
மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் காரியங்களை சாதிக்க கூடிய வாரமாக இருக்கும். அமைதியாக இருப்பீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். காரியத்தில் கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள். வியாபாரத்திலும் வேலையிலும் யாரும் எதிர்பார்க்காத திருப்பத்தை கொண்டு வருவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். முதியவர்கள் உங்களுடைய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் சுப செலவுகள் ஏற்படும். நண்பர்களோடு உறவுகளோடு நேரத்தை செலவு செய்வீர்கள். குடும்ப மகிழ்ச்சி இரட்டிப்பாகும். விநாயகர் வழிபாடு செய்யுங்கள் மேலும் நன்மைகள் நடக்கும்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இந்த வாரம் உயரும். தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து விடுவீர்கள். உங்கள் மீது விழுந்த வீண்பழி சுமை நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுடைய திறமை வெளிப்படும். குடும்பத்தை பொறுத்தவரை கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். வாக்குவாதம் செய்யக்கூடாது. வீட்டில் இருக்கும் பெண்கள் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து, அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். யாரிடமும் ஈகோ பார்க்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தினமும் குலதெய்வத்தை வழிபாடு செய்ய மேலும் நன்மைகள் நடக்கும். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். புதுசாக இடம் மாற்றம் தேவை, புது வீடு பார்க்க வேண்டும். புது வண்டி வாகனம், வாங்க வேண்டும் என்றால் இந்த வாரம் முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீங்கள் நினைத்தபடி எல்லா நல்லது நடக்கும். வேலையில் கொஞ்சம் உடல் அசதி இருக்கும். நேரம் கிடைக்கும் போது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். வெற்றி வாகை சூட தினமும் முருகனை கும்பிடுங்கள்.கடகம்கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் நிதி நிலைமை சீராகும். வருமானம் பெருகும். தேவைக்கு ஏற்ப கையில் பணம் இருக்கும். மன நிம்மதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். நேரத்தை அனாவசியமாக வீணடிக்க கூடாது. உறவுகளோடும் மற்ற நண்பர்களோடும் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய பர்சனல் விஷயங்களை வெளியே சொல்லாதீங்க. மற்றபடி வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்க இருக்கிறது. தினமும் ஹனுமன் வழிபாடு செய்வது நன்மையை தரும். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தைரியத்தோடு செயல்படுவீர்கள். தன்னம்பிக்கையும் தைரியமும் கூடுதலாக பிறக்கும். எதிரிகளை போட்டி போட்டு ஜெயிப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். செய்த தவறை முகத்துக்கு நேரே சொல்லும் தைரியம் வெறிப்படும். இதனாலேயே புதிய எதிரிகள் உண்டாகவும் வாய்ப்புகள் இருக்கிறது. கவனமாக இருந்து கொள்ளுங்கள். மற்ற படி இந்த வாரம் நிதிநிலைமை சீராக இருக்கும். ஆரோக்கியத்தில் மேம்பாடு உண்டு. பைரவரை கும்பிடுங்கள் எதிரி பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முயற்சிகளில் சின்ன சின்ன தோல்விகள் வந்து போகும். அதற்காக நீங்கள் துவண்டு போகக்கூடாது. மன தைரியத்தை வர வைத்துக் கொண்டு, விடாமல் போராடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். கூடுமானவரை வெளியூர் பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். புதிய முதலீடுகளை பெரிய அளவில் செய்ய வேண்டாம். முன்பின் தெரியாத மனிதர் சொல்லும் பேச்சை கேட்க வேண்டாம். நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு இந்த வாரம் நன்மையை செய்யும். – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். விருந்தாளிகளின் வருகை இருக்கும். வீட்டில் சுப காரிய பேச்சுக்கள் துவங்கும். கெட்டிமேல சத்தம் கேட்கும். சுப செலவுகளும் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன டென்ஷன் அவ்வப்போது வந்து போகும். கவனக்குறைவாக எந்த ஒரு வேலையையும் செய்யாதீங்க. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். முதலீடு செய்ய அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். தினமும் வாராகி வழிபாடு செய்வது நன்மையை தரும்.விருச்சிகம்விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் உழைப்பு உழைப்பு என்றே ஓடிவிடும். நிம்மதியாக ஓய்வு எடுக்கக்கூட 10 நிமிடம் கிடைக்காது. நிறைய அனுபவங்கள், நிறைய பிரச்சனைகள் நிறைய குழப்பங்களை தாண்டி நீங்கள் வெற்றி அடையப் போகிறீர்கள். எதற்கும் பயப்படாதீங்க. நேர்மையாக நடந்து கொண்டால் இந்த வாரம் எந்த பிரச்சனையும் வராது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மையை தரும்.தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுறுசுறுப்பான வாரமாக இருக்கும். உங்களுடைய கடமையிலிருந்து தவற மாட்டீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். வியாபாரத்திலும் வேலையிலும் சொன்ன நேரத்தில் சொன்ன வேலையை சரியாக முடித்துக் கொடுத்து, நல்ல பெயர் வாங்குவீர்கள். சமுதாயத்தில் உங்களுக்கான அந்தஸ்து உயரும். எல்லா வேலைகளுக்கும் மத்தியில் ஆரோக்கியத்தை மறந்து விடக்கூடாது. நேரத்திற்கு சாப்பிட்டு நேரத்திற்கு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு நன்மையை தரும்.மகரம்மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். வேலையை பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளி வைக்காதீங்க. அன்றாட வேலையை அன்றாடம் முடித்து விட்டால், இந்த வார இறுதி நாட்களை சந்தோஷமாக கழிக்கலாம். இல்லையென்றால் எல்லா வேலையும் வார இறுதியில் உங்கள் தலைமேல் பாரமாக விழும் வாய்ப்புகள் உள்ளது. மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ள பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளரோடு பாட்னரோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். அனுசரணை தேவை. வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலில் வழிபாடு செய்யுங்கள் மன நிம்மதி கிடைக்கும்.கும்பம்கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நினைத்த வேலைகள் எல்லாம் நினைத்தபடி நடந்து முடியும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்ற பாதையை நோக்கி பயணம் செய்வீர்கள். இறையாசீர்வாதம் முன்னோர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். மாணவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்திற்காக வெளிநாடு பயணம் செய்யலாம். நல்லதே நடக்கும். முன்கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களுடைய உணர்வுக்கு மரியாதை கொடுங்கள். கோமாதா வழிபாடு செய்வது உங்களுக்கான நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.மீனம்மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எதிர்பாராத ஒரு நன்மை நடக்கும். அது குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நடக்கலாம் அல்லது வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் நடக்கலாம். நீண்ட நாள் ஆசை நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். கொஞ்சம் அசதி காரணமாக உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். மேலும் நன்மைகள் அதிகரிக்கும். விநாயகரை நம்பி விளக்கு போடுங்கள் எந்த விஷயத்திலும் ஏமாற மாட்டீர்கள்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam