
மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிம்மதியான வாரமாக இருக்கும். எடுத்த வேலைகள் எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும். அலுவலக பணியில் மட்டும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர்களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க கூடாது. உங்களுடைய வேலைகளை நீங்களே பொறுப்போடு செய்து முடிக்கவும். அலுவலகம் சம்பந்தப்பட்ட உங்கள் பொறுப்பில் இருக்கும் பொருட்களை நீங்களே பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். உணவு பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடு தேவை. வீட்டில் சுபகாரிய தடைகள் விலகும். சந்தோஷம் இரட்டிப்பாகும். மாதத்தில் ஒரு நாளாவது ஒரு வயதான ஏழைக்கு அன்னதானம் செய்யுங்கள். பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொருளாதார ரீதியாக நிறைய நல்லது நடக்கும். பிள்ளைகளுக்கு சரியான நேரத்தில் ஃபீஸ் கட்டிடுவீங்க. தேவையான பொருட்களை வாங்கிடுவீங்க. பெற்றவர்களுடைய மனது நிம்மதி அடையும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். கடன் சுமை குறையும். புதிய வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. அரசாங்க வேலைக்கு தொடர்ந்து முயற்சி செய்யலாம். நல்லது நடக்கும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டாகும். இரண்டு ஏழை குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த நோட்டு புத்தகத்தை வாங்கி தானம் கொடுங்கள். உங்களுடைய பிள்ளைகளுக்கு எளிதில் நல்லது நடக்கும். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் பலதரப்பட்ட பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். மனநிம்மதியை அடைவீர்கள். இருந்தாலும் வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் டென்ஷன் இருக்கும். நேரத்தை வீணடிக்காமல் கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருந்தால் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். இந்த வாரம் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள். தேவையற்ற பழக்கவழக்கங்கள், தேவையில்லாத நண்பர்களிடம் இருந்து கொஞ்சம் விலகி இருக்கவும். நேர்மையாக நடந்து கொண்டால் வரும் பிரச்சினைகளில் இருந்து எளிமையாக விடுபடலாம். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். தினமும் வாயில்லா ஜீவன்களுக்கு உங்களால் முடிந்த அன்னதானத்தை செய்யுங்கள் நன்மை நடக்கும்.கடகம்கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகளை குறைக்க வேண்டும். ஐயோ பாவம் என்று நினைத்து பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் இரக்கம் பார்க்காதீர்கள். எதிர்காலத்தில் உங்களுக்கு தான் பிரச்சனை வரும். மற்றபடி வேலையில் கொஞ்சம் பிரஷர் இருக்கும். இருந்தாலும், மேலதிகாரிகளுடைய பாராட்டை பெறுவீர்கள். சிரமப்பட்டாவது உங்களுக்கு கொடுத்த கடமைகளை சரியாக செய்து முடித்து விடுவீர்கள். வியாபாரத்தில் நிதானமாக இருக்க வேண்டும். புதிய முடிவுகள் எடுக்கும் போது, அனுபவசாலிகளிடம் ஒரு வார்த்தை கேட்டுக் கொள்ளவும். பள்ளிக்கூடம் திறக்கும் சமயம் ஏழை குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை நடக்கக்கூடிய வாரமாக இருக்கும். பண வரவு சீராக இருக்கும். கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். உங்களை தவறாக புரிந்து கொண்டவர்கள் எல்லாமும் சரியா புரிந்து கொள்வார்கள். எதிரிகளையும் நண்பர்களாக மாற்றிக் கொள்ளும் வித்தையை சரியாக பயன்படுத்துவீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை நல்ல முன்னேற்றம் இருக்கும். மார்க்கெட்டில் உங்களுடைய பெயர் கொடி கட்டி பறக்கும். வரும் லாபத்தில் ஏழைப் பெண் குழந்தைக்கு படிப்பிற்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் மேலும் நன்மை நடக்கும்.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் படு சுறுசுறுப்பான வாரமாக இருக்கும். ஒரு இடத்தில் நிற்பதற்கு நேரம் இருக்காது. தூங்குவதற்கு நேரம் கிடைக்காது. பிஸியாக இருக்கப் போகிறீர்கள். இதற்கு இடையில் கொஞ்சம் பண நெருக்கடி வரலாம். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் வரலாம். நிதி நிலைமை மட்டும் கொஞ்சம், ஏற்ற இறக்கத்தோடு காணப்படும். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு உழைப்பை முதலீடு போடுகிறீர்களோ, அவ்வளவு நம்மை நடக்கும். இந்த வாரத்தில் ஏதாவது ஒரு நாள் பசு மாட்டிற்கு உங்களால் முடிந்த தீவனத்தை வாங்கி தானமாக கொடுங்கள். – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் நிதானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டும். எல்லா விஷயத்திற்கும் முன்கோபம் வேண்டாம். அனுபவ சாலிகளின் பேச்சை கேட்டு நடக்க வேண்டும். மாணவர்கள் உங்கள் இஷ்டத்திற்கு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. புது இடத்திற்கு சென்றால் கொஞ்சம் அமைதியாக இருப்பது நல்லது. வேலை வியாபாரத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். நிதானத்தோடு முடிவு எடுக்க வேண்டும். தினமும் சிவன் கோவிலில் அமர்ந்து பத்து நிமிடம் மனதை அமைதியாக வைத்து தியானம் செய்யுங்கள் நல்லது நடக்கும்.விருச்சிகம்விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கும். நீண்ட நாள் பஞ்சாயத்து கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். ஒரு குறிப்பிட்ட தொகை கைக்கு வரும். சொத்து வாங்க வாய்ப்பு உள்ளது. ஆடம்பர பொருட்கள் நகை வாங்கவும் வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் பிள்ளைகளுடைய எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் சிந்தித்து வைத்திருந்த விஷயங்களை எல்லாம் நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். பள்ளிக்கூடம் செல்லும் ஏழை பிள்ளைகளுக்கு உங்கள் கையால் பேனா பென்சில் வாங்கி தானம் கொடுங்கள். நல்லது நடக்கும்.தனுசுதனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் துணிச்சலோடு செயல்படுவீர்கள். எந்த ஒரு பிரச்சினையை கண்டும் பயப்பட மாட்டீர்கள். பெரிய பெரிய பிரச்சனைகளை கூட சர்வசாதாரணமாக பேசியே சரி செய்து வடிவீர்கள். பேச்சாற்றல் திறமை வெளிப்படக்கூடிய வாரம் இது. உங்களுக்கான முன்னேற்றம் எந்த விதத்திலும் தடைபடாது. கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கமிஷன் தொழிலிலும் இந்த வாரம் நல்ல லாபம் கிடைக்கும். ஊனமுற்றவர்களுக்கு இந்த வாரம் உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள். ஒருவேளை சாப்பாடு வாங்கி கொடுத்தாலும் எதிர்பாராத நன்மைகள் நடக்கும்.மகரம்மகர ராசிக்காரர்களுக்கு குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இந்த வாரம் சின்ன சின்ன அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் இருக்கும் குழந்தைகள் பெரியவர்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உறவுகளோடு எந்த சண்டையும் வேண்டாம். பொறுமையாக நிதானதோடு நடந்து கொள்ளுங்கள். வேலையில் சுமூகமான போக்கு நிலவும். மேலதிகாரிகளுடைய ஆதரவை பெறுவீர்கள். பிரச்சனை இல்லை. வியாபாரத்தை பொருத்தவரை நிதானமாக இருக்க வேண்டும். கடனுக்கு எந்த பரிவர்த்தனையும் செய்ய வேண்டாம் பாட்னரோடு வம்பு சண்டை வேண்டாம். தினமும் அனுமன் வழிபாடு செய்யுங்கள் நன்மை நடக்கும்.கும்பம்கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுமையாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையோடு சண்டை போட வேண்டாம். வாழ்க்கை துணையிடம் பொய் சொல்ல வேண்டாம். குடும்ப விஷயத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் நீங்கள் நினைத்ததை விட நல்லபடியாக நடக்கும். குடும்ப விவகாரங்களை மூன்றாவது நபரிடம் சொல்லாதீங்க. மூன்றாவது நபரை வீட்டு பஞ்சாயத்திற்கு கூப்பிடாதீங்க. ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும். அமைதியாக இருந்தாலே குடும்ப விஷயத்தில் நல்லது நடக்கும். ஈகோ வை குறைத்துக் கொண்டால் போதும். ஏழையான வயதான தம்பதியருக்கு வஸ்திர தானம் செய்து ஒருவேளை சாப்பாடு போடுங்கள் நல்லது நடக்கும்.மீனம்மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் உங்களுடைய கடமைகளை மட்டும் செய்தால் போதும். புதுசாக எந்த ஒரு வேலையையும் துவங்க வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய முதலீடுகளை செய்யாதீர்கள். மலிவாக ஏதாவது பொருள் கிடைக்கிறதே என்று அதை வாங்கவும் ஆசைப்படாதீர்கள். பேராசை பெருநஷ்டம் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் எந்த விஷயத்திலும் பொய் சொல்லி தப்பிக்க கூடாது. பொய் சொல்லும் அளவுக்கு எந்த தவறும் செய்யாதீர்கள். ஆதரவற்ற யாசகர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் நல்லது நடக்கும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam