இந்த வார ராசிபலன் 07/04/2025 முதல் 13/04/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

இந்த வார ராசிபலன் 07/04/2025 முதல் 13/04/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல சுறுசுறுப்பு இருக்கும். உங்கள் மீது உள்ள தவறு என்ன, எதனால் தோல்விகள் வந்தது என்பதை எல்லாம் நீங்களே உணர்ந்து தவறுகளை திருத்திக் கொள்ளக் கூடிய வாரமாக இந்த வாரம் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும். தீராத குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். திங்கட்கிழமை விநாயகரை வழிபாடு செய்வது நன்மை தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அடுத்தவர்களுடைய பேச்சுகளுக்கு செவிசாய்க்க மாட்டீர்கள். வேலையில் மேலதிகாரிகளுடைய அனுசரணை கிடைக்கும். டார்கெட்டை சரியாக முடிப்பீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை கூடுதல் கவனம் தேவை. முதலீட்டின் போது கவனமாக இருக்க வேண்டும். அதிக வட்டிக்கு கடன் வாங்கக் கூடாது. உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக வெயில் நேரத்தில் வெளியே செல்லக்கூடாது. முதியவர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். செவ்வாய்க்கிழமை துர்க்கை வழிபாடு உங்களுக்கு சிறப்பான பலனை தரும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் சுயமரியாதையையும் சுய கௌரவத்தையும் அதிகமாக பார்ப்பீர்கள். யாரிடத்திலும் உங்களை நீங்கள் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். நிறைய போராட்டங்கள் வாக்குவாதங்களை கடக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை கொஞ்சம் மந்தமான சூழ்நிலையே இருக்கும். குழந்தைகளுடைய விருப்பத்திற்கு பெற்றவர்கள் இடம் கொடுக்க மாட்டீர்கள். இதனால் குடும்பத்திலும் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரும். இதற்கெல்லாம் தீர்வு என்ன. ஈகோ பார்க்க கூடாது. அனுசரணை தேவை. முன்கோபத்தை குறைப்பது நல்லது. தினமும் சிவன் கோவிலுக்கு சென்று ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி தியானம் செய்யுங்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரம் ஆக இருக்கும். வருமானம் உயரும். செலவு அதற்கு ஏற்றவாறு வரிசை கட்டி நிற்கும். இருந்தாலும் வருமானத்திற்கு ஏற்ப உங்கள் செலவை சமாளிக்க திறமையாக செயல்படுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் குடும்பத்தை திறமையாக நடத்திச் செல்வீர்கள். உங்களுக்கு அதற்கான பாராட்டும் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பேச்சாளர்களுக்கு ஆசிரியர்களுக்கு வழக்கறிஞர்களுக்கு இந்த வாரம் நிறைய நன்மை நடக்கும். நீண்ட தூர பயணத்தின் மூலம் மனதிற்கு நிம்மதி கிடைக்கும். பிள்ளைகளுடைய நலனில் கவனம் செலுத்துங்கள். தினமும் குலதெய்வ வழிபாடு நன்மை செய்யும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் சுமை குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் அடுத்தவர்களுடைய பேச்சை கண்மூடித்தனமாக நம்ப கூடாது. உங்களுடைய சிந்தனையில் தெளிவு தேவை. தொலைநோக்கு பார்வையோட செயல்பட வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. வீட்டில் இருக்கும் முதியவர்களுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். உடலுக்கு குளிர்ச்சி தரும் பொருட்களை சாப்பிடவும். எளிதில் ஜீரணம் ஆகும் பொருட்களை சாப்பிடவும். வியாழக்கிழமை விநாயகர் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகம் நிறைந்த வாரமாக இருக்கும். சுறுசுறுப்பாக உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பையும் அதிகரிப்பீர்கள். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். கடன் சுமை தீரும். சொத்து சுகம் வாங்குவதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. பொன் பொருள் சேர்க்கை உண்டு. சுப செலவுகள் வீட்டில் சந்தோஷத்தை கொண்டு வந்து சேர்க்கும். கணவன் மனைவிக்குள் கொஞ்சம் விட்டுக் கொடுத்தல் தேவை. மூன்றாவது நபரிடம் குடும்ப விஷயங்களை அதிகமாக பகிர்ந்து கொள்ள வேண்டாம். வெள்ளிக்கிழமை விநாயகரை வழிபாடு செய்யுங்கள் நன்மை நடக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் பொறுமை தேவை. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். மேல் அதிகாரிகளோடு கொஞ்சம் பணிவோடு நடந்து கொண்டால் நல்லது. வாக்குவாதம் செய்ய வேண்டாம். உங்களுடைய வேலைகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த வாரம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்காதீங்க. சிவன் கோவிலில் பைரவர் வழிபாடு செய்வது உங்களுக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி வாகை சூடக் கூடிய வாரமாக இருக்கும். நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு வெற்றி உங்கள் கையை வந்து சேரும்‌ இந்த வாரம் முழுவதும் ஜெயிப்பதற்காகவே அயராது உழைப்பீர்கள். நல்லது நடக்கக்கூடிய வாரம் தான். இருந்தாலும் புதிய எதிரிகள், புதிய பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எதிலும் கவனம் தேவை. வியாபாரத்தில் நேர்வழியில் நடக்க வேண்டும். குறுக்கு வழியில் செல்லக்கூடாது. நண்பர்களுடைய பேச்சைக் கேட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றி நேரத்தை வீணாக்காதீர்கள். பெருமாள் வழிபாடு நன்மை செய்யும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தேவையற்ற பிரச்சினைகள் தலைதூக்க வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. சரியான புரிதல் இல்லாத காரணத்தால் தான் இந்த பிரச்சனைகள் எல்லாம். நின்று நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் பிரச்சனை இல்லை. வியாபாரத்திலும் பாட்னரோடு கவனத்தோடு பேச வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.‌ வண்டி வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். அதிக வெயிலில் வெளியே செல்ல வேண்டாம். உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதிநிலைமை கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு இருக்கும். எதிர்பாராத செலவு சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர்களை பற்றி அனாவசியமாக புறம் பேசாதீர்கள். தேவையில்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம். குடும்ப விஷயங்களை பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற உறவுகளோடு தேவையற்ற நண்பர்களோடு பழகுவதை நிறுத்திக் கொள்வது நல்லது. இந்த வாரம் தெளிவாக சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். இறை வழிபாடு ஒன்றே உங்களுடைய மனதிற்கு அமைதியை தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் நிறைந்த வாரமாக இருக்கும். ஒரு முயற்சிகளை கையில் எடுத்தால், ஒரு முறையில் வெற்றி கிடைக்காது. இதனால் மன சோர்வு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள். எந்த விஷயத்திலும் நிதானத்தோடு நடந்து கொள்ளுங்கள். அவசரப்படாதீர்கள். உறவுகளை நண்பர்களை உதாசீனப்படுத்தி பேசக்கூடாது. பொறுமையாக பிரச்சனைகளை கையாண்டால், நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பெரியவர்களின் பேச்சுக்கும் அனுபவசாலிகளின் பேச்சுக்கும் கட்டாயம் செவிசாய்க்க வேண்டும். தினமும் 10 நிமிடம் கண்களை மூடி அமைதியாக தியானம் செய்யுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிறைவான வாரமாக இருக்கும். வேலையில் முழு ஈடுபாட்டுடன் நடந்து கொள்வீர்கள். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தை பொருத்தவரை புதிய முதலீடுகளை செய்யலாம். முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணங்களில் மூலம் கொஞ்சம் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அஜீரணம் கோளாறுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். தேவையற்ற சகவாசத்திலிருந்து விடுபட வேண்டும். கணவன் மனைவிக்குள் எந்த ஒரு ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது. வெளிப்படையாக இருந்தால் பிரச்சனை இல்லை. தினமும் முருகர் வழிபாடு செய்வது நன்மை தரும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top