இந்த வார ராசிபலன் 13/01/2025 முதல் 19/01/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

இந்த வார ராசிபலன் 13/01/2025 முதல் 19/01/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் தைரியத்தோடு சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை பார்ப்பீர்கள். எதிரிகளை வீழ்த்துவீர்கள். மேலதிகாரிகளோடு பிரச்சனைகள் வரும். இருந்தாலும் மனதில் ஒரு துளி அளவும் பயம் இருக்காது. நியாயத்தின் பக்கம் நின்று போராடுவீர்கள். இறுதியில் வெற்றி உங்களுக்கு தான் கிடைக்கும். வியாபாரத்தில் கொஞ்சம் மந்தமான சூழ்நிலை ஏற்படும். பெருசாக லாபம் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு நஷ்டமும் ஏற்படாது. மாணவர்கள் இந்த வாரம் கல்வியை பொருத்தவரை உஷாராக தான் இருக்க வேண்டும். ஊர் சுற்றுவது, தேவையில்லாத நண்பர்களோடு சேர்ந்து தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடுவது இது போன்ற விஷயங்களை ஒதுக்கி வைத்து விடுங்கள். தினமும் அம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி நிலைமை கொஞ்சம் சீராகும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டு, நிம்மதி அடைவீர்கள். பெருமூச்சு விடுவீர்கள். தேவையற்ற டென்ஷன்கள் குறையும். சேமிப்பை உயர்த்த உண்டான முயற்சிகளை மேற்கொள்ளலாம். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் கண்மூடித்தனமாக நம்ப கூடாது. வியாபாரத்திலும் பாட்னர்களை முழுமையாக நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். நீங்களும் கணக்கு வழக்குகளை சரி பாருங்கள். தினம்தோறும் விநாயகர் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் காரிய வெற்றி உண்டாக கூடிய வாரமாக இருக்கும். முக்கியமான வேலைகள், முக்கியமான முடிவுகளை இந்த வாரம் எடுக்கலாம். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியை நிகழ்ச்சிகளும் மீண்டும் நடக்கும். ஒரு மன தைரியம் இருக்கும். வேலையில் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். எதிரிகளை கண்டு பயப்பட மாட்டீர்கள். உங்களுடைய பேச்சு வெளிப்படையாக இருக்கும். எந்த இடத்திலும் தலை குனிந்து நிற்கக்கூடிய சூழ்நிலை வராது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தினமும் முருகர் வழிபாடு செய்வது உங்களுக்கு நன்மையை தரும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு தேவையற்ற குழப்பங்கள் இந்த வாரத்தில் நீங்கும். செலவுகள் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் அதற்கு ஏற்ற வருமானமும், சேமிப்பும் உங்களிடத்தில் இருக்கும். சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தை விரிவு செய்யலாம். வேலை செய்யும் இடத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. அலட்சியமாக இருக்க வேண்டாம். எந்த வேலையையும் நாளைக்கு என்று தள்ளிப் போடாதீங்க. அன்றைக்கான வேலையை அன்றே முடிப்பது உங்களுக்கு நல்லது. மாணவர்கள் கல்வியில் ஆர்வத்தோடு இருப்பீர்கள். வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்று நினைத்தவர்கள், புதுசாக ஏதாவது கோர்ஸ் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களுக்கு, இந்த வாரம் நல்லது நடக்கும். சிவன் கோவிலில் இருக்கும் பைரவரை வியாழக்கிழமையும் சனிக்கிழமை வழிபாடு செய்வது நல்லது.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சோம்பேறித்தனமான வாரமாக தான் இருக்கும். எந்த வேலையும் சொன்ன நேரத்திற்கு சரியாக முடித்து தர முடியாத சூழ்நிலை உண்டாகும். இதனால் வேலையில் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை, மேல் அதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் கட்டாயம் ஏற்படும். மற்றபடி நிதிநிலைமை சீராக இருக்கும். வியாபாரம் நல்லபடியாக செல்லும். முதலீட்டில் ஆர்வம் காட்டலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். வீட்டில் இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தினமும் நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்லது செய்யக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகிறது. உங்களை பின்தொடர்ந்து வந்த பிரச்சனைகள் இந்த வாரம் படிப்படியாக குறைவதை கண்கூடாக பார்க்கலாம். நிதிநிலைமை சீராகும். பொங்கலை சந்தோஷமாக கொண்டாடி மகிழ்வீர்கள். நீண்ட நாள் பார்க்காத சொந்த பந்தங்களோடு இணைந்து இந்த பண்டிகை நாட்கள் செல்லும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். மாணவர்களுக்கும் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தினமும் ஹனுமன் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சிரமம் ஏற்படும். பண்டிகைக்கு செலவுக்கு சில பேருக்கு கையில் பணம் இருக்காது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உங்களுடைய சொந்த பிரச்சனையை மூன்றாவது நபரிடம் வெளிப்படையாக சொல்ல வேண்டாம். கூடுமானவரை அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. இருக்கும் பணத்தை வைத்து நிறைவாக பொங்கல் கொண்டாடுவது சிறப்பு. மற்றபடி வேலை தொழில் எல்லாம் நீங்கள் நினைத்தபடி நல்லபடியாக செல்லும்‌. நிதிநிலைமை சீராகும். தினமும் மகாலட்சுமிக்கு வீட்டிலிருந்தபடியே விளக்கு ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் மன நிறைவான வாரமாக இருக்கும். தேவைக்கு ஏற்ப கையில் பணம் வரும். சேமிப்பை உயர்த்துவீர்கள். அடுத்தவர்களுக்கும் உதவி செய்வீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விடுமுறை நாட்களில் கூட உங்களுடைய வேலையை நீங்கள் சரியாக பேலன்ஸ் செய்து கொள்வீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்கள் கூட இந்த வாரம் அமோகமாக லாபத்தை எடுக்கலாம். தினம் தோறும் பராசக்தி வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கம் நிறைந்த வாரமாகத் தான் இருக்கும். வாரத் துவக்கத்தில் கொஞ்சம் உடல் அசதி, வீண் விரைய செலவு சண்டை சச்சரவு என்று சென்றாலும், பண்டிகை நாட்கள் எல்லாம் முடியும் போது, இந்த வார இறுதியில் உங்களுக்கு உண்டான நல்லதை கடவுள் நிச்சயம் செய்து கொடுப்பான். பண்டிகையில் எந்த குறையும் இருக்காது அதை நிறைவாக கொண்டாடி விடுவீர்கள். இருந்தாலும் சும்மா வரவங்க போனவங்க எல்லாம் வீண் பேச்சு பேசுவாங்க. ஆகவே வார தொடக்கத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வேலை தொழில் முதலீடு எல்லாவற்றிலும் கவனம் தேவை. வெளியிடங்களில் அதிகமாக உணவு சாப்பிட வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தினம் தோறும் சிவன் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்லது நடக்கக் கூடிய வாரமாகத்தான் இருக்கும். உறவினர்கள் எல்லாம் ஒன்று கூடுவார்கள். பண்டிகை சிறப்பாக கொண்டாடுவீர்கள். ஆனால் உறவுகள் ஒன்று கூடுவதில்தான் பிரச்சனையே இருக்கிறது. அந்த இடத்தில் நீ பெரியவனா நான் பெரியவனா என்ற ஈகோ பார்க்க கூடாது. நீங்கள் பெரியவர்களாக இருந்தாலும், சிறியவர்களாக இருந்தாலும், உங்களோடு போட்டி போடும் சொந்தங்களுக்கு விட்டுக் கொடுத்து விடுங்கள். வேலையில் கொஞ்சம் கூடுதலாக உழைப்பை போட வேண்டும். வியாபாரத்தில் அக்கறை காட்ட வேண்டும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டால் மட்டுமே, வரும் பிரச்சனையிலிருந்து தப்பிக்க முடியும். தினம் தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கும். வருமானம் உயரும். குடும்பம் குழந்தைகளோடு சேர்ந்து வெளியூருக்கு பயணம் செய்யவும் வாய்ப்புகள் இருக்கிறது. அந்த பயணங்கள் இனிதே அமையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்ததைவிட நிறைய லாபத்தை அடைவீர்கள். வேலையில் சின்ன சின்ன டென்ஷன் வரலாம். மேலதிகாரிகள் உங்களை புரிந்து கொள்ளாமல் திட்டலாம். இருந்தாலும் பொறுமை காக்கவும். வேலையை விட வேண்டாம், புது வேலை கிடைப்பது குதிரை கொம்பு. வீட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு அருகம்புல் வாங்கி கொடுத்து ஒரு அர்ச்சனை செய்யுங்கள் நல்லது நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் பொறுமை தேவை. நிதி நிலைமையை சமாளிக்கவும் பொறுமை தேவை. மேலதிகாரிகளை சமாளிக்கவும் பொறுமை தேவை. வாழ்க்கை துணையை சமாளிக்கவும் பொறுமை தேவை. பொறுமையை இழந்தவர்கள் இந்த வாரம் கஷ்டப்படுவீர்கள். பொறுமையாக இருந்துவிட்டால் அனைவருடைய மனதிலும் நீங்கள் இடம் பிடித்து விடலாம். பிறகு பிரச்சனை வராது. இந்த வாரம் கோபப்பட்டால் நிச்சயம் நஷ்டம் உண்டாகும் ஜாக்கிரதை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வண்டி வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்கவும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top