இந்த வார ராசிபலன் 16/06/2025 முதல் 22/06/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

இந்த வார ராசிபலன் 16/06/2025 முதல் 22/06/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

Qries


மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய நன்மைகள் நடக்கும். புது மனிதர்களின் சந்திப்பு பெரிய அளவில் லாபத்தை கொண்டு வந்து சேர்க்கும். தெரிந்தவர்கள் மூலம் உங்கள் வாழ்க்கை உயரத்திற்கு செல்ல போகிறது. நண்பர்கள் உறவுகள் யாராக இருந்தாலும், அவர்களை அனாவசியமாக உதாசீனப்படுத்த வேண்டாம். அது மட்டும் அல்லாமல் உங்களுடைய மனதை உறுதியாக வைத்து செயல்பட வேண்டும். சின்ன சின்ன தோல்விகள் வரும்போது, அந்த இடத்தில் உங்களை நீங்களே ஊக்குவித்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். செவ்வாய் கிழமை வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு நன்மையை செய்யும்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்‌ புது வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வருமானம் பெருகும். குடும்ப சண்டைகள் ஒரு முடிவுக்கு வரும். உறவுகளோடு ஒற்றுமை ஏற்படும். வியாபாரத்தை பொருத்தவரை நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அதிரடி முடிவை எடுக்க வேண்டாம். அவசரப்பட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கடன் சுமை குறையும். தினமும் காலை 10 நிமிடம் சிவபெருமானை நினைத்து மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்யுங்கள். நன்மை நடக்கும். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திறமை தைரியம் வெளிப்படும் வாரமாக இருக்கும். எந்த ஒரு பிரச்சனையை கண்டு பயப்பட மாட்டீர்கள். யாருக்கும் பயப்பட மாட்டீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். நிலையில்லாத வேலை கூட, இந்த வாரம் நிலையாக மாறும். நிரந்தர வருமானம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தை பொருத்தவரை நல்ல முன்னேற்றம் இருக்கும். பார்ட்னர்ரோடு உங்களுடைய ஒத்துழைப்பு நிறைய நன்மைகளை செய்யும். துணிச்சலும் தைரியமும் இந்த வாரம் உங்களை வாழ்க்கையில் ஒரு படி மேலே உயர்த்தி விடப் போகிறது. தினமும் அனுமனை வழிபாடு செய்யுங்கள். மேலும் நன்மைகள் நடக்கும்.கடகம்கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மதிப்பும் மரியாதையும் உயரும். உங்களுடைய வாழ்க்கைத் தரம் உயரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் நிறைய புது விஷயங்களை அறிமுகம் செய்வீர்கள். நிறைய லாபம் எடுப்பதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக வெற்றி தரும்படி அமையும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனநிறைவோடு குடும்பத்தை நடத்தி செல்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும். வாரத்தில் ஒரு நாளாவது பிள்ளையார் கோவிலுக்கு போய் விளக்கு போடுங்க நிச்சயம் மேலும் நல்லது நடக்கும். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக்கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனையில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தை பொருத்தவரை முன்னேற்றம் வரும். லாபம் அதிகரிக்கும். இருந்தாலும் அகல கால் வைக்கக் கூடாது. பேராசைப்படக்கூடாது. வருவதை வைத்து திருப்தி அடைந்து சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள். கூடுமானவரை புது மனிதர்களுடைய நட்போடு அதிக நேரம் செலவு செய்யாதீர்கள். முன்பின் தெரியாத நபரோடு அதிகம் பழக வேண்டாம். செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மன் வழிபாடு செய்வது சிறப்பு.கன்னிகன்னி ராசிக்காரர்களுடைய வாழ்க்கையில் சில பல மாற்றங்கள் ஏற்படக்கூடிய காலகட்டம் இது. நீங்கள் இருக்கும் வேலையை விட்டு வேறு வேலை செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இடமாற்றம் ஏற்படும். தொழில் மாற்றம் ஏற்படும். மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பான்மை உங்களுக்கு இருக்க வேண்டும். பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பக்குவம் தேவைப்படுகிறது. நிதானமாக இருந்து சிந்தித்து செயல்பட்டால் பிரச்சனை இல்லை. பெரியவர்கள் பேச்சை கேட்டு நடக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்கக் கூடாது. பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். தினமும் குலதெய்வத்தை நினைத்து வீட்டிலேயே சுவாமி கும்பிடுங்கள். – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்து வந்த அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சரியாக நடக்கும். சொத்து பதிவு செய்வது, புது வண்டி வாகனம் வாங்குவது, நகை வாங்குவது இது போன்ற சுபகாரியங்கள் வீட்டில் நடக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் உங்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை பைரவருக்கு விளக்கு போடுங்கள். மேலும் நல்லது நடக்கும்.விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரம் சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் உணர்ச்சி வசப்படுவீர்கள். இதனாலேயே இந்த வாரம் முழுவதும் ஏதோ ஒரு பிரச்சனைகள் வந்து போகும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் நின்று நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். டென்ஷனை அதிகமாக்கிக் கொள்ளக்கூடாது. நேரத்தை வீணடிக்க கூடாது. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. பெரியவர்களது பேச்சை நிதானமாக காதில் வாங்கிக் கொள்ளுங்கள். அடம் பிடித்து எந்த ஒரு காரியத்தையும் சாதிக்க வேண்டாம். மன அமைதிக்காக ஏதாவது ஒரு மடத்தில், சமாதியில் அமர்ந்து தினமும் 10 நிமிடம் தியானம் செய்யுங்கள். சித்தர் வழிபாடு உங்கள் வாழ்க்கைக்கு நல்ல வழியை காட்டி தரும்.தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிறைவான வாரமாக இருக்கும். நீங்கள் நினைத்த வேலைகளை எல்லாம் அந்தந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் அதிகரிக்கும். பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை இருக்கிறது. உங்களுடைய நடவடிக்கை பெரியவர்களின் ஆசிர்வாதத்தையும், நல்ல பெயரையும் வாங்கிக் கொடுக்கும்.  குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு தான் இருக்கும். சக ஊழியர்களை அனுசரணை செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அலுவலகப் பணிகளில் விட்டுக் கொடுத்த நடப்பது நல்லது. வியாபாரத்திலும் நிதானம் தேவை யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். தினமும் முருகர் வழிபாடு செய்வது நன்மையை தரும்.மகரம்மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன தைரியம் அதிகமாக இருக்கும். எல்லா விஷயத்திலும் உடனடியாக ஒரு முடிவை எடுப்பீர்கள். சிந்திப்பதற்கு ஒரு நிமிடம் கூட நேரத்தை கொடுக்க மாட்டீர்கள். அவசர அவசரமாகவே இந்த வாரம் நகர்ந்து செல்ல போகின்றது. கவனமாக செயல்பட வேண்டும். புது எதிரிகள் உருவாக வாய்ப்புகள் இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்காது. யாருக்கும் அடங்காதவர்கள் என்ற பட்டம் வேறு கிடைக்கும். எதுவாக இருந்தாலும் இறைவனின் ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கிறது. பயப்பட வேண்டாம். எவ்வளவு துணிச்சல் இருந்தாலும் அதில் ஒரு பொறுமை தேவை. அந்த பொறுமையை இழக்காத வரை பிரச்சனை இல்லை. கவனமாக இந்த வாரம் இருந்து கொள்ளுங்கள். ரொம்பவும் கோபம் வரும் போது இஷ்ட தெய்வத்தின் பெயரைச் சொல்லி, உங்களை நீங்களே சாந்தப்படுத்திக் கொள்ளுங்கள்.கும்பம்கும்ப ராசிக்காரர்கள் வேலையில் இந்த வாரம் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். நேரத்தை வீணடிக்க கூடாது. மேலதிகாரிகளோடு பகைத்துக் கொள்ளக் கூடாது. சொன்ன நேரத்தில் எப்படியாவது சொன்ன வேலையை முடித்துக் கொடுத்து விடுங்கள். அலட்சியமாக இருக்கும் பட்சத்தில் சில பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தை பொருத்தவரையும் கூடுதல் கவனம் தேவை. முதலீட்டில் கவனம் தேவை. கணக்கு வழக்குகளை சரியாக பார்க்க வேண்டும். புது வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு சின்ன சின்ன வாக்குவாதம் சண்டை வர வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை வியாழக்கிழமை குரு பகவானை வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.மீனம்மீன ராசிக்காரர்களுக்கு நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். டென்ஷன் குறையும். எதிர்கால சேமிப்பை உயர்த்த முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை பொருத்தவரை சீரான முன்னேற்றம் இருக்கும். சீரான லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும் வீட்டில் பொன் பொருள் சேர்க்கை இருக்கும் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்வீர்கள். வியாபாரமும் வேலையும் எப்போதும் போல நல்லபடியாக செல்லும் பெருசாக பிரச்சனை இல்லை. சனிக்கிழமை நவகிரக சன்னிதானத்தில் விளக்கு போட்டு வழிபாடு செய்வது நல்லது.

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top