இந்த வார ராசிபலன் 10/03/2025 முதல் 16/03/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

இந்த வார ராசிபலன் 10/03/2025 முதல் 16/03/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. முன் கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது. நிதானமாக இருந்தால் மட்டுமே உங்களுக்கான நன்மைகள் நடக்கும். இல்லை என்றால் வரப்போகும் நன்மை கூட, வந்த வழி தெரியாமல் திரும்பிப் போய்விடும். இடம் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. வேலையிலும் சரி, செய்யும் தொழிலிலும் சரி, வியாபாரத்திலும் சரி, சின்னதாக ஒரு மாற்றம் உண்டாகும். அதை நீங்கள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். வியாபாரத்தில் புதிய முதலீட்டின் போது கவனமாக இருக்க வேண்டும். அனுபவசாலிகளின் பேச்சை கேட்கவும். அடம்பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்காதிங்க. வீம்புக்காக எந்த ஒரு வேலையையும் செய்யாதீங்க. உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உடனடியாக சரி செய்யவும். தினமும் துர்க்கை அம்மனை வீட்டிலிருந்தபடியே நினைத்து வழிபாடு செய்வது நன்மை தரும்.
ரிஷபம்
ரிஷப ராசி காரர்களுக்கு இந்த வாரம் நிறைய நன்மைகள் நடக்கும். சிந்தித்து செயல்படுவீர்கள். எந்த விஷயத்திலும் அவசரப்பட மாட்டீர்கள். நீங்கள் எடுத்து வைக்கக்கூடிய ஒவ்வொரு அடியிலும் கூடுதல் கவனத்தோடு இருப்பீர்கள். குறிப்பாக பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்கு தேவையான வேலைகளை செய்வது, மனைவிக்கு எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை துவங்குவது, இதுபோன்ற வேலையில் அக்கறை காட்டுவீர்கள். வியாபாரத்தை முன்னேற்ற அயராது உழைப்பீர்கள். வேலையில் எப்படியாவது முன்னேற, நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று கூடுதல் உழைப்பை போடுவீர்கள். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த வாரம் சந்தோஷத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை. தினம்தோறும் வீட்டில் இருந்தபடியே குல தெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் நிறைந்த வாரமாக இருக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ப்ரமோஷனுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பிரமோஷன் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் மகிழ்ச்சி கூடுதலாக கிடைக்கும். நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருப்பது அல்லாமல் உங்களை சுற்றி இருப்பவர்களையும் நீங்கள் சந்தோஷமாக வைத்துக் கொள்வீர்கள். இந்த வாரம் உங்களுடன் யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் மனநிறைவோடு தான் நான் நேரத்தை நகர்த்திச் செல்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தினமும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள். கூடுதல் நல்ல பலன் கிடைக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் ரொம்பவும் அடக்கம் நிறைந்த வாரமாக இருக்கும். எவ்வளவுதான் பெயர் புகழ் அந்தஸ்து வசதி உங்களுக்கு கூடினாலும், அதை நீங்கள் வெளிக்காட்ட மாட்டீர்கள். உங்களுக்கு கீழே இருப்பவர்களை தாழ்த்தி பேச மாட்டீர்கள். எல்லோரையும் சரிசமமாக நடத்துவீர்கள். இதனாலேயே உங்களுக்கு இன்னும் நல்லது நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில், வியாபாரத்தில் நினைத்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை பளு மட்டும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். நேரத்திற்கு அந்தந்த வேலைகளை முடித்து விட்டால் பிரச்சினை இல்லை. சோம்பேறித்தனத்தை மட்டும் கொஞ்சம் தள்ளி வைத்து விடுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தினமும் சிவன் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கும். எதிரி தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனை உங்களை விட்டு நீங்கும். கடன் சுமை குறையும். நிதி நிலைமை சீராகும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வாரா கடன் வசூல் ஆகும். மன நிம்மதி அடைவீர்கள் வியாபாரத்தை விரிவு படுத்த முயற்சிகளை மேற்கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது நன்மை தரும். உடல் சூடு சம்பந்தப்பட்ட உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக முதியவர்கள் வெயில் நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம். தினமும் அம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுறுசுறுப்பான வாரமாக இருக்கப் போகின்றது. உங்களுடைய வேலைகளில் நீங்கள் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிடாமல் வாழ்க்கையை நடத்திச் செல்வீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பதன் மூலம் நிறைய நன்மைகள் வரப்போகிறது. அதில் இருக்கும் சுகத்தை தெரிந்து கொள்வீர்கள். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்பதையும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றது போல், நண்பர்களை தேர்வு செய்வீர்கள். சிலருடைய முகத்திரை கிழியும். இதுநாள் வரை சிக்கியிருந்த சிறையிலிருந்து வெளி வருவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தினமும் மாலை நேரத்தில் உங்கள் ஊரில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று பைரவரை வழிபடுங்கள் நன்மை உண்டு.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத பிரச்சனைகள் வந்து நிம்மதியை கெடுக்கக்கூடிய வாரமாக இருக்கும். உடனடியாக பயந்து விட வேண்டாம். பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் இல்லை. பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. வரக்கூடிய பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்று சிந்திக்கவும். பிரச்சனைகளை கண்டு நீங்கள் பயந்து போகக்கூடாது. தன்னம்பிக்கையை கைவிடக்கூடாது. தைரியத்தை கைவிடக்கூடாது. நியாயம் உங்கள் பக்கம் இருக்கும் போது துணிந்து போராடுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கவனமாக இருங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மூன்றாவது நபரை நம்ப வேண்டாம். தினமும் அனுமனை வழிபாடு செய்யுங்கள் நன்மையை நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் பலவிதமான சிந்தனைகள் இருக்கும். வேலை வியாபாரம் எல்லாம் நல்லபடியாக நடந்தாலும், உங்களுடைய சிந்தனையை ஒரு நிலை படுத்த முடியாது. யாரைப்பற்றியாவது சிந்திப்பீர்கள். எதைப் பற்றியாவது சிந்திப்பீர்கள். எதிர்மறையான எண்ணங்கள் எழும். கொஞ்சம் பொறாமை குணம் வெளிப்படும். இதனால் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். மனதை அலைபாய விடக்கூடாது. யோகா செய்வது மனதிற்கு பிடித்த பாடலைக் கேட்பது, இது போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டும்போது மனம் ஒருநிலைப்படும். பார்த்துக்கோங்க தினமும் சிவன் கோவிலுக்கு சென்றால் நன்மை உண்டு.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இருக்கப் போகிறது. எதிர்பாராத பண வரவு இருக்கும். எதிர்பாராத சொத்து சேர்க்க இருக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. நிலம் வீடு போன்ற சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. சுப செலவுகள் ஏற்படும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். கூடுமானவரை இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நன்மை தரும். வியாபாரத்தை பொருத்தவரை லாபமான சூழ்நிலையை நிலவும், பார்ட்னரோடு கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். தினமும் மகாலட்சுமி வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி நிலைமையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கடன் வாங்கி கஷ்டப்பட்டவர்களுக்கு எல்லாம் விமோசனம் கிடைக்கும். கடனை திருப்பிக் கொடுப்பதற்கு உங்கள் பணம், உங்கள் கையை வந்து சேரும். கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். உங்களுக்கு யாரேனும் பணம் கொடுக்காமல் இழுபறியாக இழுத்தடித்துக் கொண்டு வந்திருந்தால், அந்த பணமெல்லாம் உங்கள் கையை வந்து சேரும். மன நிம்மதி அடைவீர்கள். வீட்டில் பெண் பிள்ளைகளுக்கு மனைவிக்கு தேவையான பொன் பொருள் ஆபரண சேர்க்கையும் இருக்கிறது. வியாபாரத்தில் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும். வீட்டில் முதியவர்கள் பிள்ளைகள் இருந்தால் அவர்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். தினம் தோறும் முருகர் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். டென்ஷன் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் அலைச்சல் இருக்கும். அதற்கு ஏற்றது போல நன்மை நடந்ததா என்று கேட்டால் அதுவும் இல்லை. வேலையிலும் கொஞ்சம் பிரச்சனை, வியாபாரத்திலும் கொஞ்சம் பிரச்சனை என்று உங்களுடைய வாழ்க்கை கொஞ்சம் சிரமத்திற்குள் செல்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. உடனே கவலைப்படக்கூடாது. பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதை சிந்தித்தாலே நிச்சயம் நல்லது நடக்கும். எந்த விஷயத்திலும் அகலக்கால் வைக்காதீர்கள். உங்களுடைய பெருமைகளை நீங்களே பேசிக் கொள்ளாதீர்கள். கவனமாக இருக்க வேண்டும். தினமும் பெருமாள் வழிபாடு செய்யுங்கள். நிதி நிலைமையால் வரும் பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த வாரமாக அமையப் போகின்றது. இந்த வாரம் சுபச செலவுகள் கொஞ்சம் இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. மனைவிக்கு பிடித்த பொருட்களை வாங்கி பரிசு கொடுப்பீர்கள். பிள்ளைகளை அக்கறையோடு பார்த்துக் கொள்வீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்வீர்கள். உங்களுக்குள் வரும் நல்ல மாற்றங்கள் எதிர்காலத்திற்கு நன்மை செய்யக்கூடியதாக இருக்கும். என்றைக்கோ செய்த முதலீட்டில் இருந்து இன்று உங்களுக்கான லாபம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் செலுத்தி நல்ல பெயர் வாங்குவீர்கள். தினமும் ஐயப்பன் வழிபாடு செய்வது உங்களுக்கு நன்மையை தரும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top