
– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் மனது ரொம்ப ரொம்ப தெளிவாக இருக்கும். எந்த விஷயத்தையும் போட்டு குழப்பிக் கொள்ள மாட்டீர்கள். இந்த பிரச்சனைக்கு இந்த முடிவு தான் என்பதை தெளிவாக எடுப்பீர்கள். இதனாலையே இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு பிரச்சனைகள் குறைவாக இருக்கும். இறைவனின் அருள் ஆசியும் பரிபூரணமாக இருக்கும். வியாபாரத்தில் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருங்கள். புதிய முதலீட்டில் அவசரம் தேவை கிடையாது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கமிஷன் தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். தினமும் மகாலட்சுமியை வேண்டி வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது நன்மையை தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிரச்சினைகளில் இருந்து விடுபடக்கூடிய வாரமாக இருக்கும். நீண்ட நாள் உடல் உபாதைகள் விலகும். ஆரோக்கியம் கிடைக்கும். வேலையில் டென்ஷன் குறையும். பிரச்சனை செய்து கொண்டிருந்த மேல் அதிகாரி டிரான்ஸ்ஃபர் ஆகி போயிடுவாரு. இல்லையென்றால் உங்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைத்துவிடும். இனி வேலை செய்ய எந்த தொல்லையும் இல்லை என்ற மன நிம்மதியும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முன்னேற்றம் கிடைக்கும். நீங்கள் செய்த விளம்பரத்தின் மூலம் நிறைய லாபத்தை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. வீட்டில் முதியவர்கள், பிள்ளைகள் இருந்தால் அவர்களுடைய ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். முருகர் வழிபாடு செய்யுங்கள், நல்லது நடக்கும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கும். யார் உங்களை எதிர்த்து என்ன பேசினாலும் ஒரு துளி கூட பயப்பட மாட்டீர்கள். எல்லோருக்கும் சவால் விடும் படி நடந்து கொள்வீர்கள். கவலைப்படாதீர்கள் இந்த வாரம் நல்லதே நடக்கும். தலைக்குனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நிற்கக் கூடிய வாய்ப்புகளும் அமையும். எதிரி தொல்லை நீங்கும். சில எதிரிகள் நண்பர்களாக வந்து உங்களிடமே சரணடையவும் வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரத்தில் நல்லது நடக்கும். புதிய பார்ட்னர் சேர்க்கை இருக்கும். தொழிலை விரிவுபடுத்த முயற்சிகள் செய்யலாம். தினமும் வீட்டில் விளக்கு ஏற்றும் போது குலதெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள் நல்லது நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கும். சேமிப்பை அதிகரிக்க உங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளுடைய நலனில் கவனம் செலுத்துவீர்கள். வேலையில் கூடுதல் கவனத்தோடு செயல்படுவீர்கள். வருமானத்திற்கு என்னென்ன வழி எல்லாம் இருக்கிறதோ, அதை எல்லாம் தேடி தேடி செய்வீங்க. நல்லதே நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணங்களை மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள். தேவையற்ற அலைச்சல் உடல் உபாதைகளை கொடுக்க வாய்ப்புகள் இருக்கிறது. துர்க்கை அம்மன் வழிபாடு செய்தால் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் விலகும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஒளிவு மறைவே இருக்காது. எல்லா விஷயங்களையும் வெளிப்படையாக பேசுவீர்கள். எந்த இடத்திலும் தயங்கி நிற்க மாட்டீர்கள். குறிப்பாக பேச்சுத் திறமையால் தங்களுடைய வாழ்வாதாரங்களை செய்பவர்களுக்கு இந்த வாரம் நிறைய நல்லது நடக்கும். வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், சேல்ஸ்மேன் எல்லோருக்குமே இந்த வாரம் அல்லது தான் நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற நண்பர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். அப்போதுதான் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க முடியும். மாணவர்கள் இந்த வாரம் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி நிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து வெளிவருவீர்கள். வாரா கடன் வசூல் ஆகிவிடும். உங்களுடைய பண பிரச்சனை தீரும். வீட்டில் சுப காரிய தடை விலகும். பிள்ளைகளுக்கு தேவையான பொன் பொருள் சேர்க்கையை செய்ய துவங்கி விடுவீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும். மற்றபடி வியாபாரம் தொழிலை எல்லாம் நல்லபடியாக பார்த்துக் கொள்வீர்கள். நீங்கள் நினைத்ததை விட எல்லா விஷயங்களும் நல்லபடியாக நடக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். உணவு ரீதியான விஷயங்களில் மட்டும் கட்டுப்பாடு இருக்க வேண்டும். குறிப்பாக மாணவர்கள் எளிதில் ஜீரணம் ஆகாத உணவுகளை சாப்பிட வேண்டாம். தேர்வு நேரத்தில் கவனமாக இருக்கவும். தினமும் மாரியம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் வருமானத்திற்கு ஏற்ற செலவு இருக்கும். செலவுக்கேற்ற வருமானம் கைக்கு வரும். ஆகவே நிதி நிலைமையும் பற்றி பிரச்சனை இல்லை. ஒரு ரொட்டேஷனில் குடும்பத்தை சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை புதிய முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும். பார்ட்னரோடு சண்டை போடக்கூடாது. கடனுக்கு வியாபாரம் செய்யக்கூடாது. வேலையில் மேனேஜரை எதிர்த்து பேசக்கூடாது. யாராக இருந்தாலும் கொஞ்சம் அனுசரித்து செல்ல வேண்டும். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் படிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை பிரச்சினை கிடையாது. நல்ல முன்னேற்றம் ஏற்பட உங்கள் ஊர் கிராம தேவியை வழிபாடு செய்யுங்கள். பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களை பொறுத்தவரை இந்த மாதம் செலவுகளை கொஞ்சம் குறைக்க வேண்டும். சேமிப்பை அதிகரிக்க வேண்டும். அனாவசிய பொருட்கள் வாங்குவது தவிர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த வாரம் கூடுதல் கவனம் தேவை. சம்பாதிக்கும் பெண்களுக்கும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். அலுவலகம் வேலையை பொருத்தவரை எல்லாம் நல்லபடியாக நடக்கும். பெருசாக பிரச்சனை இருக்காது. வியாபாரத்திலும் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பெருசாக டென்ஷன் எதுவும் இருக்காது. யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்தும் கொஞ்சம் போட வேண்டாம். மூன்றாவது நபரை கண் மூடி தனமாக நம்ப வேண்டாம் தினமும் விநாயகர் வழிபாடு செய்யுங்கள் நல்லது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் துணிச்சல் அதிகமாக இருக்கும். எந்த ஒரு வேலையையும் யோசித்து செய்ய மாட்டீர்கள். உடனடியாக ஒரு முடிவை எடுத்து விடுவீர்கள். எதிரிகளுக்கே உங்களை கண்டால் பயம் வரும். உங்களை பார்த்து ஏளனமாக பேசியவர்கள் எல்லாம் உங்களை பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடு செய்யலாம். தைரியம் சிறந்த ஆயுதம் என்பதை நீங்கள் நன்றாக உணரும் வாரமாக இருக்கும். வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று தினமும் வழிபாடு செய்யுங்கள். மேலும் நன்மைகள் நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டிய வாய்ப்புகள் இருக்கும். புதுப்புது நபர்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள். பெரிய மனிதர்களின் நட்பு உங்கள் வாழ்க்கைக்கு தேவையான முன்னேற்றத்தை கொடுக்கும். சோசியல் மீடியாவில் இருப்பவர்களுக்கு நல்லது நடக்கும். வியாபாரத்திலும் வேலையிலும் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கவனம் தேவை. மாணவர்களும் கல்வியில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். கணவன் மனைவிக்குள் சண்டை போடவே கூடாது. அப்படியே போட்டாலும் இரண்டு ஒரு நாளில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து விடுங்கள். வீட்டில் முதியவர்கள் இருந்தால் அவர்களுக்கு தகுந்த மரியாதையை கொடுக்க வேண்டும். தினமும் வீட்டில் இருப்பவர்களோடு ஒற்றுமையாக ஒரு வேலையாவது அமர்ந்து சாப்பிடுவது இந்த வாரம் உங்களுக்கு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் செலவுகள் அதிகரிக்கும் வாரமாக இருக்கிறது. யோசிக்காமல் நீங்கள் எடுக்கும் முடிவுகள் இந்த வாரம் எதிர்பாராத சிக்கலில் உங்களை கொண்டு போய் நிறுத்தி விடும். ஜாக்கிரதை. சேமிப்பை இரட்டிப்பாக்குங்கள். இன்றோடு எல்லாம் முடிந்து விடப் போவது கிடையாது. உறவுகளோடு பேசும்போது கவனம் தேவை. எல்லோருடைய மனசுக்கும், எல்லோருடைய கருத்திற்கும் மரியாதை கொடுக்க வேண்டும். நான் தான் பெரியவன், எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று அடம்பிடித்து எந்த ஒரு வேலையும் செய்யாதீங்க. தலையனும் கூடாது. எதிர்காலத்தில் அது உங்களுக்கு பிரச்சனையை தந்து விடும். அவசரம் கூடாது, நிதானம் தேவை. இந்த வாரம் அவ்வளவுதான். நிதானத்தை கடைபிடிப்பதற்கு உண்டான வழியை தேடுங்கள் தினமும் கண்களை மூடி தியானம் செய்வதுதான் அதற்கு ஒரே வழி.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் ஏற்றும் இறக்கம் நிறைந்த நாளாக தான் இருக்கும். தேவையற்ற பிரச்சனைகளை நீங்களே இழுத்து உங்கள் பாக்கெட்க்குள் போட்டுக் கொள்ளக் கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்கள். அதிகமாக பேசாதீர்கள். யாருக்கும் முன்கூட்டியே வாக்கு கொடுக்காதீர்கள். ஒரு விஷயத்தை செய்வதாக இருந்தால், அந்த விஷயத்தை வெற்றிகரமாக செய்து முடித்த பின்பு வெளியில் சொல்லுங்கள். ஆடம்பர செலவை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை உயர்த்த உண்டான முறைகளை மேற்கொள்ளுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் மேலதிகாரிகளுடைய தொந்தரவு கொஞ்சம் இருக்கும். அதை சமாளித்து தான் ஆக வேண்டும் வேறு வழி கிடையாது. தினமும் பைரவர் வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam