு முயற்சிகளை மேற்கொள்ளவும். பிரத்தியங்கிரா வாராஹி இது போன்ற உக்கிர தெய்வங்கள் வழிபாடு எதிரிகளிடமிருந்து உங்களை காப்பாற்றி கொடுக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொருளாதாரத்தில் சில பல சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. புதுசாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு உண்டாகும். வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்ற இறக்கங்கள் வரலாம். வீட்டில் இருக்கும் பெண்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். புது நபரிடம் சீட்டு போடுவதாக இருந்தால் ஒன்றுக்கு பலமுறை சிந்திக்க வேண்டும். தேவையற்ற மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரத்தில் அனுசரணை தேவை. மேல் அதிகாரிகளிடம் அனுசரணை தேவை. பொறுமையாக இருக்கவும். அனாவசிய வார்த்தைகளை பேசவே கூடாது. கால பைரவர் வழிபாடு காலத்தால் வரும் பிரச்சினைகளை உங்களுக்கு தீர்த்து வைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிம்மதி அடையக்கூடிய வாரமாக இருக்கும். கடன் சுமையிலிருந்து வெளிவருவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். ஆனால் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கோட்டை விட்டுவிடுவீர்கள். ஏதோ ஒரு பிரச்சனைக்காக பேச வாயை திறக்க, அது குடும்ப தகராறு ஆக மாறவும் வாய்ப்புகள் இருக்கிறது. தாய் தந்தையரிடம் பேசும் போது கவனமாக இருக்கவும். வாழ்க்கை துணையிடம் பேசும் போதும் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தையை கொட்டி விட்டால் திரும்பவும் அல்ல முடியாது. ஜாக்கிரதை, ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. எளிதில் ஜீரணம் ஆகும் பொருட்களை மட்டும் இந்த வாரம் சாப்பிடவும். நேரம் தவறி சாப்பிடாதீங்க. தினமும் குலதெய்வ வழிபாடு கஷ்டங்களை தீர்க்கும்
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். தேவையற்ற டென்ஷன் அதிகரிக்கும். வீட்டில் இருக்கக்கூடிய வேலைகளையும் கவனிக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். இருந்தாலும், உங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தடை எதுவும் வராது. செலவுகளை எல்லாம் சமாளித்து விடுவீர்கள். சுப செலவுகள் இடையில் வந்து கொஞ்சம் பிரச்சனையை கொடுக்கும். இருந்தாலும் முகத்தில் சிரிப்பு ஒரு நாளும் குறையாது. எதையுமே பாசிட்டிவாக பார்ப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவியும் செய்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வேலையில் மனதிற்கு பிடித்த விஷயங்கள் நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. நரசிம்மரை வழிபாடு செய்வது நரக கஷ்டங்களை போக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top