
மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கூடுமானவரை செலவை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை அதிகரிக்க வேண்டும். இல்லை என்றால் மாதக் கடைசியில் பெரிய அளவில் நிதி பற்றாக்குறை வந்துவிடும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மாணவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் கவன குறைவு வேண்டாம். எதிரிகளை நண்பர்களாக மாற்றும் சூட்சம வித்தையை கற்றுக் கொள்ளுங்கள். எதற்கும் முட்டி மோதிக் கொண்டு நிற்காதீர்கள். மகாலட்சுமியை வணங்கினால் நன்மை உண்டு.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். மற்றபடி உங்களுடைய வியாபாரம், வேலையெல்லாம் நீங்கள் நினைத்ததை விட நல்லபடியாக செல்லும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் எல்லா வேலையையும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே முடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். மூன்றாவது நபர்களை முழுசாக நம்பாதீர்கள். குடும்ப விவகாரங்களை வெளி ஆட்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த வாரம் கவனமாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு அம்மன் வழிபாட்டை இந்த வாரம் மேற்கொள்ளுங்கள் நன்மை நடக்கும். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வீண் விரைய செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சொந்த பந்தங்களோடு அடிக்கடி சண்டை போடக்கூடாது. விட்டுக் கொடுத்து நடந்தால் நன்மை நடக்கும். மன நிம்மதி கிடைக்கும். வியாபாரம் நினைத்ததை விட நன்றாக செல்லும். கைநிறைய லாபம் கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன மகிழ்ச்சி இருக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். தினமும் முருகரை வழிபாடு செய்யுங்கள். நன்மை நடக்கும்.கடகம்கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். சந்தோஷமான வாரமாக இருக்கும். காதல் கைகூடும். வீட்டில் கெட்டி மேல சத்தம் கேட்கும். மனதிற்கு பிடித்த மன வாழ்க்கை அமையும். சொல்லவே வேண்டாம் வேலை, வியாபாரத்திலும் நீங்கள் படு சூட்டியாக இருப்பீர்கள். குடும்பத்தோடு வெளியூர் பயணங்கள் செய்ய வாய்ப்புகள் இருக்கிறது. தினமும் குலதெய்வத்தை நினைத்து வீட்டில் விளக்கு ஏற்றுங்கள் நன்மை நடக்கும். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் சீர்படும். கடன் சுமை குறையும். தேவையற்ற நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். மன நிம்மதியை அடைவீர்கள். புதுசாக செய்ய வேண்டிய வேலையில் ஆர்வம் காட்டுவீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வங்கி கடனுக்கு முயற்சி செய்யுங்கள். நல்லது நடக்கும். நிறைய நேரம் கைப்பேசி பார்க்காதீர்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். தினமும் சிவனை கும்பிட்டால் நன்மை உண்டு.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஒரு கலக்கலான வாரமாக இருக்கப் போகிறது. நீங்கள் ஒரு ஹீரோ போல, ஒரு ஹீரோயின் போல வளம் வருவீர்கள். நீங்கள் சென்ற இடம் எல்லாம் பெயர் புகழ் இருக்கும். உங்களை பார்க்கும் போதே ஒரு வசீகரம் இருக்கும். உங்களுடைய பேச்சில் ஒரு அழகு இருக்கும். உங்களுடைய தனித்தன்மை வெளிப்படும். எல்லா விஷயத்திலும் நீங்கள் தான் நம்பர் ஒன். கவலையே படாதீங்க. இந்த வாரம் ஜாம் ஜாம் என்று எல்லா வேலையும் நடக்கும். தினமும் பிள்ளையாரை கும்பிடுங்கள். – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு உண்டாகும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உடனே பயப்பட வேண்டாம். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து பிள்ளைகளை அனுசரித்து சென்றால் நிச்சயம் நன்மை நடக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். வேலையில் உங்களுக்கு சாதகமாக எல்லா விஷயமும் நடக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. எதிர்ப்புகள் வந்தாலும், அதை சமாளிக்கும் பக்குவம் உங்களுக்கு இருக்க வேண்டும். வியாபாரத்திலும் அனுசரணை தேவை. பெண்களுக்கு இந்த வாரம் நிச்சயம் நிதானம் தேவை. தினமும் வாராகியை கும்பிடுங்கள். கேட்டது உங்களை விட்டு விலகி நிற்கும்.விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் விருந்தாளிகளின் வருகை சுப செலவை ஏற்படுத்தும். கணவனுக்கு மனைவி மனைவிக்கு கணவன் என்று, ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிதல் இருக்கும். இத்தனை நாள் தவறாக புரிந்து கொண்ட விஷயங்களை எல்லாம் கூட, இந்த வாரம் நல்லபடியாக புரிந்து கொள்வீர்கள். உங்களுடைய அறியாமை நீங்கும். வேலையில் எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உங்களுக்கு கெடுதல் நினைப்பவர்களும் நல்லதையே நினைப்பார்கள். ஆச்சரியத்தை அடக்கி வைத்திருக்கும் இந்த வாரத்தில் பயணம் செய்ய தயாராகிக் கொள்ளுங்கள். நரசிம்மரை கும்பிடுங்கள். எதிரி தொல்லைகள் எல்லாம் விட்டு விலகி போகும்.தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கனவு நினைவாக மாறக் கூடிய வாரமாக இருக்கும். ஆமாங்க வெளிநாட்டில் வேலை வேண்டுமா. மனதிற்கு பிடித்த வேலை வேண்டுமா. முயற்சி செய்யுங்கள். வெற்றி காண்பீர்கள். பெரிய தொழில் அதிபராக சின்ன பிள்ளையார் சுழி போட, புது வேலையை ஆரம்பியுங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் நிச்சயம் இந்த வாரம் பிரம்மாண்ட வெற்றியை கொடுக்கும். எதை நினைத்தும் பயப்பட வேண்டாம். ஆனால் வெற்றியை நோக்கி பயணம் செய்யும்போது தலைகனம் வரக்கூடாது. ஜாக்கிரதை, பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கணும். டாக்குமெண்ட்டை படிக்காமல் கையெழுத்து போடாதீங்க. துர்க்கை அம்மனை கும்பிடுங்கள். நிறைய நன்மை நடக்கும்.மகரம்மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கம் நிறைந்த வாரமாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலை செய்வது போல தான் இருக்கும். ஆனால் ஒரு வேலையும் நடக்காது. வருமானம் வந்தது போல தான் இருக்கும். ஆனால் கையில் பணம் தாங்காது. என்னடா இது என்று, ஒரே சிந்தனையில் உங்களுடைய நாட்கள் நகரும். அதற்காக சோர்ந்து போகக்கூடாது. துவண்டு போகக்கூடாது. மன தைரியத்தோடு செயல்பட்டு பாருங்கள். கடவுள் உங்கள் பக்கம் இருக்கின்றான். எல்லா வேலையிலும் ஒரு பிளான், இந்த நேரத்திற்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று, மனதிற்குள் ஒரு பிளான் போடுங்க. ஒரு பேப்பரில் எழுதி வையுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். வீட்டில் இருக்கும் வாழ்க்கை துணை உங்களுக்கு சப்போர்ட்டாக இருப்பாங்க. அது பெரிய யானை பலத்தை கொடுக்கும். குடும்பத்தோடு தினமும் ஒரு வேலை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு பாருங்கள். வாழ்க்கை நல்லபடியாக மாறும்.கும்பம்கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய வேலைகளின் ஆரம்பம் அதிகமாக இருக்கும். அதாவது உங்களைத் தேடி நிறைய புது பொறுப்புகள் வந்து குவியும். வேலை செய்வதற்கு நேரம் இருக்காது. காலில் பம்பரம் கட்டிக் கொள்ள வேண்டும். சாப்பிட நேரமில்லை, தண்ணீர் குடிக்க நேரமில்லை, என்று ஓடிக்கொண்டே இருப்பீர்கள். ஒரு பக்கம் ஆரோக்கியத்திலும் ஒரு கண் வையுங்கள். இல்லையென்றால் ஓடுவதற்கு தெம்பு இருக்காது. பிள்ளைகளையும் மனைவியையும் மறந்து விடாதீர்கள். இல்லை என்றால் குடும்பத்தில் குழப்பம் வந்துவிடும். கொஞ்சம் இறைவழிபாடு செய்யவும் நேரம் ஒதுக்குங்கள். இதெல்லாம் சாத்தியமா. நீங்கள் நினைத்தால் நிச்சயம் முடியும். தினமும் அனுமனை வழிபாடு செய்யுங்கள் நன்மை நடக்கும்.மீனம்மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கூடுதல் கவனம் தேவை. வேலை செய்யக்கூடிய இடத்தில் அலட்சியமாக இருக்கக் கூடாது. குறிப்பாக கூர்மையான ஆயுதங்கள், கெமிக்கல் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள், சமையலறையில் வேலை செய்பவர்கள் கூட, கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, சின்ன சின்ன காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அதற்காக பயப்படக்கூடாது. கவனத்தோடு செயல்பட வேண்டும். வார்த்தையில் நிதானம் தேவை. அனாவசியமாக பேசுவதை குறைத்து கொண்டாலே, இந்த வாரம் நிறைய சாதிப்பீர்கள். தினமும் 10 நிமிடம் அல்லது 15 நிமிடம் மௌன விரதம் இருந்து மீனாட்சி அம்பாளை கும்பிடுங்கள் நல்லது நடக்கும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam