இந்த வார ராசிபலன் 06/01/2025 முதல் 12/01/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

இந்த வார ராசிபலன் 06/01/2025 முதல் 12/01/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அனுசரணையான வாரமாக இருக்கும். தொல்லை கொடுக்கும் உறவுகளையும் அனுசரித்து செல்வீர்கள். வேலையில் பிரச்சினையாக இருக்கும் மேலதிகாரிகளையும் அனுசரணையோடு நடத்துவீர்கள். வியாபாரத்தில் இருந்து வரும் பிரச்சனைகளையும் கொஞ்சம் அனுசரித்து தான் செல்வீர்கள். பெருசாக முன்கோபம் வராது. அடுத்தவர்களுக்கு உதவியும் செய்வீர்கள். பொறுப்புணர்வு உங்களிடத்தில் கொஞ்சம் கூடுதலாக காணப்படும். செலவுகளை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை செய்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தணும். செவ்வாய்க்கிழமை துர்க்கை வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எந்த காரியமாக இருந்தாலும் அதை பிளான் செய்து செய்ய வேண்டும். முன்னேற்பாடுகள் இல்லாமல் அடாவடித்தனமாக ஒரு வேலையை செய்தால் பிரச்சனைகள் வரும். மூன்றாவது நபருடைய பேச்சுக்கு செவி சாய்க்காதீர்கள். மனக்குழப்பம் இருக்கக்கூடிய நேரத்தில் புது முடிவுகளை எடுக்க வேண்டாம். உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டாம். பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் நிதானம் தேவை. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கொஞ்சம் முன்னேற்றம் இருக்கும். நஷ்டங்கள் எல்லாம் லாபமாக மாறுவதற்கு உண்டான வாய்ப்புகளும் இருக்கிறது. கணக்கு வழக்குகளை சரி பாருங்கள். திங்கட்கிழமை ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி சிவனை வழிபட்டால் நல்லது.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெற்றி உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. நீண்ட நாள் முயற்சி செய்தும் வெற்றி காணாத விஷயங்களை இந்த வாரம் செய்ய துவங்கலாம். நல்ல முன்னேற்றம் தரும் வாரமாக இந்த வாரம் அமைந்திருக்கிறது. புதிய தொழில் துவங்குவது புது வேலை தேடுவது, புதுசாக வீடு பார்ப்பது இதுபோல விஷயங்களை இந்த வாரம் செய்யுங்கள். வீட்டிற்குள் தேவையான பொன் பொருட்களை வாங்குவதாக இருந்தாலும் வாங்கலாம். நல்லது நடக்கும். விருத்தி அடையக்கூடிய வாரம் இது. கடன் மட்டும் வாங்காதீங்க விநாயகர் வழிபாடு உங்கள் சங்கடங்களை தீர்க்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லாபம் நிறைந்த வாரமாக இருக்கும். பொங்கல் செலவுக்கு கை நிறைய பணம் வரப்போகிறது. மனது நிறைய சந்தோஷம் இருக்கிறது. குடும்பத்தில் உற்சாகம் பிறக்கும். உறவுகளிடையே நல்லிணக்கம் உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சின்ன பின்னடைவு ஏற்படலாம். தேவையற்ற நண்பர்களின் உறவை விட்டு விடுங்கள். நேர்வழியில் சென்றால் நிச்சயம் நல்லது நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தினமும் வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று உங்களால் முடிந்த பூக்களை வாங்கி கொடுத்து வழிபடலாம்.
– Advertisement –

சிம்மம்
சிம்மராசிக்காரர்கள் இந்த வாரம் நேரத்தை அனாவசியமாக வீணடிக்கக்கூடாது. பொழுதுபோக்குக்காக வெளியிடங்களில் அதிகமாக சுற்றக்கூடாது. அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். பெரியவர்களுடைய பேச்சை கேட்க வேண்டும். அடம் பிடித்து எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வியாபாரிகள் உங்களுடைய தொழிலில் அதிக அக்கறை காட்டுங்கள். பொறுப்புகள் கூடுதலாக இருக்கும் பட்சத்தில் இந்த வாரம் பிரச்சனை இருக்காது. தினமும் குலதெய்வ வழிபாடு உங்களுக்கு கை கொடுக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான வாரமாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். திறமை வெளிப்படும். நல்ல பெயர் கிடைக்கும். வேலையில் பதிவு உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. ரொம்பவும் கஷ்டப்பட்ட வேலை செய்பவர்கள் எல்லோருக்கும், அதற்கு உண்டான பலன் இந்த வாரம் கிடைக்கும். இத்தனை நாள் பாராட்டு இல்லை, ஒரு அங்கீகாரம் இல்லை, செய்த வேலைக்கு உண்டான மன திருப்தியே இல்லை என்று சோர்ந்து போன உங்களை கை தூக்கி விட நிச்சயம் இந்த வாரம் நல்ல வழி பிறக்கும். வியாபாரத்தில் சின்ன சின்ன தடைகள் வரலாம். முதலீட்டில் கவனம் செலுத்துங்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீர்கள். சனிக்கிழமை பைரவர் வழிபாடு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் துன்பங்கள் நீங்க கூடிய வாரமாக இருக்கும். வீட்டிலிருந்து வந்த குடும்ப சண்டைகள் தகராறுகள் ஒரு முடிவுக்கு வரும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தை பொறுத்தவரை ஏற்ற இறக்கத்தோடுதான் இருக்கும். கூடுதல் உழைப்பு முதலீடாக போட வேண்டும். முயற்சிக்கு ஏற்ற பலனை நிச்சயம் கடவுள் கொடுப்பான். வேலையில் சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. இன்றைய வேலையை நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது. தினமும் வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு போடுங்கள். நல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இந்த வாரம் அளவோடு பேச வேண்டும். அளவோடு அடுத்தவர்களிடம் பழக வேண்டும். அளவோடு செலவு செய்ய வேண்டும். இந்த வாரம் நீங்கள் அளவுக்கு மீறி எதை செய்தாலும். அது உங்களுக்கு திரும்பவும் பிரச்சினையை கொடுத்து விடும். வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். மனதை தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். வியாபாரத்திலோ வேலை செய்யும் இடத்திலோ உங்களை யாரேனும் பிரைன் வாஷ் செய்து குறுக்குப் பாதையில் அழைத்து சென்றால் கூட நீங்கள் நேர்வழியில் தான் செல்ல வேண்டும். கெட்டவர்களால் எதிரிகளால் உங்களுக்கு பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை தினமும் வாராகியை வழிபடுங்கள் நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் தலை நிமிர்ந்து நடக்க கூடிய வாரமாக இருக்கும். எதிரிகளிடம் மோதி வெற்றி காண்பீர்கள். மன பயம் நீங்கும். துணிச்சல் வெளிப்படும். யார் எவர் என்றெல்லாம் பார்க்க மாட்டீர்கள். மனதில் பட்டதை பட்டென்று பேசி வேலையை முடிப்பீர்கள். இதனால் நல்ல பெயரும் கிடைக்கும். நல்லதே நடக்கும். செல்வ வளத்தில் உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள். கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். முருகர் வழிபாடு மேலும் உங்களுக்கு நன்மையை செய்யும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் சுயநலத்தோடு யோசிப்பீர்கள். அடுத்தவர்கள் நலனை கவனத்தில் கொள்ள மாட்டீர்கள். இதனால் அடுத்தவர்களிடத்தில் கெட்ட பெயர் வரவும் வாய்ப்புகள் உள்ளது. உறவுகளோடு சின்ன சின்ன வாக்குவாதம் வரலாம். கணவன் மனைவிக்குள் சண்டைகள் வரலாம். எதுவாக இருந்தாலும் பொறுமையாக இருக்க வேண்டும். அவசரத்தில் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. வியாபாரத்தில் நீண்ட தூர பயணங்கள் இருக்கும் சில பல அலைச்சல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும். பார்ட்னருடன் வாக்குவாதம் வரலாம். ஜாக்கிரதையாக இருங்கள். எதுவாக இருந்தாலும் பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும். பக்கத்தில் அரச மரத்தடி பிள்ளையார் இருந்தால் அவரை மூன்று முறை சுற்றி வாருங்கள் மன அமைதி கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் உற்சாகமான வாரமாக தான் இருக்கும். குழப்பமான பிரச்சனைக்கு கூட தெளிவாக ஒரு முடிவை எடுப்பீர்கள். பொருளாதாரம் உயர்ந்து இருக்கும். தேவைக்கு ஏற்ப கையில் பணம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை லாபத்தோடு தான் செல்லும். இருந்தாலும் கணக்கு வழக்குகளை நீங்கள் ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உடன் பணிபுரிபவர்களோடு ரொம்பவும் நெருங்கி பழக வேண்டாம். அதற்காக நண்பர்களை வெட்டி வீசவும் வேண்டாம். அளவோடு பழக்கம் இருந்தால் போதும். முன்பின் தெரியாத நபரிடம் குடும்ப விஷயங்களை எல்லாம் உளறி வைக்காதீங்க. தினமும் பெருமாள் வழிபாடு உங்களுக்கு நன்மை தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்லது நடக்கக்கூடிய வாரமாக தான் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பண பிரச்சனைகள் தீரும். வரவேண்டிய இடத்தில் இருந்து பணம் கையை வந்து சேரும். பொங்கலை கொண்டாட தயாராகி விடுவீர்கள். மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். மேனேஜரோடு வாக்குவாதம் செய்யக்கூடாது. எல்லா விஷயத்திற்கும் தலையை மட்டும் ஆட்டிக்கொள்ளுங்கள். வாய் பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். உடல ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சளி தும்பல் தலைவலி வந்தால் கூட உடனடியாக மருத்துவரை அனுகுவது நல்லது. உங்களால் முடிந்தால் தினமும் நாய்களுக்கு சாப்பிட இரண்டு பாக்கெட் பிஸ்கட் வாங்கி போடுங்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top