இந்த வார ராசிபலன் 08/09/2025 முதல் 14/09/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

இந்த வார ராசிபலன் 08/09/2025 முதல் 14/09/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!



மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். பல நன்மைகள் உங்களைத் தேடி வரும். நேர்மைக்கும் உழைப்புக்கும் முக்கியம் கொடுக்கும் உங்களை வீழ்த்துவதற்கு யாராலும் முடியாது. வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்த விளம்பரங்கள் செய்யலாம். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையை பொருத்தவரை நிதானத்தோடு நடந்து கொள்ளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அவ்வப்போது கொஞ்சம் வந்து போகும். பெரிசாக பிரச்சனைகள் இல்லை. தினம்தோறும் குலதெய்வ வழிபாடு செய்வது உங்களுக்கு மேலும் நன்மையை தரும்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். எந்த ஒரு வேலையை செய்வதற்கு முன்பும் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. புதிய முடிவுகள் எடுப்பதை அடுத்த வாரம் தள்ளி போடுங்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உடனடியாக கவனிக்க வேண்டும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் நீங்களே மருந்து மாத்திரை சாப்பிடாதீங்க. மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த வாரம் கூடுதல் கவனம் தேவை. வியாபாரம் வேலை எல்லா விஷயத்திலும் நிதானமும் தேவை. இந்த வாரம் ஹனுமன் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும் – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பல நன்மைகள் நடக்கும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். வாழ்க்கையே வெறுத்து போய் ஒரு இடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு கூட இந்த வாரம் மகிழ்ச்சி நிறைந்த வாரமாக அமையப் போகிறது. நீண்ட நாள் கிடப்பில் கிடந்த கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். எதிர்பாராத பண வரவு இருக்கும். சொத்து சுகம் சேர்க்கையும் இருக்கும். குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். என்ஜாய் பண்ணுவீங்க. இந்த வாரம் துர்க்கை வழிபாடு நன்மையை தரும்கடகம்கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பெரிய பெரிய போராட்டங்கள் வரும். மனக்குழப்பங்கள் வரும். பிரச்சனைகள் வரும். சண்டை சச்சரவுகள் வரும். ஆனால் இறைவனின் பரிபூரண ஆசி உங்களுக்கு இருப்பதால் எல்லா பிரச்சனையில் இருந்து நீங்கள் சுலபமாக மீண்டு வருவீர்கள். எவ்வளவு சோதனைகளை கடவுள் உங்களுக்கு கொடுத்தாலும் கடைசி நேரத்தில் கைவிடமாட்டான். கடவுளை முழுமையாக நம்புங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். நிச்சயம் இந்த வாரம் நீங்கள் வெற்றி காண்பீர்கள். இந்த வாரம் பிரச்சனைகளை கண்டு மட்டும் பயந்து ஒதுக்காமல் எதிர்த்து போராடுங்கள். இந்த வாரம் முருகனை கும்பிடுங்கள். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்லது நடக்கும் வாரமாக இருக்கும். வேலை வியாபாரத்தில் நீங்கள் நினைத்ததை விட நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். வாரா கடன் வசூலாகும். பெருசாக எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்குள் பொய் சொல்லிக்கொள்ள கூடாது. உங்கள் குடும்ப பிரச்சனைகளை வெளி ஆட்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. மூன்றாவது நபரை முழுசாக நம்பாதீங்க. நீண்ட தூர பயணங்களை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். சிவன் வழிபாடு உங்கள் வாழ்வை சிறப்பாக்கும்.கன்னிகன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். மூன்றாவது நபரை முழுசாக நம்பாதீர்கள். ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். மற்றபடி வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிரமோஷனுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருங்கள். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. இந்த வாரம் நரசிம்மர் வழிபாடு செய்யுங்கள். நன்மை நடக்கும். – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திறமைகள் வெளிப்படும் வாரமாக இருக்கப் போகிறது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். உங்களுடைய முன்னேற்றத்தோடு சேர்த்து உடன் இருப்பவர்களை வாழ்க்கையில் முன்னேற்றி விட நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். மன நிம்மதி பெறுவீர்கள். நீண்ட நாள் மனக்குழப்பங்கள் தீரும். சொந்தமாக வீடு வாங்கும் கனவு, நிலம் வாங்கும் கனவு இருந்தால், இந்த வாரம் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நல்லது நடக்கும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை வாராகி வழிபாடு உங்களுக்கு வருமானத்தை பெருக்கி தரும்.விருச்சிகம்விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வார துவக்கத்தில் சில பல பிரச்சனைகள் வரலாம். ஆனால் பிரச்சனைகளை சரி செய்ய நண்பர்களும் உறவுகளும் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். பிரச்சனைகளிலிருந்து சீக்கிரம் வெளி வருவீர்கள். இந்த வார இறுதியில் சந்தோஷமான வாழ்க்கையை துவங்குவீர்கள். சுப காரிய நிகழ்ச்சிகளை இந்த வார இறுதிக்கு தள்ளிப் போடுங்கள். அன்றாட வேலையில் எந்த பின்னடைவும் வேண்டாம். சோம்பேறித்தனம் வேண்டாம். நிச்சயம் நல்லது நடக்கும் தினமும் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கையின் தைரியமும் அதிகரிக்கும். யாராக இருந்தாலும், எந்த விஷயமாக இருந்தாலும் மனதில் பட்டதை முகத்திற்கு நேரடியாக பேசுவீர்கள். இதனால் வேலை வியாபாரத்தில் சில பல சிக்கல்களை எதிர்கொள்வீர்கள். சில பல புதிய எதிரிகள் உருவாகலாம். உங்களை விட்டு நிறைய நல்ல விஷயங்கள் கைவிட்டு போகலாம். இருப்பினும் தன்னம்பிக்கையும் தைரியமும் உங்களை காப்பாற்றி தரும். தினமும் விநாயகரை கும்பிடுங்க நல்லது நடக்கும்.மகரம்மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பெயர் புகழ் அந்தஸ்து கூறக்கூடிய நாளாக இருக்கும். யாரெல்லாம் உங்களை அவமானப்படுத்தினார்கள், அவர்கள் எல்லாம் தானாக வந்து உங்களிடம் சரண் அடைவார்கள். எதிரிகள் எல்லாம் நண்பர்களாக மாறுவார்கள். உங்களுடைய பெயர் ஓங்கி நிற்கப் போகிறது. நல்லது நடக்கப் போகிறது. கேட்காமலேயே பணம் காசு உங்களை தேடி வரும். நண்பர்கள் உறவுகள் உங்களைத் தேடி வருவார்கள். இந்த வாரத்தை என்ஜாய் பண்ணுங்க இறைவனுக்கு நன்றி சொல்லுங்க.கும்பம்கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். நிதிநிலைமை சீராகும். அடமானத்தில் வைத்திருந்த பொருட்களை திரும்பவும் மீட்டு எடுத்து விடுவீர்கள். பெரிய பெரிய வெற்றிகள் கையில் வந்து சேரும்போது, தலைகனம் எட்டிப் பார்க்கக் கூடாது. தன்னடக்கம் கட்டாயம் உங்களுக்கு இந்த வாரம் தேவை. பெரியவர்கள் சொல்பேச்சை கேளுங்கள். எதிரிகளை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். மனதை அமைதிப்படுத்த சிவநாமம் சொல்லி தியானம் செய்யுங்கள்.மீனம்மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குழப்பிலிருந்து தெளிவு பிறக்கும். ஏதாவது ஒரு விஷயத்தை சிந்தித்து, கையில் இருக்கும் நல்லதை நழுவ விட்டுக் கொண்டு வந்த உங்களுக்கு இந்த வாரம் நன்மை நடக்க போகிறது. வேலையிலும் வியாபாரத்திலும் விவேகத்தோடு நடந்து கொள்வீர்கள். உங்களுடைய திறமைகள் வெளிப்படும். சமயோஜீத புத்தியின் மூலம் பெரிய பெரிய இழப்புகளை கூட தடுத்து நிறுத்துவீர்கள். இந்த வாரம் நிறைய பாராட்டுகள் வந்து சேரும். நிதி நிலைமை சீராகும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கவனம் தேவை. உணவு கட்டுப்பாடு தேவை. அம்பாள் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top