இந்த வார ராசிபலன் 09/06/2025 முதல் 15/06/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

இந்த வார ராசிபலன் 09/06/2025 முதல் 15/06/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

Qries


மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இனிமையான வாரமாக இருக்கப் போகிறது. மனதிற்கு பிடித்த வேலைகளை விரும்பி செய்வீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். ஆனால் உறவுகளுக்குள் சின்ன சின்ன வாக்குவாதங்கள், சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதை எல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டு மனதை போட்டு குழப்பிக் கொள்ளாமல் நாட்களை நகர்த்த வேண்டும். மற்றபடி வேலை வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல மனிதர்களின் நட்பு, நிறைய நன்மைகளைக் கொடுக்கும். புதிய முயற்சிகளில் வெற்றியைக் கொடுக்கும். பௌர்ணமி நாளில் அம்மனை வழிபடுங்கள் நன்மை நடக்கும்.ரிஷபம்ரிஷப ராசி காரர்களுக்கு இந்த வாரம் நிதிநிலைமை சீர்படும். வருமானம் உயரும். லாபம் அதிகரிக்கும் வாரமாக இருக்கும். சேமிப்பை உயர்த்த முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுடைய எதிர்காலத்தை பற்றி கொஞ்சம் பெற்றவர்கள் சிந்திப்பது நல்லது. திங்கட்கிழமை விநாயகரை கும்பிடுங்கள் நல்லது நடக்கும். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகம் நிறைந்த வாரமாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய நபர்களின் சந்திப்பு புதுப்புது நன்மையை கொண்டு வந்து சேர்க்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும். வேலை வியாபாரம் எல்லாம் அமோகமாக நடந்தாலும் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிட வேண்டும். நீண்ட தூர பயணங்களை கூடுமானவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். தினமும் துர்க்கை அம்மன் வழிபாடு செய்வது மனபலத்தை அதிகரிக்க செய்யும்.கடகம்கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன அமைதி கிடைக்கும். நீண்ட நாள் கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள். ஏதோ ஒரு பாரம் தலையில் இருந்து இறங்கியது போல ஒரு பிரச்சனை, உங்களை விட்டு விலகி செல்லும். குல தெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள். வேளையிலும் வியாபாரத்திலும் கவனத்தோடு செயல்பட வேண்டும். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுங்கள். மற்றபடி இறைவனின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது. முருகன் வழிபாடு நன்மையை தரும். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கப் போகிறது. உங்களுடைய வேலைகள் எல்லாம் அந்தந்த நேரத்தில் சரியாக நடக்கும். பொறுப்போடு இருப்பீர்கள். இதுநாள் வரை சரியான வேலை இல்லாதவர்கள், சரியாக தொழில் அமையாதவர்கள் எல்லாம் கூட இந்த வாரம் முயற்சிகளை மேற்கொண்டு பாருங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். வீட்டில் சுப செலவுகள் ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை தரும். தினம் தோறும் சிவன் வழிபாடு செய்வது நல்லது.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும். சில பேருக்கு வேலை காரணமாக வெளியூர் பயணங்கள் உண்டாகும். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. வெளியூர் பயணங்கள் செய்யும் போது உடைமைகளை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். அலுவலக வேலை வியாபாரம் கொஞ்சம் பிசியான இந்த வாரத்தில், குடும்ப பிரச்சனையை மறந்து விடுவீர்கள். குடும்பத்தையும் ஒரு கண் பார்க்க வேண்டும். ஜாக்கிரதை இல்லை என்றால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வர வாய்ப்புகள் உள்ளது. குடும்பம் வேலை வியாபாரம் எல்லாவற்றையும் பேலன்ஸ் செய்ய ஆரோக்கியம் முக்கியம். நிறைய தண்ணீர் குடியுங்கள். நேரத்தை சரியாக செலவு செய்தால் நிச்சயம் இந்த வாரம் சக்சஸ் செய்யலாம். தினமும் வாராகியை கும்பிடுங்கள். – Advertisement -துலாம்துலாம் ராசி காரர்களுக்கு இந்த வாரம் தடைபட்ட நல்ல காரியங்கள் எல்லாம் நடக்கத் துவங்கக்கூடிய வாரமாக இருக்கப்போகிறது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நீண்ட நாள் முயற்சி செய்து நடக்காத நல்ல விஷயங்களை இந்த வாரத்தில் செய்யலாம். புதுசாக சொத்து  வாங்குவது, புதுசாக ஆடை ஆபரணங்கள் வாகனம் இது போன்ற பொருட்கள் வாங்கும் வேலைகளையும் இந்த வாரம் முயற்சி செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வியாபாரத்திற்கு தேவையான விளம்பரங்களை கொடுக்கலாம். நீங்கள் நினைத்தது எல்லாம் இந்த வாரம் நல்லபடியாக நடக்கும். தினமும் நரசிம்மரை கும்பிடுங்கள்.விருச்சிகம்விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் மதிப்பும் மரியாதையும் கூடும். தலை குனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உங்கள் மீது விழுந்த வீண்பழிகள் விலகும். வாழ்க்கையில் முன்னேற நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். வருமானம் பெருகும். கடன் சுமை குறையும். சமுதாயத்தில் நீங்களும் ஒரு மதிப்பு மிக்க மனிதர்களாக மாறுவீர்கள். வீட்டில் முதியவர்கள் இருந்தால் அவர்களுடைய நலனில் கொஞ்சம் அக்கறை காட்டவும். இந்த வாரம் தினம் தினம் குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள். கூடுதல் நன்மையை அடைவீர்கள்.தனுசுதனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் திறமைசாலிகளராக வலம் வரப்போகிறீர்கள். எந்த இடத்தில், என்ன வேலையை செய்தால் லாபம் அதிகமாக கிடைக்கும். யாரைப் படித்தால், இந்த காரியத்தை சாதிக்கலாம், என்ற சூட்சமத்தை எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பீர்கள். பேச்சாற்றல் வெளிப்படக்கூடிய வாரமாகவும், அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வாரமாகவும் இருக்கும். ஏதோ ஒரு வசீகரத் தோற்றம், அழகு உங்களிடத்தில் இருந்து வெளிப்படும். அது உங்களுக்கு எல்லாவற்றையும் நன்மையாக முடித்து தரும். கவலைப்பட வேண்டாம். இந்த வாரம் இறைவனுக்கு நன்றி சொல்ல மறந்துடாதீங்க. உங்கள் ஊர் கிராம தேவியை வழிபடுங்கள் நன்மை நடக்கும்.மகரம்மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுமையாக இருக்க வேண்டும். நிதானமாக பேச வேண்டும். முன்கோபடக் கூடாது. எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அவசர அவசரமாக செய்யக்கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே உங்களுடைய நாளை துவங்கி விடுங்கள். பஸ்ஸில் பயணம் செய்வது டூவீலர் ஓட்டுவது, இதுபோல ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் எல்லாருமே பொறுமையாக இருக்க வேண்டும். இந்த வண்டி போனால் பின்னால் இன்னொரு வண்டி வரும். ஆகவே அவசரப்பட வேண்டாம். பொறுமை கடலிலும் பெரிது. இதை இந்த வாரம் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஐந்து நிமிடம் ஈசனை மனதில் நினைத்து மனதை அமைதிபடைத்து தியானம் பண்ணுங்க. நன்மை நடக்கும் பொறுமையும் கிடைக்கும்.கும்பம்கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் திறமையாக செயல்பட போகிறீர்கள். உங்களிடம் ஒரு ரூபாய் கொடுத்தால் அதை 10 ரூபாயாக மாற்றிக் கொடுக்கும் திறமை இருக்கும். அதிர்ஷ்டசாலிகளாக இருப்பீர்கள். முதலீடு செய்த பணம் பத்து மடங்கு உங்கள் கைக்கு மீண்டும் திரும்பும். நீண்ட நாள் கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். நீங்கள் செய்யக்கூடிய வேலைகள் எல்லாம் அவ்வளவு அற்புதமாக நடந்து முடியும். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். பக்கத்தில் இருப்பவர்கள் உங்களை பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு நல்லது நடக்கும். கண் திருஷ்டி விழப்போகிறது. ஜாக்கிரதை. இருந்தாலும், தலைகனம் தலை தூக்கக் கூடாது. இந்த வாரம் அடக்கம் மட்டும் கொஞ்சம் அதிகமாக தேவைப்படுகிறது. தினமும் பெருமாள் வழிபாடு செய்யுங்கள் கூடுதல் நன்மையை பெறலாம்.மீனம்மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். நிறைய வேலை பளு காத்துக் கொண்டிருக்கிறது. வரிசை கட்டி வேலை நிற்கும். எந்த வேலையை முதலில் செய்வது, எந்த வேலையை பின்பு செய்வது என்று தெரியாது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட தூர பயணங்கள் உண்டாகும். கவலைப்படாதீங்க. உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற நன்மையை கடவுள் நிச்சயம் கொடுப்பான். செலவுகளை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் எந்த ஒரு விஷயத்தையும் மறைக்க வேண்டாம். குடும்ப விஷயங்களை கையாளும் போது கவனம் தேவை. பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுங்கள். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி உண்டு. தினமும் விநாயகரை வழிபாடு செய்வது, மற்றும் செவ்வாய் கிழமை ராகு கால நேரத்தில் பைரவரை வழிபடுவது தடைகளை தகர்க்கும்.

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top